செவ்வாய், 29 ஜூலை, 2014

The Pentecostal Mission Tamil Songs_ Siluvaiyil udiram sinthineer Yesuve

THE PENTECOSTAL MISSION TAMIL SONGS 003-Ennalum suthuthikka vennum

THE PENTECOSTAL MISSION TAMIL SONGS 204-Jeevan eentharallavo

The Pentecostal Mission Tamil Song 2014_Yaesuve Um Naamam

The Pentecostal Mission Tamil Song 2014 _Yaesuvey Um alvilla kirubai

The Pentecostal Mission Chief Pas.Willson funeral Service Song

THE PENTECOSTAL MISSION TAMIL SONGS 456 Ulaga thottram munnennaiyum

The Pentecostal Mission Tamil Songs _ Siluvaiyil udiram sinthineer Yesuve

வியாழன், 3 ஜூலை, 2014

கர்த்தர் விரும்புகிற இருதயம்



தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். - (சங்கீதம் 51:17).

.
தேவன் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியார் என்பது நம் எல்லாருக்கம் தெரியும்.. அப்படி நொறுங்குதல் என்றால், நம் துன்பங்களின் நடுவில் கர்த்தரிடம் கதறுவதா? அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கி போவதா? நொறுங்குதல் என்றால் என்ன? இந்த நொறுங்குதலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல! ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரிடமிருந்து ஏற்பட்ட பிரதிபலிப்பிலிருந்து இதற்கான விடையை தெளிவாக காணலாம்.

.

என் சாட்சி வாழ்விற்கு களங்கம் கற்பிக்கப்படும் போதும், வேண்டுமென்றே என்னைக் குறித்து பொய்யாய் திரித்து பேசப்படும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, என் இயேசுவும் அவ்வாறு பொய்யாய் குற்றம் சாட்டப்படுகையில் வாய் திறவாமல் இருந்ததை நினைவு கூர்ந்தேன். அப்பொழுது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் குற்றம் சாட்டப்பட்டதை சிறிதும் நியாயப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே ஏற்றுகொண்டேன். இதுவே நொறுங்குதல்.

.

பகிரங்கமாய் என்னை உதாசீனம் செய்துவிட்டு எனக்கு முன்பாக வேறொருவரை உயர்த்தும்போது, என்விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து அவரையும் ஜனங்கள் ‘இவரை அகற்றும், பரபாசை எஙகளுக்கு விடுதலையாக்கும்’ என சத்தமிட்டதை நினைவுகூர்ந்தேன். அப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் தள்ளுண்டதை ஏற்றுக் கொளகிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்

.

தேவனோடு சீர் பொருந்தி பரிசுத்தமாய் வாழ்வதற்கு பிறரிடம் மன்னிப்பு கேட்டு இவ்வொப்புரவாகுதலின் தாழ்மை வழியை நான் நிச்சயமாய் கடந்து சென்றே ஆகவேண்டும் என்று அறிந்த போது, என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, இயேசுவும் தன்னைத்தானே வெறுமையாக்கி, சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்து தன்னைத்தானே தாழ்த்தினார் என்ற வசனத்தை நினைவு கூர்ந்தேன். இவ்வித ஒப்புவாகுதலால் பகிரங்கமாக்கப்படும் என் அவமானத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

.

ஒருவர் என்னிடம் நடந்து கொள்ளும் விதமானது இனி மன்னிக்கவே முடியாது என்ற உச்சக்கட்டத்தை எட்டும்போது மனம் வெதும்ப என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, அவர் கொடூரமாய் சிலுவையில் அறையப்பட்ட போதும் 'பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள்செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என ஜெபித்ததை நினைவு கூர்ந்தேன். அப்போது என் சிரம்தாழ்த்தி, மற்றவர்களின் எப்பேர்ப்பட்ட கொடிய செய்கைகளும் என் அன்பின் பிதாவின் அனுமதியுடனேயே சம்பவிக்கிறது என ஏற்றுக்கொண்டேன். இதுவே நொறுங்குதல்.

.

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். - (1 பேதுரு 2:21-23)

.

இதுபோன்று எல்லாவிதத்திலும் இயேசுகிறிஸ்து பாடுகளை சகித்து நமக்கு முன்மாதிரியாக நொறுக்கப்பட்டார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். - (எபிரேயர் 4:15). ஆகவே சோர்ந்து போகாதிருப்போம். நம் பிரச்சனையில் கர்த்தர் நம்முடனே இருக்கிறார். அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கும் ஒருமனம்


.
.
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். - (யோவான் 17:22).

.
இன்று நம்முடைய சபைகளில் ஊழியர்கள் மாட்டும்தான் ஊழியம்செய்யவேண்டும் நாம் விசுவாசிகள் நமக்கு ஊழியம் இல்லை நாம் அவர்கள் போதிக்ககூடிய வார்த்தைகளை கேட்பதுமாத்திரம் தான் நம்முடைய வேலை என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் . நாம் ஒவ்வொருவரையும் குறித்து நோக்கம் திட்டம் வைத்து இருக்கிறார் நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாலந்தை தந்து இருக்கிறார் . அந்த தாலந்தை நாம் சபையில் ஊழியர்களோடு சேர்ந்து கர்த்தர் தந்த தாலந்தை நாம் புரயோஜன படுத்தவேண்டும் . முதலாவது கர்த்தர் நமக்கு எப்படிப்பட்ட தாலந்தை தந்திருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும் . அதை அறிந்து கொண்டு நாம் செயல் படுவோமானால் கர்த்தர் நம்மை நடத்துவார் . இன்று நம்முடைய சபையில் ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் ஒருமனம் இல்லை தங்களோடு உள்ள சக ஊழியர்களுடன் ஒருமனம் இல்லை இப்படிஇருக்கும்பொழுது கர்த்தரிடம் இருந்து நாம் ஏதும் எதிர்பார்ப்பது கூடாதகாரியம் . கர்த்தர் முன்னாட்களில் செய்த காரியங்களை இப்பொழுது கர்த்தரால் செய்யமுடியவில்லை காரணம் ஏனென்றால் நம்மிடத்தில் ஒருமனம் இல்லை பல இலெட்சங்கள் செலவு செய்து கன்வென்சன் கூட்டம் நடத்துகிறோம் எத்தனைபேர் ஆண்டவரை ஏற்று கொண்டார்கள் எத்தனைபேர் விடுதலை சுகம் பெற்றுகொண்டார்கள் நாம் இதை தியானிக்கவேண்டும் . கர்த்தர் ஏன் தாம் செய்த வாக்குதங்களை நிறைவேற்ற முடியவில்லை நம்மிடத்தில் ஒருமனம் இல்லை இந்த ஒரேஒரு காரணம் மட்டுமே . இதை நான் சொல்லுவதினால் என்னை நீங்கள் தவறாக நினைத்துகொண்டலும் சரி அதைப்பற்றி ஒன்றும் இல்லை கர்த்தர் நினைவு படுத்தினார் . தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் தொடர்ந்து தியானிப்போம்

.

தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாலந்துகளை கொடுத்திருக்கிறார். யாரும் எனக்கு எந்த தாலந்தும் இல்லை என்று கூறவே முடியாது. ஆனால் தேவன் தங்களுக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிகள் உணர்வதில்லை. தங்களால் தேவனுக்கென்று பெரிய காரியங்களை செய்ய முடியும் என்று விசுவாசிப்பதும் இல்லை. காலம் முழுவதும் கேட்கிறவர்களாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வசனம் கேட்கும்போதுதான் விசுவாசம் பெருகும். வசனத்தை கேட்டப்பின் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்கவே வேண்டும். அப்படியே மாணவர்களை போல உட்கார்ந்து கேட்டு கொண்டே இருக்க கூடாது.

.

இஸ்ரவேலில் சவக்கடல் என்று ஒரு கடல் இருக்கிறது. அதில் அதிக உப்பேறி இருப்பதால் அதன் நீர் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இந்த கடலில் யோர்தான் நதியின் தண்ணீர் விழுகிறது. மழை நீரும் அதில் விழுகிறது. ஆனால் எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்ட கடல், ஒன்றுக்கும் பயனில்லாமல், விவசாயத்திற்கோ, உயிரினங்கள் வாழ்வதற்கோ பயனில்லாதவாறு வெறுமனே இருக்கிறது. அதுப்போல நாமும் வசனங்களை கேட்டு அதன்படி செய்யாமலோ, கர்த்தருக்காக எதையாவது செய்யாமல் போனாலோ, நாம் கேட்டு கொண்ட வசனங்களினால் யாருக்கும் பயனில்லாமல் போகும்.

.

தாலந்துகளாலும் கிருபை வரங்களாலும் நிறைந்த விசுவாசிகளும், தேவ பிள்ளைகளோடு இணைந்து சபையில் இருந்து ஊழியத்தை செய்ய வேண்டும். எனக்கு வசனம் தெரியும், தேவன் எனக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார், நான் யார் கீழ் இருந்தும் ஊழியம் செய்ய தேவையில்லை என்று போவோமானால், அது கர்த்தருக்கு வருத்தத்தையே கொடுக்கும். தேவன் சபையின் பக்திவிருத்திக்காகத்தான் ஊழியங்களை கொடுத்திருக்கிறார். 'பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்' (எபேசியர் 4:12-13) என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

.

தேவன் கொடுத்த ஊழியங்களை சபையில் இருந்து, மற்ற விசுவாசிகளோடு ஒன்றிணைந்து ஒரே தேவனுடைய பிள்ளைகளாக அவற்றை நிறைவேற்ற வேண்டும். தேவனோடு நாம் இருந்து செய்யும்போது நாம்தான் ஹீரோ, தேவன் இல்லாமல் நாம் செய்யும் எந்த காரியமும் ஜீரோதான்.

.

சபையில் சக விசுவாசிகளோடு ஐக்கியமாயிருக்க வேண்டும். ஒன்றாக இணைந்த கம்பி வடங்களே, பெரிய உறுதியான கம்பிகயிற்றுக்கு உறுதியை கொடுக்கின்றன. ஆப்படி கம்பி வடங்கள் தனித்தனியாக இருந்தால், அது ஒரு கார் போவதற்குள் அறுந்து விழுந்து விடும். அதுப்போல சபையின் விசுவாசிகளுக்குள் ஒரு மனம் மிகவும் முக்கியம். ஒரு மனம் இருக்கும் இடத்தில் ஆவியானவர் பெரிய காரியங்களை செய்வார். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபையில் ஒருமனதோடு அவர் நாமத்தை உயர்த்துவோமாக! தேவனின் நாமம் மகிமைப்படட்டும்! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

எக்காள சத்தம்



.எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். - (1கொரிந்தியர் 15:52-54).

.
பிரியமான சகோதர சகோதரிகளே இன்று நாம் நம்மில் அநேகர் பெயருக்காக பெந்தெகொஸ்தே விசுவாசியாக இருகிறோம் . நாமில் எத்தனை பேர் இரவு ஜெபம் செய்கிறோம் எத்தனை பேர் காலை ஜெபம் செய்கிறோம் எத்தனை பேர் தனி ஜெபம் செய்கிறோம் எத்தனை பேர் குடும்ப ஜெபம் செய்கிறோம் . இந்த ஜெபம் செய்கிரவார்கள் காதில் மாத்திரமே எக்காள சத்தம் தொனிக்கும்போது அது நம்முடைய காதில் தொனிக்கும் . ஜெபம் செய்தால் எப்படி தொனிக்கும் சத்தம் கேட்கும் என்று நீங்கள் நினைக்கலாம் . ஜெபம் என்றால் நம்முடைய வாஞ்சையை காட்டுகிறது . நாம் கர்த்தரிடம் கேட்கிற காரியம் கிடைக்கும் என்ற வாஞ்சை தான் நம்மை ஜெபிக்க தூண்டுகிறது. கிடைக்கும் ஏன்றதால் தான் ஜெபிகிக்கிறோம் கேட்கிறோம் . ஆம் பிரியமானவர்களே அநேக விசுவசிகளுடைய வீட்டிலும் ஜெபம் இல்லை விசுவாச வீட்டிலும் ஜெபம் இல்லை . காரணம் இன்று ஒரு தவறான போதனை நம்முடைய சபைகளில் உலாவி கொண்டு வருகிறது . எப்படி என்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து முடித்து விட்டார் ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை நீங்கள் விசுவாசித்தால் மாத்திரம் போதுமானது நீங்கள் பரலோகம் செல்லவேண்டும் நீங்கள் எப்படி இருந்தாலும் சரி எப்படி பட்ட ஜீவியம் செய்தாலும் சரி நீங்கள் விசுவாசித்தால் மாத்திரம் போதும் பரலோகம் சென்று விடலாம் ஜெபம் எல்லாம் தேவை இல்லை என்று போதித்து வருகிறார்கள்.இதற்கு உதாரணமாக விசுவாசத்தின் மூலமாக பெற்று கொண்ட சில ஆசிர்வதங்களை சொல்லுகின்றனர் . இந்த உபதேசத்தின் பெயர் கிருபையின் உபதேசமாம் இப்படி போதிக்கிற ஊழியர்களின் விசுவாச வீட்டில் ஜெபம் என்பதை பார்ப்பது கடினமாய் இருக்கிறது . நீங்கள் இப்படிப்பட்ட உபதேசத்திற்கு அடிமை பட்டு இருகிறீர்களா இதற்க்கு அடிமை பட்டு இருப்பீர்கள் ஆனால் இன்று ஒன்றை இயேசுவின் நாமத்தினால் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் . இப்படி ஜெபம் இல்லாமல் இருப்பீர்களே ஆனால் நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் கர்த்தரிடம் இருந்து நீங்கள் பெற்று கொள்ள முடியாது எக்காளம் தொனிக்கும் அப்பொழுது ஜெபத்தோடு வாஞ்சையோடு அந்த நாளுக்காக கத்திருகிரவர்கள் மாத்திரமே மருரூபமாவார்கள் ஆகவே ஜெபத்தோடு அந்த நாளுக்காக காத்திருப்போம் .
.

இதற்கு எதிர்மாறாக அநேக பரிசுத்தவான்கள் இரவிலே படுக்க போகுமுன், ‘ஆவியானவரே என்னை நான்கு மணிக்கே எழுப்பும்’ என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்கிறார்கள். எப்போது நான்கு மணியாகும்? என் நேசருடைய முகத்தை காண்பேன், மனம் திறந்து அவரிடம் பேசி உறவு கொள்வேன் என்ற ஆவலில் சரியாக நான்கு மணிக்கே எழும்பி விடுவார்கள். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

.

இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில் கூட இதே காரியம்தான் சம்பவிக்க போகிறது. யாரெல்லாம் அவருடைய வருகையிலே காணப்பட வேண்டும் என்கிற ஏக்கத்தோடும் வாஞ்சையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அந்த எக்காள சத்தத்தை கேட்ட உடன் அறிந்து கொள்வார்கள் இயேசுவின் வருகை வந்துவிட்டது என்று. இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு மத்திய ஆகாயத்திற்கு பறந்து செல்வார்கள். மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்பதும் இல்லை, அவர்கள் எதிர்கொண்டு போவதும் இல்லை.

.

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என (1தெசலோனிக்கேயர் 4: 16-17) ல் பார்க்கிறோம். அப்போது அழிவுள்ள இந்த சரீரம் அழியாமையை தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும் அல்லேலூயா! அந்த பொன்னான நாளில் நாம் மறுரூபமாக்கப்படும்படி, இப்போதே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் நம்மை காத்துக்கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்! ஆமென்!

.

பிரியமானவர்களே, நமக்கு எந்த ஒரு காரியத்தில் வாஞ்சையும் தாகமும் அதிகமாக இருக்கிறதோ, அது சம்பந்தமான விஷயங்களை கேட்க நம் இருதயம் எப்போதும் விழித்தே இருக்கும். அது போல தேவன் மேல் வாஞ்சையும் தாகமும் இருக்குமானால் அவருடைய வசனத்தை கேட்க, அவருடன் உறவு கொள்ள நம் இருதயம் ஏங்கும், எப்போது அவர் வந்தாலும் அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கும். ஆயத்தமாவோமா!
ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

சாத்தானின் தந்திரங்கள்


.

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. - (1 யோவான் 2:15).

.

இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

.
பிரியமான சகோதர சகோதரிகளே இன்று நம்முடைய விசுவாசிகளின் குடும்பங்களில் இப்படிப்பட்ட காரியங்கள் அவர்களை பாடாய்போட்டுபடுத்துகிறது எப்படி எனில் உலக காரியங்களுக்கு அடிமை பட்டு காணப்படுவதை நாம் காணமுடிகிறது கார் வாங்க வேண்டும் வீடு வாங்க வேண்டும் அது படிக்கவேண்டும் இதுபடிக்கவேண்டும் நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும் இப்படி பட்ட காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் நாம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர் . இதுவே எல்லா தீமைக்கும் வேறாய் இருக்கிறது பிரியமானவர்களே நம்முடைய பிள்ளைகள் இன்று ஆடம்பரமாக இருக்கவேண்டும் எல்லோரும் மதிக்கும் படியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் . எத்தனை பேர் நம்முடைய பிள்ளைகள் சபையில் நன்றாக ஜெபிக்க வேண்டும் பரிசுத்த ஆவிபெறவேண்டும் தீர்கதரிசனம் பேசவேண்டும் என்று வாஞ்சிகிறோம் . இன்று நம்முடைய சபைகளில் 50 வாலிபர்கள் இருக்கிறார்கள் என்றால் 2 அல்லது 3 பேர் பரிசுத்தஆவியில் நிரம்புவதை பார்ப்பதே அபூர்வமான காரியமாய் இருக்கிறது இது எல்லா சபைகளிலும் இல்லை ஒருசில சபைகளில் காண முடிகிறது இன்று நாம்முடைய பிள்ளைகள் சபைக்கு வந்து பரிசுத்தஆவியில் நிரம்புவதை வெட்கமாக நினைகிறார்கள் நான் எனது 14 வயதில் பரிசுத்தஆவியில் நிரப்பப்பட்டேன் கர்த்தர் ஈவாய் தீர்கதரிசனம் வரத்தையும் கர்த்தர் தந்தார் நான் கர்த்தரை அதிகமாய் தேட ஆரம்பித்தேன் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடினேன் அப்பொழுது கர்த்தர் ஒன்றுக்கும் உதவாத என்னை இன்று ஆசிர்வதித்து வைத்திருக்கிறார் .நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் அப்பொழுது நம்மை ஆசிர்வதிப்பார் .

.

உதாரணமாக 'அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்' (ஆதியாகமம் 3:6). அந்த கனி அவளுடைய கண்களுக்கு இன்பமாயிருந்ததாம், இச்சிக்கப்பட தக்கதாய் இருந்ததாம், அதாவது விரும்பத்தக்கதாக இருந்ததாம். அந்த பிசாசின் தந்திரத்தை அவள் நம்பி, அதை புசித்து, தன் கணவனுக்கும் கொடுத்தாள். ஆதனால் பாவமும் சாபமும் உலகத்திற்குள் நுழைந்தது.

.

நம் கண்களுக்கு எத்தனை இன்பமானதாய் இருந்தாலும், எவ்வளவுதான் இச்சிக்கப்பட தக்கதாக இருந்தாலும், அது எந்த மனிதனாகவோ, அல்லது மனுஷியாகவோ எந்த காரியமாகவோ இருந்தாலும் அதை நாம் நமக்கென்று எடுத்து கொள்வதற்கு முன் ஜாக்கிரதையாக நாம் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். உடனே அதற்கு நம்மை விட்டு கொடுத்து விடக்கூடாது. அதற்கு தேவ ஆலோசனையும், தேவ சமுகத்தில் தேவ மனிதர்கள் தருகிற ஆலோசனையோடும், வேதத்தில் தேவன் கற்று தருகிற காரியங்களையும் ஜெபத்தோடு பெற்று நம் வாழ்வில் சாத்தானின் தந்திரங்களிலிருந்து ஜெயமெடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

இலவசமான தேவனுடைய இரட்சிப்பு


.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். - (யோவான் 1:12).

.
பிரியமான சகோதர சகோதரிகளே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் விசுவாசம் உள்ளவர்களா இருக்கிறோம் . அதில் எந்தவித சந்தேகமும் இல்லை . ஆனால் நீங்கள் எத்தனை பேர் எத்தனைபேரை இந்த விசுவாசத்திற்கு நேராய் நடத்தி இருக்குறீர்கள் . தமிழ்லில் ஒரு அருமையான வார்த்தை உண்டு யான்பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற வார்த்தை தான் . ஆம் நாம் மட்டும் இந்த இன்பத்தை அதாவது கிறிஸ்து என்னும் இன்பத்தை அனுபவித்தால் போதாது நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் சுற்றத்தார் என்று எத்தனை பேருக்கு இந்த இன்பத்தை அறிமுக படுத்தி இருக்குறீர்கள் . நல்ல கைபேசி வாங்கினால் மற்றவருக்கு அறிமுகபடுத்துகிறீர்கள் நல்ல கணினி வாங்கினால் மற்றவருக்கு அறிமுகபடுத்துகிறீர்கள். இதை செய்கிற நாம் நம்முடைய தேவனை அறிமுக படுத்த மறந்து விடுகிறோம் . அழிந்து போகிற இவைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் அழியாத நம்முடைய தேவனுக்கு கொடுக்கிறோம் . உதாரணமாக முகநூல் பக்கத்தை எடுத்து கொள்ளுங்கள் நாம் எத்தனை பேர் நாம் நம்முடைய தேவனை இதின் மூலமாக மற்றவர்களுக்கு அறிமுக படுத்துகிறோம் . இதற்க்குமாறான காரியங்கள் எல்லாவற்றையும் நாம் அறிமுக படுத்துகிறோம் . இவர் என்னுடைய நாண்பன் இவர் என்னுடைய அன்பானவர் இதை நான் உபயோகபடுத்துகிறேன் . இந்த உணவு எனக்கு பிடிக்கும் இது எனக்கு பிடிக்காது என்று தேவை இல்லாத எல்லாவற்றையும் நாம் அறிமுக படுத்துகிறோம் . ஆம் பிரியமானவர்களே இன்று ஒருதீர்மானம் எடுப்போம் நான் ஒருநாள் ஒருவருக்காவது என்னுடைய தேவனை நான் அறிமுக படுத்துவேன் என்று . இதற்க்கு நீங்கள் வெட்கப்படுவீர்கள் ஆனால் தேவன் உங்களை குறித்தும் பிதாவிடம் அறிமுக படுத்த வெட்கப்படுவார். ஆம் பிரியமானவர்களே ஒரு முஸ்லிம் சகோதரரை எடுத்துகொள்ளுங்கள் அவர் தொழுகை நேரம் வரும்பொழுது அவர் அது எந்த இடம் என்று பார்பதில்லை அவர் வெட்கப்படாமல் தன்னுடைய தேவனுக்கான காரியத்தை அவர்கள் செய்கிறார்கள் நாம் நம்முடைய சபையில் பரிசுத்தஆவியால் நிரம்புவதுகே வேகப்படுகிறோம் . நம்முடைய நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .தொடர்ந்து தியானிப்போம் இப்படி சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம் .

பாவிகளாகிய நமக்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சிலுவையில் அறையப்பட்டு, இரத்தத்தை சிந்தியதால் உலகத்திற்கு இரட்சிப்பை தேவன் அளித்து விட்டார்.
.
யார் யார் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் தேவனால் இலவசமாக கொடுக்கப்படுகிறது. எத்தனை பெரிய கிருபை!
.
நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை பெற்று இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாலொழிய தேவ நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.
.
இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் வந்த எந்த மனிதனுக்கும் உரியது. 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்' (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. இப்படியிருக்க அநத நாமத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது.
.
'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' எத்தனைப்பேர் என்று ஒரு கணக்கு இல்லை. உலகத்தின் அத்தனை ஜனங்களும் ஏற்றுக் கொண்டாலும் அத்தனைப்பேரும் தேவனுடைய பிள்ளைகளாக நிச்சயமாக முடியும். ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்? இயேசுகிறிஸ்து ஒரு சாராருக்கு மட்டும்தான் வந்தார் என்று நினைத்து அவருடைய இரட்சிப்பை தள்ளிவிடுபவர்கள் எத்தனையோ கோடி கோடியான பேர்கள்! அவர் அருளும் பாவ மன்னிப்பை புறக்கணித்து தங்களுடைய வைராக்கியத்தில் வாழ்பவர்கள் கோடி கோடியானோர்!
.
அத்தனைப்பேரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக மன்றாடுவோமா? கர்த்தருடைய வசனம் சொல்லப்படும்போது அவர்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உணர்வுள்ள இருதயம் அருளும்படி ஜெபிப்போமா? இரட்சிப்பு இலவசம், ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கே!
(Anudhina Manna, A Free Daily Devotional)

தேவ சித்தம் நிறைவேற்றுவோம்


.

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். - (மத்தேயு 26:39).

.

பிரியமானவர்களே நம்மில் எத்தனை பேர் தேவ சித்தம் செய்ய ஆயத்தமாய் இருக்கிறோம் தேவசித்தம் என்பது நம்டைய பெந்தெகொஸ்தே சபையில் பெயர் அளவுக்குத்தான் அதாவது வார்த்தை மட்டும் தான் உள்ளது . தேவசித்தம் செய்யும் படியாகவே தேவன் நமக்கு இப்படிப்பட்ட மேலான உபதேச சாத்தியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் அறிந்தவர்களுக்கு அநேக அடிகள் என்பதை நாம் மறந்து விடுகிறோம் . இன்னொரு தவறான எண்ணமும் நமிடம் உள்ளது உழியர்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும் என்ற எண்ணமும் நம்மிடைய தவறாக காணப்படுகிறது . தேவசித்தம் என்பது நாம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் . ஊழியம் செய்வது மாத்திரம் அல்ல தேவசித்தம் இது ஒருபடிதான் . உன் பார்வை, செயல்,உன்னுடைய உடை , பேச்சு , இவையும் கூட தேவசிததின் படித்தான் இருக்கவேண்டும் ஆனால் இன்று நம்முடைய பிள்ளைகளை பாருங்கள் பிசாசின் சித்தம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள் அவர்களுடைய உடையை பாருங்கள் அவர்களுடைய பார்வை எல்லாமே அப்படிதான் இருக்கிறது . ஒருஉதாரணத்தை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் . சமிபத்தில் நடந்து முடிந்த மலேசியா சென்ட்டர் கன்வென்சன் நடந்து முடிந்தது . அப்பொழுது ஆராதனை முடிந்து வெளியே வந்தேன் அப்பொழுது சரியாக 15 ல் இருந்து 17 வயதுக்குள் ஒரு சகோதரனும் ஒரு 13 ல் இருந்து 15 வயதுக்குள் இருக்கும் இருவரும் பேசிகொண்டிருந்த வார்த்தையை கேட்டால் அப்படிதான் . ஐயோ எனக்கு 26 வயது ஆகிறது நான் இப்படி பட்டவார்தைகளை கேட்டதே கிடையாது . அப்படி இருவரும் தனியாக அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள் . ஆம் நீங்கள் தவறாக கருதி கொள்ளகூடாது நம்முடைய பிள்ளைகள் இன்று வழிமறி போவதை பார்த்து மனம் வருந்தி இதை சொல்லுகிறேன் . நீங்கள் உங்கள் பிள்ளைகள் சிறியவர்கள் என்று எண்ணி அவர்களை சுதந்திரமாக விடுகிறீர்கள் அவர்கள் தவறான பாதயை தெரிந்து கொள்கிறார்கள் . சிறியவயதிலே தொலைபேசி மடிகணினி டேப் இப்படி அநேக தேவனுக்கு சித்தமில்லாத பொருட்களை வாங்கி கொடுக்கிறீர்கள் இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் தவறான பாதை செல்ல நீங்களே வழிவகுகிரீர்கள் . ஒவ்வொன்றும் தேவனுக்கு சித்தமனதாக இருக்கவேண்டும் . உங்கள் காரியங்கள் ஒவ்வொன்றும் தேவனுக்கு சித்தமானதாக இருக்கவேண்டும் அதில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் . உங்கள் நண்பர்கள் , உங்கள் வேலை இப்படி எல்லாமே தேவனுக்கு சித்தமானதாக இருக்கவேண்டும் .

.
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுத்த போது, 'உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக' என்று சொல்லி கொடுத்தார். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களை விட அவருடைய ஜெபங்கள் தான் அதிகம். ஒவ்வொரு ஜெபத்திலும் தேவனுடைய சித்தம் தம்மில் நிறைவேற அவர் ஜெபித்தார். கெத்சமெனே தோட்டத்திலும் தாம் காட்டி கொடுக்கபடுவதற்கு முன் 'ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது' என்று சொல்லி தேவ சித்தத்திற்கு தம்மை ஒப்பு கொடுத்து ஜெபித்தாரல்லவா? தேவனுடைய ஒரே பேறான குமாரனாய் இருந்தாலும், தம்முடைய சித்தமோ, தம்முடைய இஷ்டத்திற்கோ இடம் கொடாமல், தேவ சித்தத்திற்கு தம்மை முற்றிலும் அவர் ஒப்புக்கொடுத்தார். தேவ சித்தத்தை நிறைவேற்றினார்.

.

தேவ குமாரனே தேவ சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார் என்றால் நாம் எத்தனை அதிகமாய் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும்? சத்துரு எப்போதும் சோதனைகளை கொண்டு வந்து நம்மை தேவ சித்தம் செய்ய முடியாதபடி எப்போதும் தடுப்பான். ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, ஜெபித்து தேவனுடைய சித்தம் என்னில் நிறைவேற வேண்டும் என்று ஜெபிக்கும்போது தேவன் அதில் நிச்சயம் மகிழுவார். அவருடைய சிறந்த சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றுவார்.

.

பிரியமானவர்களே, ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்கும்போது, 'தேவனே உம்முடைய சித்தம் மாத்திரம் என் வாழ்வில் நிறைவேறட்டும், என்னை அதற்கு ஒப்பு கொடுக்கிறேன்' என்று ஜெபித்து, நம்முடைய யோசனை எதையும் தேவனுக்கு தெரியப்படுத்தாமல் இருப்போமானால், அதுவே தேவனை மகிழ்விக்கும். அப்படியே ஜெபித்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவோமாக! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

பெரிதான இரட்சிப்பு



.
'...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்'. - (எபிரேயர் 2:4).

.
ஆம் இன்று கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற இந்த அருமையான இரட்சிப்பை குறித்து அலட்சியமாய் இருக்கிறோம் . நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம். இவ்வளவு பெரிதான இரட்சிப்பு ஏன் நமக்கு அருளப்பட்டது . வேதத்தில் தங்களுடைய இரட்சிப்பை அலட்சியமாக எண்ணி அதை இழந்து போனவர்கள் அநேகர் அதில் சிலரை நாம் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்

.
முற்பிதாவாகிய ஈசாக்கினுடைய பிள்ளைகள் ஏசா, யாக்கோபு என்ற இரட்டையர்கள். இதில் யாக்கோபிற்கு இரண்டு நிமிடம் முன்பு பிறந்து தகப்பனது சேஷ்ட புத்திர பாகத்திற்கு சொந்தகாரரானான் ஏசா. ஆனால் ஒரு கலசம் கூழுக்காக தன் தம்பியிடத்தில் அதை விற்று போடுகிறான். கனத்திற்குரிய இந்த இடத்தை அலட்சியமாக எண்ணி ஒரு செம்பு கூழுக்கு அதை இணையாக்கி விட்டான். முற்பிதாக்களின் வரிசையில் மேன்மையாக உயர்த்தப்பட வேண்டிய ஏசா எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்து நிற்கிறான். சீர் கெட்டவன் என்று வேதம் அவனை கூறுகிறது. பின்னர் அவன் ஆசீர்வாதத்தை விரும்பியும் அதை கண்டுபிடியாமற் போனான் என வேதம் கூறுகிறது.

.

அடுத்ததாக சிம்சோனை பாருங்கள், அவனுக்கு அக்காலத்தில் யாருக்கும் கிடைக்காத அபிஷேகமும் உன்னத பெலனும் இருந்தது, ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கினபோது சிங்கத்தின் வாயை கிழித்தான், 300 நரிகளை பிடித்தான், காசா நகரத்து கதவுகளை பிடுங்கி கொண்டு நடந்து போனான், கழுதை தாடை எலும்பினால் ஆயிரம் பெலிஸ்தரை முறியடித்தான். ஆனால் அந்தோ! சிம்சோன் தன் மேலிருந்த ஆவியானவரை அசட்டை செய்து வேசிகளின் பின்னால் சென்றான். கர்த்தர் தன்னை ஆள இடம் கொடாமல், இச்சைகளுக்கு தன்னை விற்று போட்டான். அபிஷேகத்தையும் நசரேய விரதத்தையும் அசட்டை பண்ணின சிம்சோனை விட்டு ஆவியானவர் விலகி சென்றார். முடிவாக பரிதாபமான நிலை, கண்கள் பிடுங்கப்படவனாக, வெண்கல விலங்கிடப்பட்டு, இரு தூண்களுக்கிடையில் பரியாச பொருளாய் மாறினான்.

.

அவன் தேவன் தனக்கு கொடுத்திருந்த அந்த பெரிய அபிஷேகத்தை அவன் அலட்சியம் பண்ணினாலும், தான் மரிக்கும் நேரத்தில் 'சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி, சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்' (நியாயாதிபதிகள் 16:28-30). தேவன் எத்தனை கிருபை மிகுந்தவர், எத்தனை இரக்கம் உள்ளவர். தம்மை நோக்கி கூப்பிடும் யாரையும் அவர் புறம்பே தள்ளாதவர். அவரை விட்டு தூரம் போனாலும் அவரை நோக்கி கூப்பிடும்போது நம் ஜெபத்தை கேட்டு பதிலளிக்கிறார்.

.

ஒருவேளை நாம் நமக்கு இலவசமாய் கிடைத்த இரட்சிப்பை அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறோமா? எத்தனையோ பேர் மாயை நம்பி தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது என நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் உங்களுக்கும் எனக்கும் இருந்த இடத்திலே எவ்வித முயற்சியுமின்றி, இலசவமாய் கிடைத்த இரட்சிப்பை மீண்டும் மீண்டும் துணிகர பாவம் செய்து அலட்சியப்படுத்தி கொண்டு இருக்கிறோமா?

.

அலட்சியப்படுத்தி, தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடி நாம் ஜாக்கிரதையாய் இருப்போம். தேவன் மன்னித்து விடுவார் என்று மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்து கொண்டிருப்போமானால், நம் முடிவு பரிதாபமாக இருக்கும். 'ஏசாவை போல ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்' (எபிரேயர் 12:16-17) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

.

தேவன் நமக்கு கொடுக்கும் இந்த கிருபையின் காலத்திலேயே அவரிடம் ஓடி வந்து விடுவோம். ஒரு நாள் வரும், தேவன் தமது கிருபையை எடுத்து விடுவார். பின் அதை தேடியும் நாம் அதை பெற்று கொள்ளமுடியாது. ஆனால் அதே சமயத்தில் தம்மை நோக்கி கூப்பிட்ட சிம்சோனை அவர் மறக்கவில்லை, அவர் அவனை மன்னித்ததுமன்றி, அதே எபிரேயரில் உள்ள விசுவாசப்பட்டியலில் அவனுடைய பெயரையும் சேர்த்து விட்டார் (எபிரேயர் 11:32). எத்தனை அற்புத தேவன் நம் தேவன்!

.

இரட்சிக்கப்பட்டும், பாவத்தின் மேல் பாவத்தை செய்து தேவன் கொடுத்த பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியமாக எடுத்து விடாதபடி தேவனை பற்றி கொள்வோம். தேவன் நம்மை மன்னித்து நம்மை ஏற்று கொள்ள வல்லவராகவே இருக்கிறார். அவர் மன்னிப்பதில் வள்ளலலானவர். மன்னிப்பதில் தயவு பெருத்தவர். நம்மை ஏற்று கொள்வார். '...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்'!
(Anudhina Manna, A Free Daily Devotional)

நம்முடைய பசிதாகம்



.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் திருப்தியடைவார்கள். - (மத்தேயு 5:6).

.
பிரியமான சகோதர சகோதரிகளே நீங்கள் உங்கள் வீட்டில் மற்றும் உங்கள் தொழில்கூடங்கலில் நீங்கள் எவ்வளவுதான் பொருட்கள் கொண்டு நிரப்பினாலும் சரி உங்களிடத்தில் நீதியாகிய கிறிஸ்துவின் மேல் ஒருபசிதாகம் இல்லாவிட்டால் அங்கு ஒரு திருப்தியான வாழ்வை வாழ முடியாது அது ஒரு பெரிய வெற்றிடமாகவே உங்கள் வாழ்வில் அது காணப்படும் . உங்களுக்கு ஒருநிறைவை பெற வேண்டும் என்கிற ஆசை விருப்பம் இருக்கிறதா . அப்படிஎன்றால் முதலாவது நீதியின் மேல் ஒரு பசிதாகம் உண்டாகட்டும் . இதற்குமாறன காரியங்களை நம்முடைய வாழ்வில் செய்யும் பொழுது ஒருநிறைவை காணமுடிவதில்லை பெந்தெகொஸ்தே விசுவாசிகளின் வீடுகளில் தேவனுக்கு அடுத்த அறியங்கள் அதிகமாய் காண முடிகிறது நம் ஒவ்வொரு காரியமும்கூட தேவ நீதியை வெளிப்படுத்தவேண்டும் நம்முடைய உடை நம்முடைய பேச்சி நம்முடைய வீடு தொழில்கூடங்கள் எல்லாமே சரி நாம் எல்லாவற்றையும் சரியாக செய்கிறோம் ஆராதனைக்கு சரியாக செல்கிறோம் உபவசிக்கிறோம் தசமபகம்கொடுகிறோம் சண்டே ஸ்கூல் படிக்கிறோம் அல்லது எடுக்கிறோம் இப்படி எல்லாம் செய்கிறோம் . இப்படி எல்லாம் செய்தும் நம்முடைய வாழ்வில் ஒரு நிறைவை காணமுடியவில்லை இதற்க்கு ஒரே ஒரு காரணம் உண்டு நாம் தேவ நிதியை நிறைவேற்ற வில்லை என்பதுதான் பொருள் .இன்னும் சில காரியங்களை தியானிப்போம் .

.
பிரியமானவர்களே, நம்முடைய தேவைக்கு அதிகமாக நம் வீட்டில் பொருட்கள் நிறைவாக இருப்பதால் நமக்கு சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அதினால் இருக்கிற பொருட்களையே மீண்டும் மீண்டும் வாங்கி வீட்டில் இடம் இல்லாமல் போகும் மட்டும் நிரப்பிக் கொண்டு இருக்கிறோம்.
.
ஆனால் நம் இருதயத்தில் இருக்கும் வெற்றிடத்தை நாம் கொண்டு வரும் பொருட்களினாலோ, நம் வீடு நிறைய இருக்கும் பொருட்களினாலோ, தின்பண்டங்களினாலோ நிரப்பவே முடியாது. அந்த இருதயத்திற்கு உண்மையான சத்துணவு வேண்டும். அது இருந்தால் மட்டுமே நாம் உண்மையாக திருப்தி அடைய முடியும்.
.
அந்த வெற்றிடத்தை நிரப்ப கர்த்தரால் மட்டுமே முடியும். அவரை சார்ந்து ஜீவிக்கிற வாழ்க்கை, வெற்றியுள்ள வாழ்வு, சந்தோஷமான குடும்ப வாழ்வு, நல்ல கிறிஸ்தவர்களிடமுள்ள ஐக்கியம் இவைகளே ஒரு மனிதனை உண்மையான சந்தோஷத்திற்குள் வழிநடத்த முடியும்.
.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! நாம் நீதியின் மேல் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருந்தால், தேவன் நம்மை தமது கிருபையினால் திருப்தியாக்குவார்.
.
பாவத்தின் மேல் பசிதாகமுள்ளவர்கள் எந்த நிலையிலும் திருப்தி அடைய மாட்டார்கள். எத்தனை முறை பாவம் செய்தாலும் அதை திரும்ப செய்ய வேண்டும் என்று அவர்கள் திரும்ப திரும்ப பாவத்தில் விழுவார்களே தவிர திருப்தி அடைய மாட்டார்கள்.
.
ஆனால் கர்த்தர் சொல்கிறார், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்று. ஆகவே நாம் பாவத்தின் மேலும், பணத்தின் மேலும், அழிந்து போகிற மாயையான காரியங்கள் மேலும் பசிதாகமுள்ளவர்களாக இல்லாமல், நீதியின் மேலும், நியாயத்தின் மேலும், கர்த்தரின் மேலும், அவருடைய கிருபையின் மேலும் பசிதாகமுள்ளவர்களாக இருப்போம். கர்த்தர் நிச்சயமாகவே நம்மை திருப்தியாக்குவார். இன்று ஒரு தீர்மானத்தை எடுங்கள் தேவநீதியை நிறைவேற்ற வாஞ்சிபேன் என்று அப்பொழுது உங்கள் வாழ்வில் ஒருநிறைவு காணப்படும் . ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

சிலுவையினால் உண்டான ஒப்புரவாகுதல்


.
'முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்' - (எபேசியர்2:13-16).

.
ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே நாம் சிலநேரம் நம்மையும் நம்முடைய சபையை குறித்தும் மேன்மைப்பராட்டுவது உண்டு . அந்த சமயங்களில் கிறிஸ்து சிலுவையில் செய்த காரியங்களை தியாகங்களை மறந்து விடுகிறோம். நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கிய அந்த சிலுவை தியாகங்களை நாம் மறந்து விடுகிறோம் கர்த்தருக்குள் நித்திரை அடைந்த அருமையான பாஸ்டர் மனோகரன் அவர்கள் அதிகமாய் சிலுவையை குறித்தே பேசுவார் அவர் சிலுவையை குறித்து பேசும்பொழுது சந்தோசத்தினால் பாடல்பாடுவதும் பரிசுத்த ஆவியினால் நிரம்புவார் .அவருக்கு ஏறக்குறைய 80 வயதுக்குமேல் இருக்கும் வியாதியின் மத்தியிலும் அவர் அந்த கல்வாரி அன்பினால் குதித்து ஆடி பாடி அந்த கல்வாரி அன்பை வெளிபடுத்துவார் .அவர் சிலுவையின் அந்த தியாகத்தை குறித்து பேசாத நாட்களே இருக்காது . ஆம் பிரியமானவர்களே நாம் இன்று என்ன எல்லாமா பேசுகிறோம் சிலுவையைகுறித்து பேச மறந்து விடுகிறோம் . சிலுவை இல்லாமல் ரெட்சிப்பு இல்லை பரலோகம் இல்லை என்பதை மறந்து விடுகிறோம் . நம்மை நாம் மாற்றிக்கொல்வோம். நம்மை சபையோ நம்முடைய தசமபகமோ ஊழியர்களோ நீங்கள் செய்த தியாகங்களோ நாம்மை பிதாவோடு ஒப்புரவாக்கவில்லை வில்லை என்று நாம் உணர்ந்து சிலுவையில் இயேசு கிறிஸ்து செய்து முடித்த தியாகங்களை நாம் தியானிப்போம் . இன்று நம்மில் அநேகர் சிலுவையை மறந்து விட்டு சபையை பிடித்து கொண்டுள்ளோம் . அப்படிப்பட்டவர்களின் நிலமை ஐயோ ஆகவே நம்மை நாமே ஆராய்ந்து பார்போம் .இதற்க்கு வேதத்தில் இருந்து சில காரியங்களை தியானிப்போம்.

'முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்' என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

.

நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும்படி இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனோடு கூட நம்மை ஒப்புரவாக்க வல்லவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே! வேறு யாரும் தேவனிடத்தில் நம்மை குறித்து பரிந்து பேசவோ, ஒப்புரவாக்கவோ முடியாது. இயேசுகிறிஸ்து புறஜாதியார் என்று அழைக்கப்பட்ட நம்மையும், தேவன் தம்முடைய சொந்த ஜனங்களாக தெரிந்து கொண்ட யூதர்களையும், பகையாக நின்ற பிரிவினையை தகர்த்து, சமாதானம் செய்தார். எப்படி சமாதானம் செய்தார் என்றால், பகையை சிலுவையினால் அவர் கொன்றார் என்று வாசிக்கிறோம். நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் தடையாக நின்றது. உதாரணத்திற்கு நாம் ஒரு பக்கம், தேவன் ஒரு பக்கம், ஒருவரை யொருவர் நெருங்காதபடிக்கு நடுவில் பெரிய பள்ளம். அப்போது சிலுவை நம் இருவருக்கும் நடுவில் ஒரு பாலமாக வைக்கப்பட்டு, நம் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இப்போது நாம் தேவனை கிட்டி சேரும்படியாக, கிறிஸ்துவின் சிலுவை நாம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடும்படியான பாலமாக நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.

.

அவர் சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினபடியால், தேவன் யூதர்களுக்கு மாத்திரம் என்ற நிலை மாறி, அவர் புறஜாதிகளுக்கும் தகப்பனாக இருக்கும்படியாக, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று. நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்னும் பெயரை பெற்று கொள்ளும்படியாக, தேவனுக்கு சொந்த ஜனமாக நம்மையும் கிறிஸ்து மாற்றினார். நம் இருவரையும் ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, பகையை சிலுவையிலே கொன்று போட்டார். சிலுவை நம்மை தேவனோடு கூட ஒப்புரவாக்கிற்று. அதனால் நாமும் அப்பா பிதாவே என்று தேவனை நோக்கி கூப்பிடும் புத்திர சுவிகாரத்தை கிறிஸ்துவால் பெற்று கொண்டோம்.

.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் இல்லாதிருந்தால், தேவன் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று மட்டும் இருந்திருப்பார். ஆனால் கிறிஸ்து நமக்கும் யூதருக்கும் இடையில் இருந்த பிரிவினையை சிலுவையினாலே மாற்றி, நம் இருவரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். எவ்வளவு பெரிய பாக்கியம் இது! கிறிஸ்து வந்திராவிட்டால், நமக்காக தமது இரத்தத்தை சிந்தியிராவிட்டால், நாம் நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்போம், நரகத்திற்கு பாத்திரவான்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி, அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவரும் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு கிருபை செய்தார். அவருடைய அன்பு எவ்வளவு பெரியது!

.

நம்மையும் தேவன் தெரிந்து கொண்டாரே, நித்திய ஜீவனுக்கு பாத்திரவான்களாக மாற்றினாரே, நரக ஆக்கினையினின்று நம் ஆத்துமாவை மீட்டெடுத்தாரே அவருக்கே நித்திய மகிமை உண்டாவதாக! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

எல்லா வேலைகளிலும் கர்த்தரை துதிப்போம்


.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். - (சங்கீதம் 51:17)

.
என்னுடைய வாழ்வில் கர்த்தர் செய்த காரியங்களை எண்ணிப்பார்த்தால் என்னுடைய சிறியவதிலே கர்த்தர் என்னுடைய வாழ்வில் பக்குவபடுத்தும் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார் உபத்திரவம் நிந்தை அவமானம் பசி இப்படி பல பாதைகளில் வழியாய் என்னை நடத்தினார் . அந்த நாட்களில் கர்த்தருடைய பாதத்தில் இருந்து நருங்குண்ட இருதயத்தோடு கண்ணீரோடு ஜெபித்த நேரங்களில் என்னை புறக்கணிக்காமல் என்னை அதிகமாய் தேற்றி அரவணைத்தார் அதிகமான கிருபைகளை எனக்கு தந்து என்னை வழிநடத்தினார் . எனக்கு வரும் சோதனைகளை பார்த்து ஊழியர்களே வருந்தி கண்ணீர் வடித்தவர்கள் உண்டு அப்படிப்பட்ட சோதனைகளிலும் கர்த்தர் என்னை புறக்கணிக்காமல் அவரை விட்டு தூரம்போன நேரங்களிலும் என்னை அவருடைய கிருபையை தந்து வழிநடத்தினார் . இன்று நாம் கர்த்தரிடம் இருந்து நான்மையை மட்டும் எதிர்பார்க்கிறோம் பக்தனாகிய யோபு சொல்லும்பொழுது கர்த்தரிடம் இருந்து நாமையை பெற்ற நாம் தீமையும் பெறவேண்டாமா என்று சொல்லுகிறார். இன்று சின்ன சின்ன சோதனைகள் வந்தாலே நம்மால் தாங்க முடியவில்லை ஜெபிபதை விட்டுவிடுகிறோம் ஆரதனைக்கு செல்லவதை விட்டுவிடுகிறோம் சிலநேரம் ஆண்டவரேயே மறுதளிக்கிறோம் . கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பது இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் எப்படி இருக்குறீர்கள் என்று தான் யோபு சோதனை காலங்களிலும் கர்த்தரை அவன் முருமுருக்கவும் இல்லை மறுதலிக்கவும் இல்லை ஆகவே முடிவில் கர்த்தர் அவனை இரண்டுமடங்காக ஆசிர்வதித்தார் . இன்று நாம் எப்படி இருகிறோம் என்று சற்று சிந்திப்போம் பிரியமானவர்களே . வேதத்தில் இருந்து சில காரியங்களை தொடர்ந்து தியானிப்போம் .

.
பிரியமானவர்களே, செழிப்பின் நேரத்தில் தேவனை மனதார துதிப்பது எளிது. ஆனால் தோல்வியில், நஷ்டத்தில், வியாதியில், கடனில், கண்ணீரில், அவர் மேல் நம்பிக்கை வைப்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மிகச் சிறந்த விதையை விதைத்து மிக சிறந்த அறுவடையை எதிர்ப்பார்க்கும் விவசாயி தன் நிலத்தை மிக நன்றாக அல்லது இன்னும் ஒரு முறை கூட உழுவான். உங்கள் இருதயம் என்னும் நிலம் உழப்பட்டு நொறுக்கப்படும் போது மட்டுமே தேவன் தமது இதய பாரத்தையும், ஏக்கத்தையும் விதைக்க முடியும். நொறுக்கப்படும் வரை இருதயமானாலும் நிலமானாலும் கடினமாகத்தான் இருக்கும். நொறுக்கப்பட்ட நிலம் தன்னிடமுள்ள தாவரத்தை புயல், மழை, வெயில் என எது வந்தாலும் அழுகிவிடாமல், காய்ந்து விடாமல், காப்பது போல நொறுக்கப்பட்ட இதயம் என்ன வந்தாலும் தேவனை நம்பும். அவரது அன்பில் சந்தேகப்படாது பொறுமையாய் அமர்ந்திருந்து இன்னும் அவரை அறிந்து கொள்ளவே முயற்சிக்கும்.

.

நொறுக்கப்பட்ட இதயத்திலிருந்து மிகவும் அருமையான பூக்களாக அருமையான கருத்துகளும், பாடல்களும் புறப்பட்டு வருவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். தங்கள் விலையேறப்பெற்ற அனுபவங்களிலிருந்து பரிசுத்தவான்கள் எழுதி வைத்த பாடல்களை நாம் இன்றும் பாடுகிறோம். அவை நாம் துன்பமான பாதைகளில் செல்லும்போது நம்முடைய இருதய புண்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது, அமையப்போகிறது.

.

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்ற வசனத்தின்படி நம்முடைய இருதயம் நொறுங்கும்போது தேவனால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர் அங்கு இறங்கி வந்து கண்ணீரை துடைத்து, தேவைகளை சந்திப்பார். வில்லயம் கேரி தான் நொறுங்குண்ட நிலையில் தேவனை நோக்கி பார்த்து, ஆறுதலை பெற்று கொண்டது போல, தான் இரவு பகலாக ஆண்டுகளாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலான போது, அவர் இருதயம் உடைந்து போகாமல், கர்த்தரையே பற்றி கொண்டு, தன்னை பலப்படுத்தி கொண்டது போல நாமும் நம் இழப்பிலும், நஷ்டததிலும், துன்பத்திலும் கர்த்தரையே சார்ந்து கொள்வோம். அவர் நம்மை திடப்படுத்தி பெலப்படுத்தி இரண்டத்தனையாக திருப்பி தருவார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

அற்பமானவர்களை தெரிந்து கொள்ளும் தேவன்



.
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - -------
(1 கொரிந்தியர் 1:28).

.
ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே கர்த்தர் தமக்காக தெரிந்து கொன்னடவைகள் எல்லாமே அற்பமானவைகள் தான் . அவர் சிறியவர்களை தெரிந்தெடுப்பதும் அவர்களை உயர்த்துவதும் அவர்கள் மேல் அதிக கவனம் உள்ளவராய் இருக்கிறார் . நம்முடைய வாழ்விலும் கர்த்தர் செய்த காரியங்களை எண்ணிப்பாருங்கள் . நாம் என்ன நிலைமையில் இருந்து வந்தோம் என்பதை பாருங்கள் . கர்த்தர் நம்மை நேசித்து வந்ததன் நோக்கம் நாம் எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் என்ற காரணத்திருகாக என்பதை நாம் மறந்து போகிறோம். இன்று கர்த்தர் கொடுத்திருக்குற இந்த வாழ்க்கை கர்த்தர் தந்த ஈவு . நம்மை கர்த்தர் சிறுமை பட்டவன் தள்ளப்படவன் என்று எண்ணி இந்த வாழ்வை தந்தார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் .இன்றும் தங்களை நேசிக்க ஒருவரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு இருக்கிற அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் மறந்து போக்க வேண்டம். அவர் உங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார் உங்களை உயர்த்துவார் . வேலை இல்லை என்னை யாரும் குடும்பத்தில் உள்ளவர்கள்கூட என்னை வெறுக்கிறார்கள் என்று மனம் உடைந்து வேதனை பட்டுக்கொண்டு இருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே கர்த்தர் உன்னை ஆசிர் வாதிக்க போகிறார் அவர் உன்மேல் கண்நோகமாய் இருக்கிறார் . நான் வியாதியில் இருக்கிறேன் என்னை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு இருக்கிற கர்த்தருடைய பிள்ளையே கர்த்தர் உன்னுடைய வியாதியை மாற்றி இன்று உன்னை ஆசிர்வதிக்க போகிறார் . அநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் திருமண காரியங்களை நினைத்து கவலை பட்டுகொண்டு இருக்குறீர்கள் எல்லாவற்றயும் கர்த்தர் காண்கிறார் . கர்த்தர் உங்களுடைய பிள்ளைகளின் காரியங்களை பொறுப்பெடுத்து இருக்கிறார். ஆகவே எல்லா காரியங்களிலும் மற்றவர்கள் போலில்லாமல் நான் ஒதுக்கப்பட்டு இருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு இருக்கிற சகோதரனே சகோதரியே கர்த்தர் எல்லாவிதத்திலும் நாம்மை ஆசிவதிக்கபோகிறார் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள் . இதற்க்கு வேதத்தில் இருந்து சில உதாரணகளைபார்போம் .
.
இந்த உலகத்தாரின் பார்வையில் அற்பமயாய் எண்ணப்படுபவர்கள் யாரோ, அவர்களை தூசியிலிருந்தும், குப்பையிலுமிருந்து எடுத்து அவர்ளை உயர்த்துவது தேவனுடைய உன்னத திட்டமாகும். காரணம் ஞானிகளும், பலமுள்ளவர்களும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படி செய்தார் (1 கொரிந்தியர் 1:26-31) என்றுவேதம் கூறுகிறது. உலகம் ஞானமுள்ளவர்களை, கல்விமான்களை, பெலமுள்ளவர்களை, திறமையானவர்களை, அழகானவர்களை தெரிந்தெடுத்து பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது. இது உலகத்தின் தெரிந்தெடுப்பு.
.
ஆனால் ஞான சொரூபியான தேவனின் தெரிந்தெடுப்பு வித்தியாசமானது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியங்களையும், பலவீனமானவர்களையும், இழிவானவர்களையும், அற்பமாய் எண்ணப்படுகிறவர்களையும் அவர் தெரிந்தெடுக்கிறார். ஒருவனை தெரிந்தெடுக்க அவர் பார்க்கும் தகுதியை பாருங்கள், எல்லாராலும் தள்ளப்பட்ட ஆட்டிடையனான தாவீதை முழு இஸ்ரவேலுக்கு ராஜாவாக தெரிந்தெடுத்தார். திக்கு வாயை உடைய மோசேயை முழு இஸ்ரவேலையும் அடிமைத்தன எகிப்திலிருந்து விடுதலையாக்க தெரிந்து கொண்டார். மீதியானவர்களுக்கு பயந்து ஆலைக்கு சமீபமாய் போரடித்துக் கொண்டிருந்த கிதியோனை பராக்கிரமசாலியே என்று அழைத்து, இஸ்ரவேலை அதன் எதிரிகளிடமிருந்து இரட்சித்தார். தேவன் தகுதியுள்ளவர்களை அல்ல, தகுதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றி, தமக்கு என்று உபயோகிக்கிறார். அல்லேலூயா!
.
பிரியமானவர்களே, கூச்சக்கண் உள்ளவளாயிருந்த லேயாள் கணவரால், குடும்பத்தால் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்பதை தேவன் கண்டு, ராகேலின் கர்ப்பத்தை அடைத்து, லேயாளுக்கு பிள்ளைப் பேற்றை கொடுத்தார். நீங்கள் உலகத்தால் அற்பமாய் எண்ணப்படுகிறீர்களோ? யாரும் என்னை சட்டை செய்வதில்லை என்று நினைக்கின்றீர்களோ? நான் எங்கோ ஒரு மூலையில், பூமியின் கடையாந்தரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், யார் என்னை அறிவார் என்று நினைக்கிறீர்களோ? நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்திருந்தேன். தேவன் என்னை தெரிந்து கொண்டாரே! அற்பமாய் எண்ணப்பட்ட என்னை தேவன் தமக்காக தெரிந்து கொண்டாரே, உங்களையும் நிச்சயமாய் காண்கிற தேவன் உண்டு. கலங்காதிருங்கள். சோர்ந்து போகாதீர்கள்.
.
கர்த்தரை நேசிக்கிற இருதயம் உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக உலகம் முழுவதும் உங்களை வெறுத்தாலும், தள்ளி விட்டாலும், கர்த்தர் உங்களை காண்கிறார். உங்களை தமக்காக தெரிந்து கொள்வார். நீங்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் தேவன் உங்களை தேடி வந்து, தமக்காக எடுத்து உபயோகிப்பார். அல்லேலூயா!
.
தேவன் தம்மை நேசிக்கிறவர்களை அறிவார். அவர் எந்த காட்டில் இருந்தாலும், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாலும், கர்த்தர் அவர் இருக்கும் இடத்தை அறிவார். அங்கிருந்து அவர்களுடைய தலையை உயர்த்துவார். அவரை நேசிக்கிற ஒவ்வொருவரின் வாழ்விலும் அப்படியே செய்வார். அவரை நம்புகிற ஒருவரும் வெட்கப்பட்டு போக மாட்டார்கள். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

இதுவும் பாவமே


.
'...உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்' - (எண்ணாகமம் 32:23).

.
பிரியமானவர்களே பாவம் என்றால் கொலை செய்தால் பாவம் விபச்சாரம் செய்தால் பாவம் சினிமாபார்தால் பாவம் என்று எண்ணி கொண்டு இருகிறோம் 'நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்' (ஆதியாகமம் 4:7)என்று வாசிக்கிறோம் அது மாத்திரம் அல்ல (நீதிமொழிகள் 3:27) நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது அதை செய்யாமல் இருப்பதும் பாவமே . உங்களுக்கு நான்மை செய்யும் திராணி இருக்கிறதா . உங்கள் திராணிக்கு தக்கதாய் செய்கிறீர்களா . அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் பாவம் செய்கிறீகள் அந்த பாவம் உங்கள் வீட்டின் வாசல் படியில் படுத்து இருக்கும் என்று வாசிக்கிறோம் . நம்மில் அநேகருக்கு கொடுக்க கூடிய மனது என்பதே இல்லை கர்த்தர் எவ்வளவு கொடுத்தாலும் சரி தனக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கும் என்று சேர்த்து கொண்டே போகிறார்கள். சிலர் தசமபக்கம் மட்டும் கொடுத்தால் போதும் அதைதான் கர்த்தர் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார் என்று எண்ணி கொண்டு இருக்கிறோம் . அப்படி இல்ல பிரியமானவர்களே நீதிமொழிகள் 3:27 ல் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே என்று இந்த சத்தியத்தையும் நாம் மனதில் வைத்து கொள்ளுவோம் .

.
பிரியமானவர்களே, பாவத்தை நாம் அதை கொஞ்சம் தானே என்று நம்மை சரிப்பார்க்காமல் அந்த பாவத்திலேயே இலயித்து போயிருந்தால், ஒரு நாள் வரும், அது நம் உயிருக்கே ஆபத்து கொண்டு வரும் நிலைமை ஏற்படலாம்.
.
உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. பாவத்தை பாவம் என்று பரிதாபப்பட்டு நம்மை காத்துக் கொள்ளாமல் போவோமானால், அந்த பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்கும்.
.
.
எந்த பாவமும் நம்மை வஞ்சிக்காதபடி பாவத்திற்கு எதிர்த்து நிற்போம். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே (எபிரேயர் 12:4) என்று எபிரேய புத்தகத்தை ஆக்கியோன் எழுதுகிறார். நாம் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நாம் பாவத்தோடு எதிர்த்து போராட வேண்டுமாம். அந்த அளவிற்கு பாவத்தை நாம் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும்.
.
எந்த பாவமும் நம்மை அடிமையாக்கி, கர்த்தரை விட்டு நம்மை பிரிக்காதபடி, பாவத்திலே வாழ்வதால் அந்த பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்காதபடி, கர்த்தர் அருளும் பாவ மன்னிப்பை பெற்று, அதிலிருந்து விடுபடுவோம். அப்படி விடுதலையாக்கபட்டால், 'இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்' (ரோமர் 6:22) என்று வேதம் நமக்கு கூறுகிறது. தேவனுக்கு அடிமையாவதினால் பரிசுத்தமாகுதலே நமக்கு பரிசாக கிடைக்கிறது. அதன் முடிவோ நித்திய நித்தியமாய் ஜீவனை சுதந்தரித்து, கர்த்தரோடு என்றென்றும் வாழும் வாழ்க்கையாகும்.
.
பிரியமானவர்களே, பாவம் நம் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடாதபடி, தொடர்ந்து பிடிக்கும் பாவத்தையும், வாசற்படியிலே படுத்திருக்கும் பாவத்தையும் உதறி தள்ளிவிட்டு, தேவனுக்கு அடிமைகளாக, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தத்தைப் பெற்று, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோமாக! அதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஆமென்! அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

வியாழன், 26 ஜூன், 2014

கிறிஸ்துவின் நியாயாசனம்


.

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2கொரிந்தியர் 5:10).

.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்றும், அவரது வருகையில் மரித்தவர்கள் முதலாவது எழுந்தரிப்பார்கள் என்றும், உயிரோட இருப்பவர்கள் அவருடைய சாயலாக மாறி, மறுரூபமாக்கப்பட்டு, நடு வானத்தில் இயேசுவை சந்தித்து, அப்படியாக நித்திய நித்தியமாய் அவரோடு கூட இருப்போம் என்றும் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அதுவே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை அல்லது Rapture என்றழைக்கப்படுகிறது.

.

அப்படி இயேசுவோடு என்றும் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற நாம் அவரோடு என்றும் வாழ்ந்து, பொன் வீதியில் உலாவி, பளிங்கு போன்ற ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியில் விளையாடி, ஜீவவிருட்சத்தின் கனியை புசித்து, எல்லாவற்றிற்கும் மேலாக பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் திளைத்து மகிழ்ந்து வாழ்வதற்கு முன் இயேசுகிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பு கிறிஸ்தவர்களுக்கு அல்லது கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவரும் ஒன்றன்பின் ஒன்றாக நாம் இந்த சரீரத்தில் இருக்கும்போது செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் இயேசுகிறிஸ்துவினிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். கிறிஸ்துவை அறியாத மற்றவர்களுக்கு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வழங்கப்படும். அதில் கிறிஸ்தவர்கள் போய் நிற்க தேவையில்லை.

.

இந்த கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு கிறிஸ்தவர்களாயிருக்கிற சிறியோர் பெரியோர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இதிலிருந்து தப்ப யாராலும் முடியாது. நம் பெயர் அறிவிக்கப்படும்போது நாம் சென்று நம் வாழ்வில் செய்த ஒவ்வொரு காரியத்தை குறித்தும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அங்கு நாம் ஏன் இந்த காரியத்தை செய்தோம் என்று தேவனிடம் வழக்கிட முடியாது. வாதிட முடியாது. ஏனென்றால் அங்கு எல்லாம் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரிடமிருந்து எதையும் மறைக்கவும் மாற்றவும் முடியாது. ஏனெனில் 'அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்' (எபிரேயர் 4:13). அநேகர் அவர்கள் மறைவாக செய்த பாவங்களும் அவர்களுடைய செய்கைகளும் வெளியே அந்த நாளில் கொண்டு வரப்படும்.

.

இந்த நியாயத்தீர்ப்பில் நம் சரீரத்தில் செய்த பாவங்கள் நியாயந்தீர்க்கப்படுவது மட்டுமல்ல, நாம் சரீரத்தில் செய்த நன்மைகளுக்கு பலன்களும் கிடைக்கும். நாம் செய்த நன்மைகளுக்கு தக்கதாக தேவன் நமக்கு அளிக்கும் ஐந்து வகையான கீரிடங்களை குறித்து வேதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

.

1. அழிவில்லாத கிரீடம்: பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். - (1 கொரிந்தியர் 9:25).

.

2. ஜீவக்கிரீடம்: சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். - (யாக்கோபு 1:12).

.

3. மகிழ்ச்சியின் கிரீடம்: எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள். - (2தெசலோனிக்கேயர் 2:19).

.

4. நீதியின் கிரீடம்: இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். - (2 தீமோத்தேயு 4:8).

.

5. வாடாத கிரீடம்: அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். - (1 பேதுரு 5:4).

.

நாம் கிறிஸ்துவுக்காக செய்த ஒவ்வொரு காரியத்திற்கும் ஏற்ற பலன் உண்டு. ஒருவேளை மனிதர்கள் அதை பாராட்டாமல் போகலாம், அதை மதிக்காமல் இருக்கலாம். ஆனால் நாம் கர்த்தருக்காக செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும், செய்கைக்கும் சரியானபடி பதில் செய்யப்படும். தேவன் அநியாயம் செய்வதில்லை. நாம் அவருக்காக பட்ட பாடுகளுக்கு ஏற்ற பலனை நிச்சயமாய் அவர் அந்நாளில் தருவார்.

.

தேவன் நாம் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அக்கினிக்கு உட்படுத்துவார். தேவனை மகிமைப்படுத்தும்படி செய்யப்படும் காரியம் எதுவும் அந்த அக்கினிக்கு உட்படுத்தப்படும். நாம் எந்த வழியில், எந்த முறையில், எந்த விதத்தில் எதை மனதில் வைத்து கர்த்தருக்கு ஊழியம் செய்தோம் என்பதை பரிசோதிக்கும் வகையில் அது அக்கினிக்கு உட்படுத்தப்படும். பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்றவை அக்கினியில் போடப்பட்டாலும் எப்படி நிலைநிற்கிறதோ அதுப்போல நாம் தியாகமாக, தேவ நாம மகிமைக்காக உண்மையாக செய்த ஊழியங்கள் நிலைத்து நிற்கும். மரம், புல், வைக்கோல் போன்றவை நெருப்பில் போட்டால் அழிந்து போவது போல நாம் செய்த காரியங்கள் நம் பெருமைக்காக, நம் தேவைக்காக, நம் புகழுக்காக மட்டுமே இருந்தால் அவை எரிந்து போகும். ஒரு பலனும் நமக்கு கிடைக்காது. லோத்து எப்படி சோதோம் கொமோரா பற்றி எரிகிற போது, வெளியே கொண்டு விடப்பட்டானே ஒழிய அவன் அங்கு சேர்த்து வைத்திருந்த ஒரு பொருளையும் எடுத்து கொள்ள முடியாமற் போனது போல நாம் தப்பித்து கொள்வோமே தவிர நம் கிரியைகள் ஒன்றுக்கும் பலனில்லாமல் போகும்.

.

இது கிறிஸ்தவ ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் நடைபெற இருக்கும் நியாயத்தீர்ப்பு. நாம் கர்த்தருடைய நாம மகிமைக்காக எதை செய்தோமோ அது மாத்திரமே அக்கினியின் பரிட்சைக்கு நிலை நிற்கும். மற்றபடி நாம் உலகத்தில் செய்த எந்த காரியமும் அங்கு நிற்காது. அந்த நாளில் நாம் வெட்கப்பட்டு போகாதபடி, நம்முடைய குறிக்கோள்களும், நம்முடைய வழிகளும், நம்முடைய எண்ணங்களும், நம்முடைய செய்கைகளும் கர்த்தருக்கு முன்பாக சரியானதாக, சீரானதாக, தேவனுக்கு மகிமையை கொண்டு வரத்தக்கதாக இருக்கட்டும். நியாயந்தீர்க்கப்படும்போது, கிரீடங்களை பெற்று கொள்கிறவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற நம் செய்கைகள் மாறட்டும். உலகத்திற்காக வாழ்ந்தது போதும், தேவனுக்கு பிரியமாக வாழ முடிவு செய்வோம். அதன்படி வாழ்ந்திடுவோம். தேவ நாமம் மகிமைப்படுவதாக, ஆமென்! அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே


இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். -(யோவான் 2:11).

.
நம் தேசத்தில் தேவனின் அற்புதத்தை கண்டு கர்த்தரை ஏற்றுக் கொள்கிறவர்கள் அநேகர் இருந்தாலும், அற்புதத்திற்காக மாத்திரம் அவர்கள் கர்த்தரண்டை வருகின்றவர்களாக இருந்தால் அது பரிதாபமானது. உடல் சுகம், உலகப்பிரகாரமான தேவைகள் இவை எல்லாவற்றையும்விட அவர்களின் ஆத்தும இரட்சிப்பு மிகவும் விலையேறப்பெற்றது. அவர்களின் ஆத்துமாவிற்கு விலையே இல்லை.
.
இயேசுகிறிஸ்து அற்புதர்தான். அற்புதங்களை செய்பவர்தான். ஆனால் 'அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை' (யோவான் 12:37) என்று வாசிக்கிறோம். அப்படி தேவனின் அற்புதங்களை கண்டும், பெற்றும் கர்த்தரை விசுவாசிக்கவில்லை என்றால், அவர்கள் பெற்றுக் கொண்ட அற்புதம் வீணாகவே இருக்குமல்லவா?
.
பவுல் அப்போஸ்தலன் 'கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே' (அப்போஸ்தலர் 17:27) என்று சொல்வதுப்போல கர்த்தரை தடவிப்பார்த்தாகிலும் அவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று நாம் ஜெபிக்கும்போதும், அற்புதம் அடையாளங்கள் மூலம் அவர்களை சந்தியும் என்று நாம் ஜெபிக்கும்போதும், கர்த்தர் ஜனங்களை சந்திக்கிறார். ஆனால் அற்புதங்களை பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று அவருக்காக ஜீவிக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறியானதே!
.
நாம் கர்த்தரை அறியாத ஜனங்களுக்காக ஜெபிக்கும்போது, 'அற்புதங்களை பெற்றுக் கொண்டவர்கள் உம்மை ஏற்றுக் கொண்டு, உமக்காக ஜீவிக்க வேண்டுமே' என்று அதற்காகவும் ஜெபிக்க வேண்டும்.
'கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்' (யாத்திராகமம் 14:31). இந்த வசனத்தில், கர்த்தரின் ஜனங்கள் தேவன் செய்த மகத்தான கிரியைகளை கண்டு, கர்த்தருக்கு பயந்து அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் என்றுப் பார்க்கிறோம். அதுப்போல 'இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்' என்றுப் பார்க்கிறோம். ஆம், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், அவருடைய மகிமையை கண்டவர்களுமாகிய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். கர்த்தருடைய ஜனங்களிடத்தில் அற்புதங்கள் நடக்கும்போது, அவர்கள் இன்னும் அதிகமாய் கர்த்தரைப் பற்றிக் கொண்டு, அவருக்கு நன்றி செலுத்தி வாழ்வார்கள்.
.
பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்வில் கர்த்தரின் அற்புதத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறீர்களா? நம் தேவன் அற்புதர், பெரிய அற்புதங்களை செய்கிறவர். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அற்புதங்களை செய்ய வல்லவர். நம் தேவைகளை அதிசயமாய் சந்திக்க வல்லவர். அப்படிப்பட்ட தேவன் அதிசயமாய், அற்புதமாய் நம் தேவைகளை சந்திக்கும்போது, அவர் செய்த அற்புதத்தை மறவாமல், அவருக்கு நன்றியாக ஜீவிப்போமாக! மற்றவர்களுக்கும் சாட்சியாக அறிவிப்போமாக! அதன் மூலம் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து இரட்சிப்பிற்குள் வர காரணமாயிருப்போம். அற்புதத்தின் தேவன் இந்த நாளில் தானே நமக்கு அற்புதத்தை செய்து நம் தேவைகளை சந்திப்பாராக! ஆமென் அல்லேலூயா!(Anudhina Manna, A Free Daily Devotional)

உண்மையான வேலை



எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். - (கொலோசேயர் 3:24).

.
குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. அதிக சம்பளம் வழங்கினாலும் அதற்கேற்ப நேர்மையாக யாரும் உழைப்பதில்லை எனபது அந்த கம்பெனி முதலாளியின் நியாயம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த ஒருவன், குறைவான சம்பளத்தை குறித்து கவலைப்படாமல் தன்னுடைய முழு பலத்தையும், உழைப்பையும் பயன்படுத்தி, கடுமையாக வேலை செய்தான். அவனுடைய கடுமையான வேலையை கண்டு பிற தொழிலாளர்கள், 'வீணாக நீ இப்படி கடினமாக உழைக்காதே. நீ எப்படி உழைத்தாலும் இந்த கம்பெனி முதலாளி அதை பார்த்து நல்ல சம்பளம் தர மாட்டார்' எனக் கூறினர்.

.

அதற்கு அந்த மனிதன், 'நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து நேர்மையாக உழைக்கவில்லை. இந்த முதலாளி எனக்கு சம்பளம் குறைவாக தந்தாலும் என்னுடைய பெரிய முதலாளியாகிய தேவன் நியாயமான சம்பளம் தருவார் என்பதே என நம்பிக்கை. அவருக்காகவே நான் உண்மையாய் உழைக்கிறேன்' என்றான்.

.

ஆம், இவ்வுலகிலே நம் முதலாளிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அதாவது விசுவாசியானாலும், அவிசுவாசியானாலும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து உண்மையாய் உழைக்க வேண்டும். உதாரணமாக வேதத்திலே தானியேல், யோசேப்பு போன்ற வாலிபர்கள் புறஜாதியான ராஜாக்களிடத்தில் பணி புரிந்தாலும் தங்கள் பணியில் உண்மையோடும் உத்தமத்தோடும் இருந்தனர். அதோடு தேவனை பிரியப்படுத்தும் காரியங்களில் மிக ஜாக்கிரதையாக இருந்ததால் தேவன் அவர்களை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தினார். நீங்கள் பணி புரியும் வேலை ஸ்தலத்திலே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிக சிறியதாக இருக்கலாம். பிறரால் அற்பமாக எண்ணப்படுகிற வேலையாயிருக்கலாம். ஆனாலும் அதை முழு ஈடுபாட்டொடும், உண்மையோடும் செய்யுங்கள். அதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் போனாலும், மதிக்காமல் போனாலும் தேவன் உங்களை நிச்சயமாய் கனம் பண்ணுவார்.

.

உங்கள் அலுவலகத்திலோ, நீங்க வேலை செய்யும் இடத்திலோ உங்களது நடவடிக்கைகளை கண்காணிக்க யாரும் இல்லாதிருக்கலாம், இருப்பினும் உங்கள் பணியினை மிக உண்மையோடும், உத்தமத்தோடும் செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் செயலை மட்டுமல்ல, இருதயத்தையும் காணும் உயர்ந்த அதிகாரி இயேசு உண்டு. அவர் சிறு வேலையில் உங்கள் உண்மையை கண்டு, உங்களை அநேகத்;தின் மேல் அதிபதி ஆக்குவார்.

.

பிரியமானவர்களே, இதுவரை நீங்கள் உண்மையும் உத்தமுமாய் உங்கள் கடமைகளை செய்த போதிலும் இதுவரை எந்த நன்மையும் அடையாமல் இருக்கலாம். ஆயினும் சோர்ந்து போகாதிருங்கள். நமது நோகக்மெல்லாம் மனிதர்களிடமிருந்து நன்மைகளை பெறுவதில் மட்டுமே இருக்க கூடாது. நன்மைகளை தேவனிடமிருந்தே எதிர்பாருங்கள். தேவன் பலன் தருவார். ஆகவே நீங்கள் செய்யும் எந்த வேலையையும் மனிதருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். அது வீட்டு வேலையோ, பள்ளி வேலையோ, அரசு வேலையோ எதுவாயிருந்தாலும் வேலையின் தரத்தையல்ல, உண்மையையே தேவன் பார்க்கிறார். அந்த உண்மையை இறுதிவரை காத்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

நீயோ கடன் வாங்காதிருப்பாய்


ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.(உபாகமம் 28:12).

.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும் (உபாகமம் - 28:2) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால் நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். நீ கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல் போனால், நீ அநேகம் ஜாதிகளிடம் கடன் வாங்குவாய், அதை கொடுக்க உன்னால் முடியாமல் போகும். அந்த கிறிஸ்தவ தகபபனுக்கு கர்த்தர் எத்தனையோ முறை எச்சரித்திருப்பார், ஆனால் அவரோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை கேட்காமல், தன் சுயநலத்திற்காக, சுய இன்பத்திற்காக சிகரெட்டுகளை வாங்கி ஊதி தள்ளினார். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்ளூ நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்ளூ அவன் தலைவனாயிருப்பான்ளூ நீ வாலாயிருப்பாய் (உபாகமம் - 28:43,44) என்ற கர்த்தரின் சாபம் அவருடைய வாழ்க்கையில் பலித்தது.

.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் சுய இன்பத்திற்காக, உன் இச்சைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காக, கடன் மேல் கடன் வாங்கி கொண்டிருக்கிறீர்களோ? உன் குடும்பத்தை கண்ணீரில் மிதக்க விட்டு கொண்டிருக்கிறிக்கிறீர்களோ? இன்று கர்த்தர் உனக்கு கொடுக்கும் எச்சரிப்பின் சத்தத்தை கேட்பாயாக! உன் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி விடு. கர்;த்தரிடம் தஞ்சம் புகுந்து விடு, அப்போது அவர் நீ கையிட்டு செய்யும் காரியங்களை எல்லாம் ஆசீர்வதிப்பார்…

.

ஒரு சிலர், தங்கள் பெற்றோரை சந்தோஷபடுத்த வேண்டி, தங்களுடைய திராணிக்கு மேலாக அவர்களுக்கு கொடுத்து, பழக்கபடுத்துவார்கள். பெற்றோருக்கு கொடுப்பதை நான் ஒரு நாளும் தடுக்க மாட்டேன். வயதான பெற்றோரை தாங்குவது நமது கடமை. அதை செய்யாவிட்டால் கர்த்தரின் சாபம் நம்மேல் வரும். ஆனால் மகனோ, மகளோ வெளிநாட்டில் சம்பாதிக்கிறார்கள் என்று இங்கு சுகபோகமாய், தங்கள் சுய இச்சைகைளுக்காய், பிள்ளைகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கு அனுப்பும்; பணத்தை வீணாய் விரயம் செய்யும் பெற்றோர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை இச்சையை தீர்ப்பதற்காக, இந்த மகள், அல்லது மகன் பணத்தை அனுப்புவார்கள். சிலவேளை முடியாதபோது மற்றவர்களிடம் கடன் வாங்கி அவர்களுக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்? ஞானமாய் சில காரியங்களை செய்ய வேண்டும். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோமர் 13:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. கடனை வாங்கி பழக்கப்படாதிருங்கள். ஒருமுறை வாங்கினால் திரும்ப திரும்ப வாங்க தோன்றும். அதனுடைய முடிவோ விபரீதம்! அது ஒரு பொல்லாத வியாதி! ஆந்த வியாதியில் சிக்கி விடாதீர்கள்!

.

கர்த்தருக்கு கொடுங்கள். உங்கள் இயலாமையிலிருந்து கர்த்தருக்கு கொடுத்து பாருங்கள்! கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறந்து உங்களை ஆசீர்வதிப்பதை காண்பீர்கள். கர்த்தருக்கு கொடுக்கிறவர்கள் யாரும் மற்றவர் முன் தலைகுனிந்து நிற்க மாட்டார்கள். உங்களை கடனே இல்லாமல் கர்த்தர் அதிசயமாய் வழிநடத்துவார். உங்கள் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். ஆமென்! அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கிறிஸ்தவ உலகத்தின் ஞானம்



ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். அந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. - (1கொரிந்தியர் 1:24-25).

.
இன்று கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லிக் கொள்கிற மேலை நாடுகளின் நிலைமை மிகவும் மோசமானது. தேவனை தேடாதபடி, தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து என்றால் யார் என்று கேட்கிறவர்களாக பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை. தேவன் அருவருக்கிற அத்தனை அக்கிரமங்களையும் அளவுக்கு மீறி செய்து கொண்டிருக்கிற நாடுகள்! தேவ காரியங்களை குறித்து எச்சரித்து கொண்டிருக்கிற தேவ ஊழியர்கள் ஒரு புறமிருக்க, பாவத்தை தண்ணீரை போல குடித்து கொண்டிருக்கிற மக்கள். தேவ கோபம் இறங்குவதற்கு முன், அந்த மக்கள் மனம் திரும்ப மாட்டார்களா என்று ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கிற தேவன், 'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்' - (2நாளாகமம் -7:14) என்று தேவன் வாக்கு பண்ணியிருக்க, அவருடைய நாமத்தை தரித்திருக்கிற அவருடைய மக்களோ, தங்கள் தேசத்தின் ஷேமத்தை குறித்து கவலையற்றவர்களாக கர்த்தருடைய முகத்தை தேடாதபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்' (1நாளாகமம் 28:9ம் வசனத்தின் பின்பாகம்) என்று உறுதியாக எச்சரித்திருக்க, அவர்கள் தேவனை விட்டுவிட்டபடியினால், அவரும் அவர்களை கைவிடும் நிலைமையை அவர்களே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

.

இந்த தேசங்களில் வாழும் உண்மையான கிறிஸ்தவ ஜனம் கர்த்தரை நோக்கி திறப்பின் வாசலில் நின்று கர்த்தரிடத்தில் அந்த நாடுகளுக்காக நின்று கதற வேண்டும். தேவன் உங்களை அந்த தேசத்திற்கு கொண்டு சென்ற நோக்கம் ஒருவேளை அதுவாக இருக்கலாமே!

.

தேவனை பற்றி கொள்ளாதவரை தேசத்தில் சமாதானம் ஒருநாளும் வராது. பிரச்சனைகளுக்கு தீர்வு ஒருநாளும் ஏற்படாது. ஆயிரம் முறை நாடுகளை சேர்த்து வைத்து, திட்டங்களை தீட்டினாலும,; சமாதான பேச்சு வார்த்தைகளை பேசினாலும் சமாதானம் ஒரு நாளும் ஏற்படாது. தங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பினால், தேவன் அவர்களுடைய ஜெபத்தை கேட்டு, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பார். இல்லாவிட்டால் எதிர்மறை காரியங்களே ஏற்படும். இந்த கடைசி நாட்களில் கர்த்தரை பற்றி கொள்வோம். அவரே நமது பிரச்சனைகளுக்கு பதில். அவரே சமாதான காரணர், அவரே நம் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பவர். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

நீங்கள் பரலோகம் செல்ல வேண்டுமா?


கிருஸ்துவர்கள் என்றாலே இறக்கம் உள்ளவர்கள் அன்புள்ளவர்கள் என்பதுமாறி இப்பொழுது சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் . இப்பொழுது கிருஸ்துவர்களிடம் இரக்கத்தை அன்பை எதிர்பார்ப்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபடுவதுப்போல் இருக்கிறது . ஆம் பிரியமானவர்களே நாம் ஆதி நாட்களில் அதாவது கஷ்டப்பட்ட நாட்களில் ஆண்டவரிடம் கர்த்தாவே என்னால்முடிந்த அளவிற்க்கு கஷ்டப்படுபவர்களுக்கு நான் உதவிசெய்வேன் என்று சொன்ன பொருத்தனைகள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை . இன்று கர்த்தர் நம்மை சம்பூரணமாக வைத்திருக்கிறார் . ஆனால் நாம் எத்தனை பேருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்துகொண்டு இருக்கிறோம் . இதை நான் சொல்லும்பொழுது இவன் யார் இதையெல்லாம் சொல்லுவதற்கு என்று நீங்கள் நினைக்கலாம் .எண்ணாகமம் 22:28 உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; கர்த்தர் கழுதையை கொண்டு பேசினார் இதை சொல்லுவதற்கு ஊழியர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை இந்த கழுதை போதும் இப்பொழுது கர்த்தருடைய கோபம் கர்த்தருடைய பிள்ளைகள் மேல் இருக்கிறது இதை உணர்ந்து மனம் திரும்பினால் நீங்கள் கோபத்திற்கு தப்பித்து கொள்ளுவீர்கள் உங்களுடைய தசமபாகம் உங்களுடைய உபவாசம் பரிசுத்தவான்களுடைய ஐக்கியம் பரலோகம் கொண்டு சேர்க்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறதான அருமையான சகோதர சகோதரிகளே நிச்சயமாய் இவைஏதுமே உங்களை பரலோகம் கொண்டு சேர்ப்பதில்லை . நீங்கள் இதுவரை கர்த்தருக்காக என்ன செய்திருக்கிறீர்கள் மத்தேயு 25:45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.ஆம் நிச்சயமாக சிறியவர்களுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை கர்த்தருக்கே செய்தீர்கள் . நீங்கள் இதுவரை எத்தனை சிறியவர்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள் . லூக்கா16:19ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.இவன் வேறு எந்த தவறும் செய்ததாக வேதத்தின் அடிப்படை காரணமும் குறிப்பிடவில்லை இவன் சம்பிரமமாய் வாழ்ந்தான் இதற்காக மட்டுமே கர்த்தர் இவனை நரகத்திற்கு தள்ளுவதற்கு அவர் அநீதிஉள்ளதேவன் அல்ல அவன் தன்னுடைய பணத்தை தாம் மட்டுமே அனுபவித்து லாசரு போன்ற கஷ்டப்பட்ட சிறியவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்திருப்பான் ஆகவே தான் கர்த்தர் இவனை நரகத்திற்கு தள்ளிவிட்டார் . ஆம் பிரியமானவர்களே நீங்களும் இந்த ஐசுவரியமுள்ள மனுசனை போல நரகத்திற்கு செல்ல விருபுகிரீர்களா . அல்லது சிறியவர்களுக்கு உதவி செய்து பரலோகம் செல்ல போகிறீர்களா . நான் மலேசியாவில் நான்கு மாதங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன் அப்பொழுது எத்தனையோ கிருஸ்துவர்களிடம் வேலை பார்த்து தரும்படியாக கேட்டுகொண்டேன் அவர்கள் என்னிடம் வேலை இல்லாமல் இருக்கிறியே சப்டாயா என்று ஒருவரும் என்னிடம் விசாரித்தது கிடையாது . சபை ஆராதனைக்கு சென்றால் என்ன என்று கூட ஒருவரும் விசாரித்தது இல்லை . ஆம் பிரியமானவர்களே நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பம் என்று சொல்வது எல்லாம் வாய்வார்த்தை மட்டுமே கிரியைஇல்லை . இதை குறிப்பிடுவது எனக்கு மனம் வேதனையில் தான் குறிபிடுகிறேன் . சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
கர்த்தர் தாமே உதவி செய்வாராக .நல்ல கிருஸ்துவனாக வாழ்வோம் .

சுகமான நித்திரை


.

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்' - ( சங்கீதம்4:8).

.
நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற நிலையில் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்ற புலம்பலோடு வாழ்கிறவர்கள் அநேகர். இரவில் படுத்தால் ஒருவித பயம், நடுக்கம், திகில், குழப்பமான மனநிலை இப்படிப்பட்ட குழப்பங்களினால் மனது அமைதி பெறாமல் கண்கள் மூட மறுக்கின்றன. அநேகர் சொல்வது போல படுக்கையை வாங்கலாம், ஆனால் தூக்கத்தை வாங்க முடியுமா?

.

சிலரது தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பலருக்கு பகலின் நிகழ்வுகள் மற்றும் கடந்த கால பாவங்களால் ஏற்படும் அமைதியற்ற மனநிலை இரவின் தூக்கத்தை துரத்துகிறது. இவற்றை போக்கி இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற ஏழு வழிகளை காண்போம்.

.

1. என் தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு போதுமானவர். என்னுடைய முதிர் வயது வரை அவரே என்னை தாங்குவார் என்ற திடமான நம்பிக்கையோடு இருங்கள். இந்த நம்பிக்கை எப்பொழுது வரும்? வேத வசனத்தை தியானிக்கும்போது மட்டுமே! ஆகவே வேதத்தை ஆர்வமாய் வாசித்து தியானியுங்கள். 'நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்' - (சங்கீதம் 3:5)

.

2. உங்களுடைய சுய பெலனையோ, அறிவையோ, செலவத்தையோ, சொத்துக்களையோ சார்ந்திருக்கும் மனநிலையை விட்டு வெளியே வாருங்கள். ஏனென்றால் அவைகள் நாளையே மாறலாம். திடீரென்று நம் கைவிட்டு செல்லலாம். தேவ கிருபையை மட்டும் சார்ந்திருங்கள. இந்த குறுகிய உலக வாழ்விலே எந்த நிலையிலும் மனரம்மியமாய் வாழ்வேன் என தீர்மானியுங்கள். 'அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்' - (சங்கீதம் 4:7-8).

.

3. மறைக்கப்பட்ட தவறுகள் ரகசிய பாவங்கள், என் குற்றம் அம்பலம் ஆகிவிடுமோ என்ற பயம். தொழிலில் நான் செய்யும் தில்லுமுல்லுகள் வெளியரங்கமாகி விடுமோ என்ற பயம், மனைவிக்கோ கணவருக்கோ செய்யும் துரோகம், இவைகள் நமக்கு நிச்சயமாய் தூக்கத்தை வர விடாது. என்ன செய்வது? தேவனிடம் அறிக்கை செய்து, பாவத்தை விட்டு விடுங்கள். தொழிலில் வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு ஏமாற்றுகளையும் விட்டு விடுங்கள். நியாயமாய் வரும் கொஞ்ச வருமானத்தில் குறைவாய் சாப்பிட்டாலும் நிறைவாய் தூங்குவீர்கள்.

.

4. சிலர் மீது கொண்டுள்ள மாறாத வைராக்கியத்தையும், அடங்காத எரிச்சல்களையும் போக்குங்கள். எப்படி? தேவன் உங்களது கணக்கற்ற பாவங்களை மன்னித்திருக்கிறார் என்ற நிச்சயம் இருக்கும்போது உங்களை நீதிமானாக எண்ணுவீர்களானால் பிறர் உங்கள் கண்களில் கொடும் பாவிகளாகவே தெரிவார்கள். நான் பாவி என உணருங்கள். அப்போது உங்களுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க முடியும்.

.

5. மனிதர்களின் அன்பையும் ஐக்கியத்தையும் மட்டுமே நாடி, அவைகள் கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றப்படும் சூழ்நிலையில் ஏற்படும் விரக்தியினால் தூங்க முடியாமல் இருக்கலாம். இதிலிருந்து வெளிவந்து தேவனுடைய அன்பையும் ஐக்கியத்தையும் அனுதினம் அனுபவியுங்கள். அப்போது மனிதருடைய அன்பிலே ஏற்ற தாழ்வுகளும் ஏமாற்றங்களும் ஏற்படும்போது அவை நம்மை அதிகமாய் பாதிக்காது. ஜெபித்து உங்கள் இருதயத்தின் சமாதானத்தை காத்து கொள்வீர்கள். 'நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்' - (ஏசாயா 2:22).

.

6. குடும்பத்திலே பகலின் வேலைகளை குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து செய்யுங்கள். இது மருமகள் வேலைதானே, அல்லது மாமியார் வேலைதானே என்று போட்டி மனப்பான்மையோடு வாழாதீர்கள். எதை செய்தாலும் மனப்பூர்வமாய் செய்து குடும்பத்தின் மகிழ்ச்சியை தக்க வையுங்கள். பகலின் வேலை இரவில் உங்களுக்கு தூக்க மாத்திரையின்றி நல்ல நித்திரையைத்தரும் 'வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்' - (பிரசங்கி 5:12).

.

7. கடைசியாக, குடும்பத்தில் பிரச்சனை என்று ஒன்று இருந்தால், பிள்ளைகளின் மூலமாகவோ, மனைவி, கணவர் மூலமாகவோ பிரச்சனை என்று ஒன்று இருந்தால் கண்களுக்கு நித்திரை வருவது மிகவும் கடினம். திரும்ப திரும்ப நடந்த காரியங்களையே யோசித்து யோசித்து, இரவு முழுவதும் நித்திரை வராமல் தவித்து கொண்டிருப்பர். கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் படுப்பதற்கு முன் பேசி பிரச்சனையை முடித்து கொள்ள வேண்டும்.

.

'நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது' - (எபேசியர் 4:26) என்று வேதம் நமக்கு போதிக்கிறது. மற்றும் பிள்ளைகள் மூலமாக பிரச்சனை என்றால், அவற்றை தேவனுடைய கரத்தில் வைத்து விட்டு, அவருடைய செய்கைக்காக காத்திருக்க வேண்டும். நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. கர்த்தரின் கரத்தில் எல்லாவற்றையும் அர்ப்பணித்து விட்டு, நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். தேவன் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

இலவசமான இரட்சிப்பு



எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். - (ரோமர் 3:23,24).

.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24) என்ற வேத வசனம் கூறுகிறது. ஆனால் அதை விசுவாசித்து பற்றி கொள்ளுகிறவர்கள் மன்னிக்கபடுகிறார்கள்.இதனை விட்டுவிட்டு நான் பரிசுத்தவான் நீ பாவி என்று மற்றவர்களையும் நம்மையும் குறித்து பேசிகொண்டிருக்க இது காலம் அல்ல ஆகவே இது நம்மை நாமே ஆராய்ந்து பார்த்துக்கொள்ள காலம் . அதை விசுவாசியாமல் அந்த கூட்டத்தாரைப் போல அவிசுவாசமாய் வாக்குவாதம்பண்ணிக் கொண்டிருப்பவர்கள், இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பை இழந்துபோகிறார்கள். இலவச கலர் டிவி தருகிறர்கள் என்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும். ஒருரையொருவர் நெருக்கியடித்து, இடியும், மிதியும் பட்டு, எப்படியாவது அந்த டிவி கிடைக்க வேண்டும் என்று எந்த வேதனைகளையும் பொருட்படுத்தாத அதே மக்கள், விலையேறபெற்ற இரட்சிப்பை இலவசமாய் பெற்று கொள்ளுங்கள் என்றால் அதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், தங்கள் சரீரம் கிழிக்கப்பட்டு, அதில் கூர்மையான ஆயுதங்களால் கடாவபட்டு, இரத்தம் வழிய பாடுகளை சகித்தால் தான் தங்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்கிற எண்ணம் அவர்கள் இருதயத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அவையெல்லாம் தேவையில்லாமல், ‘கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல' என்று எபேசியர் 2:8-9 -ல் வேதம் தெளிவாக நமக்கு சொல்கிறது. "நான் இந்த அளவு என் சரீரத்தை காயப்படுத்தி என் இரட்சிப்பை சம்பாதித்தேன்’ என்று யாரும் பெருமை பாராட்டாதபடிக்கு இரட்சிப்பு யாருடைய கிரியைகளினாலும் உண்டானதல்ல. அது தேவனுடைய மிகப்பெரிய ஈவு. நம்முடைய எந்த கிரியைகளினாலும் அதை சம்பாதிக்க முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறதினாலேயே அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு பாவிகளாகிய நமக்கு கிடைக்கிறது. இலவசமாய் கிடைக்கிற அந்த இரட்சிப்பை இன்றே விசுவாசத்தோடு பெற்று கொள்வோமாக. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரிந்தியர் 6:2) கிருபையின் காலத்தில் அநுக்கிரக காலத்தில் இருக்கும்போதே நாம் அந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!
(Anudhina Manna, A Free Daily Devotional)

பண ஆசை



பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். - (லூக்கா 12:15).

.
இன்று அனேக விசுவாசிகளும் ஊழியர்களும் பணத்திற்கு அடிமை பட்டு இருப்பதை நாம் காணமுடிகிறது கஷ்டப்பட விசுவாசிகளை இவர்கள் பார்த்தாலும் கூட ஒரு ஸ்தோதிரம் கூட சொல்லுவதில்லை இவர்கள் வீட்டில் ஒரு வீட்டுகூட்டம் வைதால் கூட 5 பேர் 6 பேர் மட்டுமே இருப்பார் அதுவும் கஷ்டப்பட 2 விசுவாசிகளும் 3 ஊழியர்களும்தான் இருப்பார்கள் இதுதான் இன்று நம்முடைய சபையின் நிலவரமாய் இருக்கிறது இதனை உணர்ந்து நாம் செயல்படுவோமாக .

.
இன்று அநேகருடைய வாழ்வின் நோக்கமே பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்பதே. ‘பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல’ என்று இயேசுகிறிஸ்து கூறினார். எந்த மனிதருக்கும் அவர்கள் மனதை ஐசுவரியத்தின் மேல் வைத்து இருந்தால் அது அவர்களுக்கு ஒருபோதும் ஜீவன் அல்ல. அநேகர் அவர்கள் தலைமுறைக்கு சொத்துக்கள் இருந்தாலும் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய சொத்துக்களினால் பயன் என்ன? அல்லது அவர்களது வாழ்க்கையில் சமாதானம் இல்லாதிருந்தால் அவர்களுடைய சொத்துக்களினால் பயன் என்ன?



' ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்’ என்று இயேசுகிறிஸ்து கூறுவதாக லூக்கா 12: 16-21 வரையுள்ள வசனங்களில் காண்கிறோம்.



பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்று வேதத்தில் காண்கிறோம். பணம் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்வது அரிது. பணம் இருந்தால்தான் உறவும் நட்பும். பணம் இல்லாவிட்டால் கணவன் மனைவி அன்புக்கூட தூரம்தான். பணமே தேவையில்லை என்று வேதம் கூறவில்லை. ஆனால் பண ஆசை கூடாதென்றுதான் வேதம் கூறுகிறது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இரட்சிக்கப்பட்டு, குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்தார். கர்த்தர் அவரை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். அநேக வல்லமையான ஊழியர்கள் அவருடைய வீட்டில் தங்கியிருந்து தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினர். அப்படிப்பட்ட நல்ல மனிதரை பொருளாசை என்னும் கொடிய பாவம் பிடித்தது. எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி அவருக்குள் வந்தது. அதற்காக எதையும் செய்ய துணிந்த அவர், தான் வேலை செய்யும் இடத்தில் பணத்தை எடுக்க ஆரம்பித்தார். பின்னர் கண்டுபிடிக்கபட்டு, தான் இருந்த இடத்திலிருந்து, வெளியேற நேர்ந்தது. கர்த்தர் அவரை வைத்த உன்னத நிலையிலிருந்து மிகவும் கீழே தள்ளப்பட்டார். நல்ல வேலை, நல்ல நண்பர்கள், ஊழியங்கள் எல்லாவற்றையும் இழந்தார். இன்றும் அந்த சகோதரனை நினைத்து, மிகவும் வருத்தப்படுகிறோம். கர்த்தர்தாமே அவரை திரும்பவும் தம்முடைய ஊழியத்தில் நிலைநிறுத்துவாராக.



அந்த கொடிய பண ஆசையும் பொருளாசையும் நமக்கு சிறிதளவும் வேண்டாம். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல. எத்தனை உண்மையான சத்தியம் இது! போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம் என்று 1 தீமோத்தேயு 6:6-7 வரை வேதம் கூறுகிற அறிவுரையை மனதில் கொண்டு அதன்படி வாழ்வோம்! கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்! ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

சிலுவையின் உபதேசம்


.

சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. - (1 கொரிந்தியர் 1:18).

.
அன்பார்ந்தவர்களே, இயேசுகிறிஸ்துவிடம் வரும்போது, நாம் இலவசமாக இரட்சிக்கப்படுவது மட்டுமன்றி, நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் முழுவதிலும் முழு சுகத்தையும் அடைகிறோம்.


சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. இந்நாட்களில் கிறிஸ்துவை குறித்து, உபதேசங்களை கேட்கும்போது, அநேகருக்கு அது பைத்தியமாக தோன்றுகிறது. இந்த கிறிஸ்தவர்களுக்கு வேறுவேலையில்லை என்று கூறுகிறவர்களும் உண்டு. ஆனால் அந்த இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறவர்களுக்கோ, அது தேவபெலனாய், நமது நம்பிக்கையாய், நமது எதிர்காலமாய், நமது ஜீவியத்தையே மாற்றுகிறதாக இருக்கிறது.



கிறிஸ்துவினுடைய உபதேசம், ஒரு வேளை சிறந்த சொற்பொழிவாற்றுபவர்களால் கூறப்படாமல் இருக்கலாம், ஆனால், அது பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது. ஒருவேளை அது பெரிய தொழில் சம்பந்தபட்டதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அநேக தொழிலதிபர்களும், கோடீஸ்வரர்களும் தங்கள் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புகொடுக்க காரணமாய் இருக்கிறது. அந்த உபதேசம், மருந்து கொடுக்கிற சீட்டாக இல்லாமல் இருந்தாலும், ஆனால் எத்தனையோ கோடிக்கணக்கானவர்கள், அந்த உபதேசத்தினால் ஆத்மீக சரீர சுகமடைந்திருக்கிறார்கள். ஏன் அந்த உபதேசத்திற்கு அத்தனை ஆற்றல் என்றால், அது இயேசுகிறிஸ்துவாகிய உலக இரட்சகரை பற்றினது. அவரே நமது விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார், அவரே ஆதியும் அந்தமுமாக, வழியும் சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார். அவரே நமது இரட்சிப்பின் தலைவராக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பவராக, அவரே நமது சமாதான கர்த்தராக, தேவனுடைய ஒரே பேறான குமாரனாக, இருப்பவராகவே இருக்கிறவர். அவருடைய நாமமே அன்றி இரட்சிக்கப்படவதற்கு வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். - (யோவான் 1:12). இந்த அருமையான தேவனை போல் வேறு யாருண்டு? நமது பாவங்களை கழுவி நம்மை இரட்சித்து, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இந்த தேவனை போல யாருண்டு? இந்த தேவனை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. - (யோவான் 3:18).
(Anudhina Manna, A Free Daily Devotional)

நன்றியுள்ள இருதயம்


.

அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).

.
இன்று நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்? தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதை ஒரு முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா? பத்து குஷ்டரோகிகள் சுத்தமானாலும் ஒருவன் தான் திரும்ப வந்து அவருக்கு நன்றி சொன்னான். சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று இயேசுகிறிஸ்து சொன்னாரல்லவா?

தேவன் செய்த நன்மைகளை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்போம். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தாரே! நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரே! அவருக்கு நாம் எத்தனையாய் நன்றி சொல்ல வேண்டும்! ஒரு நிமிடம் ஒரு தாளை எடுத்து கர்த்தர் செய்த பத்து காரியங்களை எழுதி, அப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு இப்படி கிருபை பாராட்டினீரே என்று கூறுவோமானால், அவர் எத்தனை மகிழ்வார்?

நாம் யாருக்காவது ஒரு நன்மை செய்யும்போது அவர்கள் நமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையானது. ஆனால் அவர்கள் நன்றி எதுவும் சொல்லாமல் போய் விட்டால், நாம் இந்த மனிதனுக்கு போய் செய்தோமே என்று நினைப்போமில்லையா? அதுப் போலத்தான் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி சொல்லாமல் போனால், அவரும் அதுப் போலத்தான் நினைப்பார். மற்ற நன்மைகளை அவர் தருவார் என்று நாம் எதிர்ப்பார்ப்பது எப்படி? நாம் அவரிடமிருந்து என்ன பெற்று கொண்டாலும் அதற்கு நன்றி சொல்ல பழகிக் கொள்வோம். இன்று, நாம் தேவன் செய்த நன்மைகளை மறப்பதினால்தான், வீண் பெருமை, அகந்தை நம்மை ஆட்கொள்கிறது. நாம் இருந்த நிலைமையிலேயே நாம் இன்று இல்லை. கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்தியிருக்கிறார். நாம் இருந்த பழைய நிலைமையை மறக்கும்போதுதான், மற்றவர்களை காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று நம் மனம் பெருமை கொள்கிறது. ஆகையால் நாம் ஜெபிக்கும்போது, அப்பா, நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றியுள்ள இருதயத்தை எனக்கு என்றும் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.நன்றி என்று சொல்லுவோம். கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதிருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். (Anudhina Manna, A Free Daily Devotional)

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்


.

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். - (மாற்கு 9:23).

'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1) என்று வேதம் கூறுகிறது. ஆபிரகாமின் விசுவாசமும் அப்படியே இருந்தது. சாத்தியமில்லாத சூழ்நிலையிலும் விசுவாசிக்க இயலாத நேரத்திலும் தனக்கொரு பிள்ளை பிறப்பான் என்று விசுவாசித்தார்.

.

இன்றும் உங்களை அழுத்துகிற பிரச்சனையின் மத்தியில் தேவனை விசுவாசிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கும் சகோதரனே, சகோதரியே, நானிருக்கும் இந்த வியாதியில், பிரச்சனையில் எந்த அற்புதமுமே நடக்க முடியாது, என்னை விடுவிக்க யாராலும் முடியாது நான் வாழ்வதை விட சாவது மேல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? என் பிரச்சனைக்கு முடிவே இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ?

.

இன்று அற்புதங்களை செய்யும் நம் தேவனை விசுவாசியுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும், நீங்கள் கலங்கி கொண்டிருக்;கிற காரியத்தில் அற்புதங்கள் செய்து உங்களை விடுவிப்பது தேவனுக்கு இலேசான காரியம்.

.

நம் வியாதியின் மத்தியிலும், பிரச்சனைகளின் மத்தியிலும் அவற்றில் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நம் தேவன் விரும்புவதில்லை. அவற்றை மாற்ற வல்லவர் அவரே என்ற விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்போது, இயற்க்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதம் செய்து, தேவன் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். கர்த்தர் அற்புதம் செய்யும்போது, மற்றவர்கள் வியப்புக்குள்ளாகி, இந்தக் காரியம் எப்படி நடந்தது என்று ஆச்சரியப்படும் வண்ணம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

அடைக்கல பட்டணம்


.

மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். - (எபிரேயர் 7:25).

.
பிரியமானவர்களே, இன்றும் நமக்கு அடைக்கலப்பட்டணமாக இயேசுகிறிஸ்து இருக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற நியதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், நாம் செய்த பாவங்களுக்கு தப்பித்து கொள்ளும்படியாக தமது சொந்த குமாரனையே பலியாக்கி, நம்முடைய பாவங்களுக்கு நாம் அடைய வேண்டிய ஆக்கினையை அடையாதபடி காத்து கொண்டார்.

.

பாவத்தை செய்து, அதன் விளைவால் துன்பமும் துக்கமும் அடைந்து என்னை விடுவிப்பார் யாரும் இல்லை என்று கலங்கி கொண்டிருக்கிறீர்களோ? நீங்கள் சென்றடையும்படி உங்களுக்கென்று ஒரு அடைக்கல பட்டணம் உண்டு. அவர்தான் இயேசுகிறிஸ்து. அவரேயன்றி நரகத்திற்கு தப்பும் வழி வேறு ஒன்றுமே இல்லை. அவருடைய மாசற்ற திரு இரத்தமே உங்களுடைய என்னுடைய பாவத்தை போக்கும் ஒரே வழி. உங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கவில்லை, உங்கள் கால்கள் கட்டப்பட்டும் இல்லை, ஆனால் நீங்கள் எடுக்கப்போகும் முடிவு உங்களை நித்திய அழிவிற்கோ அல்லது நித்திய ஜீவனுக்கோ உங்களை அழைத்து செல்லும். அப்னேரை போல வாசலண்டை நின்று கொண்டு சாத்தானின் சதி திட்டத்தால் அவனுடைய நித்திய நரகத்திற்கு சென்றடைய போகிறீர்களோ? இயேசுகிறிஸ்து வாசலண்டை நின்று அழைக்கும் சத்தம் கேட்டு, உள்ளே வந்து விடுங்கள். கொடிய சாத்தானின் பிடியிலிருந்து ஓடி வந்து விடுங்கள். அவருடைய விரிக்கப்பட்ட கரம் உங்களை ஏற்று கொள்ளும். இரவோ பகலோ எந்த நேரமும் அடைக்கப்படாத, குறுகிப்போகாத அவருடைய கரங்கள் உங்களை அணைத்து கொள்ளும். ஏற்று கொள்ளும். நித்திய ஜீவனுக்கு உங்களை அழைத்து செல்லும். பரலோக இராஜ்ஜியத்திற்கு உங்களை தகுதிப்படுத்தும். ஓடிவந்து விடுவோமா? மீண்டும் ஒரு தருணம் உங்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கலாம். ஆகவே இப்போதே அவரிடம் ஓடி வந்து விடுங்கள். கர்த்தர் உங்களை ஏற்று கொள்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

நாம் எல்லோரும் பாவிகள்


.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். - (ரோமர் 6:23)

.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் சாத்தான் என்ற கொடிய வலுசர்பபதினால் கடிபட்டவர்களே. அதனிமித்தம் பாவம் என்னும் விஷம் நம் சிந்தையில், செயலில் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. அதாவது ஒருவன் பாவம் செய்வதால் மட்டும்; பாவியாகவில்லை. அவன் பாவியாகவே பிறக்கிறான். ஆம், பாவம் நம்மில் விஷத்தை போல உள்ளது, அதினின்று நாம் விடுபட கவனமற்றிருப்போமானால் அது நம் ஆத்துமாவை நித்திய மரணத்திற்கு நேராய் கொண்டு சென்று விடும்.
.
முதலாவதாக நாம், நிர்ப்பந்தமான மனுஷன் நான், இந்த பாவ சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார் (ரோமர் 7:24) என்ற உணர்வோடு தீவிரமாய் செய்ல்பட வேண்டும்.
.
அடுத்ததாக சகல பாவத்தையும் கழுவி சுத்திகரிக்கும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை நேராய் கடந்து வர வேண்டும். பாவமாகிய விஷத்தை போக்க வல்லமையுள்ளது இயேசுகிறிஸ்துவின் தூய இரத்தம் மாத்திரமே! ஆண்டவரே, என் பாவங்களை போக்க வல்லவரே, உம்முடைய இரத்தத்தால் என்னை கழுவி சுத்திகரித்தருளும் என்று அவரிடம் நாம் கேட்கும்போது, நிச்சயமாக நம்மை கழுவி அவர் சுத்திகரிக்க வல்லவர். 'நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்' (1யோவான் 11:8-9)
.
நாளை நாளை என்று காலதாமதம் பண்ணாமல், அவ்வப்போது வரும் எச்சரிப்பின் சத்தத்தை அசட்டை பண்ணாமல், தீவிரமாய் ஆண்டவரிடம் கிட்டி சேரும்போது நமது ஜீவனை காத்துக் கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியும். 'பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்'. ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)