.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - (1பேதுரு 5:7) .
.
பிரியமானவர்களே, நமக்குக்கூட நம் கவலைகளையும், பிரச்சனைகளையும், போராட்டங்களையும் வைத்துவிடும்படி ஒரு மரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் சிலுவை மரம். வசனம் சொல்லுகிறது, 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' என்று. அப்படி கிறிஸ்துவின் மேல் நம் கவலைகளை வைத்துவிட்டால், நாம் கலங்கிக் கொண்டும், அழுதுக்கொண்டும் இருக்க தேவையில்லை. ஏனெனில் நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் உண்டு.
.
சிலருக்கு கவலைப்படுவதிலும், சோர்வுக்குரிய காரியங்களையும், நடந்து முடிந்த சோகமான நிகழ்ச்சிகளையும் திரும்ப திரும்ப யோசித்து, அதையே நினைத்து வருத்தப்பட்டு தங்கள் காலத்தை கழிக்கிறார்கள். சரி, நடந்தது நடந்து விட்டது, அதையே யோசித்து என்னப்பயன் என்று நினைப்பதில்லை. அணை உடைந்தப்பின் கடந்து சென்ற வெள்ளம் என்ன செய்தாலும் திரும்ப வராது, உடைந்த கண்ணாடியை திரும்ப ஒட்ட வைக்க முடியாது. ஆனால் உடைந்த கண்ணாடியையே கையில் வைத்துக் கொண்டு, எப்படியாவது ஒட்ட வைக்க வேண்டும் என்று வாழ்க்கை முழுக்க பிரயத்தனம் செய்தாலும் அது முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆனால் அதற்காக கவலைப்படுவதினால் என்ன பயன்?
.
சிலருடைய வாழ்வில் எத்தனையோ பெரிய இடர்களும் பிரச்சனைகளும், தவறி தவறு செய்து வருந்திய காலங்களும் உண்டு. ஆனால் அதையே திரும்ப திரும்ப யோசித்து, வருத்தப்பட்டும் கவலைப்பட்டும் என்ன பிரயோஜனம்! நானும் ஒரு காரியத்தில் ஈடுபட்டு, அது தவறாக கருதப்பட்டு, அதனால், அதையே நினைத்து நினைத்து வருந்தி, கவலைப்பட்டு, மனம் உடைந்துப் போனேன். ஒரு நாள் கர்த்தருடைய சமுகத்தில் அதை வைத்து கதறி அழுது, 'ஆண்டவரே இந்த காரியத்தால் உம்முடைய பிரசன்னத்தை இழந்து தவிக்கிறேன். மனம் அமைதியின்றி தவிக்கிறது. இதற்கு ஒரு முடிவை தாரும்' என்று கதறி அவருடைய பாதத்தில் இறக்கி வைத்தேன். அன்று கர்த்தர் உலகம் தரக்கூடாத சமாதானத்தால் நிரப்பினார். மீண்டும் அந்த காரியத்தைக் குறித்து நான் நினைக்கவே இல்லை. கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார் என்ற விசுவாசத்துடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
.
பிரியமானவர்களே, நம்மையும் மீறி சில காரியங்கள் நடக்கும்போது, நாம் கவலைப்படுவதும், வருத்தப்படுவதும் இயற்கை. ஆனால் அதையே நினதை;து நினைத்து, படுக்கும்போதும், உட்காரும்போதும், நடக்கும்போதும் சிந்தித்து நம்மையே வருத்திக் கொண்டிருப்பது தேவையற்றது. 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' என்ற வசனத்தின்படி நம்முடைய கவலைகளை கிறிஸ்துவின் மேல் வைத்துவிட்டு, நம்முடைய கவலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். அவர் மற்றதை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக