புதன், 7 மே, 2014

இரட்சிப்பின் வழி

..............................இரட்சிப்பின் வழி.................................
.
'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. - (ரோமர் 10:9-10).

வேதம் சொல்கிறது, 'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. ஆம், இதுதான் இரட்சிப்பு. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை 'ஆண்டவரே நான் உம்மை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன், என்று வாயினாலே அறிக்கையிட்டு, நீர் என் பாவங்களுக்காக சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன்' என்றும் விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்ததை வாயினால் அறிக்கை செய்யும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். அல்லேலூயா!
.
கர்த்தரின் வருகை சமீபமாயிருப்பதினால், நாம் எவ்வளவு துரிதமாய் கர்த்தரை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அத்தனை துரிதமாய் ஏற்றுக் கொள்ளவேண்டும். கால தாமதம் செய்வதுக்கூடாது. அந்திக்கிறிஸ்து வருவதற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்து விட்டது. அவன் வருவதற்குள் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நாம் எடுத்துக் கொள்ளும்படியாக நாம் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். 'யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்' (மத்தேயு 11:12). ஆம், பலவந்தமாகவோ, இல்லாமலோ பரலோக ராஜ்யத்திற்கு தயாராகும்படி எச்சரிக்கிறார்கள். நாம் அதைப் பிடித்துக் கொள்வோமானால், நித்திய ஜீவன் நமக்கு உண்டு.
.
கர்த்தரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். கீழ்க்கண்ட ஜெபத்தை விசுவாசத்தோடு கூறுவோம். பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக