.
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. - (பிலிப்பியர் 2:4).
.
பிரியமானவர்களே, தீர்க்கமுடியாத வியாதி, எதிர்பாராத மரணம் நம் இருதயத்தை சுக்கு நூறாக உடைத்து விடும் என்பது உண்மையே. உலகமே இருண்டு விடும், வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும், விரக்தி ஏற்படும். இவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே! இந்த சூழ்நிலையில் நம் துயரை மட்டுமே எண்ணி எண்ணி முடங்கி விடுவோமானால், நமது நிலை பரிதாபமே. அதே வேளையில் பிறர் மீதும் அக்கறை கொண்டு, கனிவாக விசாரித்து அவர்களின் துயரத்தில் நம்மால் இயன்ற உதவிகளை செய்து ஆறுதல் அளிப்போமானால், நமது துக்கம் மறந்து துரும்பாக மாறும் என்பது உண்மை. காலப்போக்கில் நமது துயரையே மறந்து விடுவோம். ஆகவே நமது வீட்டிலுள்ள சிறுசிறு பிரச்சனைளையும், துயரங்களையும் வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சொல்லி புலம்பி கொண்டேயிராமல், பிறரை அன்போடு விசாரித்து, ஆறுதல் சொல்லுங்கள். எனது சுமையை சுமந்தது போதும், பிறருக்கு ஆறுதலாய் வாழ்வேன் என முடிவெடுங்கள். ஒரே ஒரு வாழ்வு, அதை சுயநலமாயல்ல, பிறர் நலனுக்காய் வாழ்வேன் என தீர்மானியுங்கள். சுவையற்ற இருண்ட உங்கள் வாழ்வு சுகமாய் மாறிவிடும்.
வேதத்திலே ஒரு சம்பவம் உண்டு. தேசத்திலே நிலவிய பஞ்சம் காரணமாக நகோமி எலிமெலேக்கு தம்பதியினர் மோவாப் தேசத்திற்கு செல்கின்றனர். அங்கே குடியிருந்து தன் இரு மகன்களுக்கும், அங்கேயே பெண் எடுக்கின்றனர். எதிர்பாராதவிதமாக நகோமி தன் கணவனையும், இரு மகன்களையும் இழந்து விடுகிறாள். இப்போது தன் தேசத்திற்கு திரும்புகிறாள். அவளுடன் இரு மருமகள்களும் வருகின்றனர். அவர்கள் இருவரையும் தகப்பன் வீட்டிற்கு போகும்படி வேண்டுகிறாள். அதில் மூத்தவள் தன் எதிர்காலத்தை எண்ணி புது வாழ்க்கை அமைத்து கொள்ளலாம் என்று சென்றுவிட்டாள். ஆனால் இளைய மருமகள் ரூத்தோ தன் மாமியாரை விடவில்லை. 'உம்மோடே வருகிறேன்' என தன் வாழ்வை குறித்து சிறிதும் யோசிக்காமல் கிளம்பினாள். என் மாமி எல்லாவற்றையம் இழந்து வெறுமையாய் செல்கிறார்களே, அவர்களது வெறுமையை நிரப்ப நான் அவர்களோடு செல்வேன், என் மாமியாருக்கு ஆறுதலாய் இருப்பேன்' என எண்ணியவளாக தன் துன்பத்தை மறந்து மாமியாரோடு செல்கிறாள் ரூத். தனக்கானதை அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கின ரூத், இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்று, இயேசுகிறிஸ்துவின் பாட்டியானாள்.ரூத்தை போல நாமும் மற்றவருக்காக வாழ கத்துகொல்லுவோம் கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்க உயர்த்த மேன்மைபடுத்துவார். கர்த்தர் தாமே உதவி செய்வாராக . ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக