செவ்வாய், 3 ஜூன், 2014

இருதயத்தை காண்கிற தேவன்


.
மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். - (1 சாமுவேல் 16:7).
.
நாம் அனைவரும் நம் உருவத்தை மற்றவர்கள் பார்க்கும்போது அவர்கள் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுவதுண்டு. சிலருக்கு தான் மற்றவர்களை கவர்ச்சிக்கும் வண்ணம் அழகாக இல்லை என்று வருத்தம் இருப்பதுமுண்டு. வேதத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் பார்க்கும்போது, நாம் நினைக்கிற எதுவும் தவறு என்பது நாம் உணர முடியும்.
.
கர்த்தர் சவுலை இஸ்ரவேலருக்கு இராஜாவாக இருப்பதை புறக்கணித்து, தீர்க்கதரிசி சாமுவேலை 'பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத்தெரிந்துகொண்டேன் என்றார்' (1சாமுவேல் 16:1). சாமுவேல் அதைக் கேட்டபோது, முதலில் சவுல் இதை கேள்விப்பட்டால் தன்னைக் கொன்றுப் போடலாம் என்று பயந்தார். அப்போது கர்த்தர் நீ பயப்படாதே என்று சொல்லி, 'நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிட வந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்'
.
அதன்படி சாமுவேல் பெத்லகேமுக்கு செல்கிறார். அங்கு சென்றவுடன், அங்கு இருந்த மக்கள், கர்த்தரின் தீர்க்கதரிசி எதற்காக வந்திருக்கிறாரோ என்று பயப்பட்டு, சமாதானமாகத்தான் வந்திருக்கிறீரோ என்று கேட்டார்கள். ஆம்,சமாதானம்தான் என்று சாமுவேல் தீர்க்கதரிசி கர்த்தருக்கு பலியிட வந்தேன் என்று கூறி, அதற்கு ஈசாயையும் அவருடைய குமாரரையும் அழைக்கிறார். அவர்கள் வந்தவுடன், ஒருவேளை ஈசாயிடம் மாத்திரம் சாமுவேல் சொல்லியிருக்கக்கூடும், கர்த்தர் உன்னுடைய பிள்ளைகளில் ஒருவனைஇஸ்ரவேலின் இராஜாவாக கர்த்தர் தெரிந்து கொள்ள இருக்கிறார் என்று.அதன்படி, சாமுவேலின் முன் ஈசாய் தன் மகன்களை ஒவ்வொருவராக கடந்து செல்ல வைக்கிறார்.
.
ஒருவேளை தன் பிள்ளைகளிடம், ஈசாய், ஒவ்வொருவரும் நன்றாக உடை அணிந்து வாருங்கள், இன்று ஒரு விசேஷித்த நாள் என்று கூறியிருக்கலாம் ஒவ்வொருவரும் தங்களது மிகவும் உயர்ந்த உடைகளை அணிந்து வந்திருக்கக்கூடும். முதலாவது, எலியாப் வருகிறார். அவரைப்பார்த்தவுடன், சாமுவேலுக்கு ஒரே பரவசம். ஆ, என்ன உயரம், என்ன அழகு! கர்த்தர் இவரைத்தான் தம் ஜனத்திற்கு இராஜாவாக தெரிந்து கொள்ளப்போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த மாத்திரத்தில், 'கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப்பார்க்கிறார் என்றார் (7ம் வசனம்).
.
ஒருவேளை நாம் மற்றவர்களை பார்க்கும்போது, எத்தனை அழகாய், எத்தனை தாலந்துகளோடு இருக்கிறார்கள்! என்று ஆச்சரியப்படலாம். நம்மைக்குறித்து மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் சொல்கிறார், 'மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' என்று.இப்படி ஒவ்வொருவராக ஈசாய் தன் குமாரரில் ஏழுப்பேரை சாமுவேலுக்கு முன்பாக கடந்து போகப்பண்ணினார். ஒவ்வொருவரும் மிகவும் அழகானவர்களாக, உயரமாக, மற்றவர்கள் விரும்பும் வண்ணமாக இருந்தார்கள். ஆனால் கர்த்தர் அவர்கள் ஒருவரையும் தெரிந்துக் கொள்ளவில்லை.
.
கடைசியில் சாமுவேல் ஈசாயைப் பார்த்து, உன் பிள்ளைகள்
இவ்வளவுப்பேர்தானா? என்று கேட்டபோது, அப்போதுதான் தகப்பனுக்கு ஞாபகம் வருகிறது, 'ஆமாம், இன்னும் ஒருவன் இருக்கிறான், அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்' என்று சொல்கிறார். அப்போது சாமுவேல் 'உடனே அவனை இங்கு அழைத்து வரச்சொல், அதுவரை நான் சாப்பிட மாட்டேன்' என்று கூறுகிறார். அப்படி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது வந்தவுடன், 'அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். அப்பொழுது சாமுவேல்:தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலேஅபிஷேகம்பண்ணினான்' (12-13ம் வசனங்கள்) என்றுப் பார்க்கிறோம்.கர்த்தர் மனிதர்கள் பார்க்கும் வண்ணம் பார்க்கிறவர் அல்ல, மனிதனால்மற்றவர்களின் வெளிப்புறத்தை மட்டுமே காண முடியும். ஆனால் கர்த்தரோ,ஒவ்வொருவரின் இருதயத்தையும் காண்கிறவர். நம்முடைய இருதயம் எப்படிப்பட்டது என்று அவர் அறிவார். நம்முடைய சிந்தனையின் தோற்றங்களையும், இருதயத்தில் உள்ள ஆழங்களையும் அவர் அறிவார். இந்த நபருக்கு இந்த வேலையைக் கொடுத்தால் இவன் எப்படி செய்வான்,தன்னைத்தான் உயர்த்திக் கொள்வானோ அல்லது தேவனை மகிமைப்படுத்துவானோ என்று அவர் அறிவார்.
.
சிலருக்கு ஒரு பொறுப்பை கொடுத்துப் பார்க்கும்போது தெரியும், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. உடனே அவர்களுக்கு தலையில் கிரீடம்வைத்ததுப்போன்று மற்றவர்களை அசட்டை செய்வதும், தாங்கள் தான் அந்தகாரியத்திற்கு சொந்தக்காரர்கள் போலவும் நடந்து கொள்வார்கள். இவர்களிடம் ஏன் இந்த பொறுப்பைக் கொடுத்தோம் என்று கொடுத்தவர்கள் நினைக்கும்படியாக நடந்துக் கொள்வார்கள்.
.
ஆனால் நம்மில் ஒரு சிலர் நினைக்கலாம், நான் ஒன்றிற்குமே
தகுதியில்லாதவன், என்னை விட சிறந்தவர்கள் எத்தனையோப் பேர் இருக்கிறார்கள், ஆனால் தேவன் எப்படி என்னை தம்முடைய காரியத்தை செய்யும்படி தெரிந்து கொண்டிருக்கிறார்? தேவன் எனக்கு எப்படி இத்தனை பெரிய பதவியை கொடுத்திருக்கிறர் என்று. தேவன் மனிதன் பார்க்கும்படிபார்ப்பதில்லை, நம்முடைய இருதயத்தை அவர் ஆராய்ந்து அறிந்திருக்கிறபடியால், நம்மை தகுதியில்லாத நம்மை தெரிந்துக்கொண்டிருக்கிறார்.
.
தகுதியில்லாத நிலையிலும் நம்மை உயர்த்தி வைத்திருக்கிற தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போமா? தாவீது எப்போதும் கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பவராக இருந்தார். அதனால் தேவன் அவரை தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவராக கண்டார். அதைப்போல நாமும் நம்முடையதாழ்வில் நம்மை நினைத்த தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போமா?அல்லது தேவன் மற்றவர்களை விட என்னை நேசிப்பதால் எனக்கு இந்தபொறுப்பை கொடுத்திருக்கிறார் என்று மற்றவர்களை அசட்டைபண்ணுகிறவர்களாயிருக்கிறோமா?நம் இருதயத்தை அறிந்த தேவனுக்கு அவர் விரும்பும் வண்ணம் அவரைஉயர்த்தி வாழ்வோம். கர்த்தர் இன்னும் நம்மை அதிகமாய் உயர்த்துவார்.ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக