ஞாயிறு, 30 மார்ச், 2014

கனி கொடுக்க வேண்டும்

.................கனி கொடுக்க வேண்டும்....................

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். - லூக்கா 13:8,9.

.

ஒரு வாலிபன் தன் வாழ்வில் விரக்தியடைந்தவனாக தன் வேலையை, தன் உறவுகளை, தன் ஆவிக்குரிய வாழ்க்கையை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தன் வாழ்வையே முடித்துக் கொள்ள எண்ணி காட்டுப் பக்கம் சென்றான். தன் வாழ்வை முடிப்பதற்கு முன் கர்த்தரிடம் ஒரு வார்த்தை பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், 'ஆண்டவரே, நான் ஏன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு காரணத்தை உம்மால் கூற முடியுமா'  என்று ஆண்டவரிடம் கேட்டான்.

.

அப்போது ஆண்டவர், 'உன்னைச் சுற்றி இருக்கிற இந்தக்காட்டில் அந்த மூங்கில் மரத்தையும் அந்த பரணிச் செடியையும் (fern) பார்'. என்றார். 'ஆம் ஆண்டவரே, பார்ககிறேன்'  என்று அந்த வாலிபன் கூறினான். ஷநான் இந்த மரங்களை இந்தக் காட்டில் விதைளை இட்டபோது இவைகளை நன்கு கவனித்துக் கொண்டேன். இவற்றிற்கு நல்ல தண்ணீர் கொடுத்தேன், நல்ல சூரிய வெளிச்சத்தைக் கொடுத்தேன். இரண்டையும் ஒரே மாதிரியாக வளர்த்தேன். பரணிச்செடி சீக்கிரமாய் பூமியிலிருந்து முளைத்து எழும்பிற்று. இந்த நிலம் முழுவதையும் தன் பச்சை இலைகளினால் அழகாக நிரப்பிற்று. ஆனால் இந்த மூங்கில் விதையோ ஒன்றும் வெளியே கொண்டு வரவில்லை. ஆனால் நான் அந்த மூங்கிலை போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.

.

இரண்டாவது வருடமும் பரணிச்செடி அழகாக வளர்ந்தோங்கியது, ஆனால் மூங்கில் விதையிலிருந்து ஒன்றும் வரவில்லை. ஆனால் அதை அப்படியே நான் விட்டுவிடவில்லை.

.

அதே மாதிரி, மூன்றாம் நான்காம் வருடத்திலும் அந்த மூங்கில் விதையிலிருந்து ஒன்றும் வெளிவரவில்லை. ஆனால் அதை நான் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.

.

ஐந்தாவது வருடத்தில் ஒரு சிறு முளை அந்த விதையிலிருந்து முளைத்தெழும்பியது. பரணிச் செடியோடு வைத்துப்பார்க்கும்போது இந்த மூங்கில் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஆறே மாதத்தில் இ;ந்த மூங்கில் மரம்  100 அடி உயரத்திற்கு உயரமாக வளர்ந்து பெரிதாக மாறியது. இந்த ஐந்து வருடங்களில், இந்த மூங்கில் மரம் கீழே வேர் விட்டு, மேலே உயர்ந்து வளர்வதற்கு பலத்ததை கொடுத்தது. அதுப் போல மகனே, நீ கஷ்டப்பட்ட வருடங்களில் உண்மையாக நீ வேர் விட்டுக் கொண்டிருந்தாய். இந்த மூங்கில் மரத்தை நான் எப்படி கைவிட்டுவிடவில்லையோ அதுப் போல உன்னையும் நான் விட்டுவிடவில்லை. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதிருப்தி அடையாதே. பரணிச்செடியை நான் வைத்ததற்கு ஒரு நோக்கம்; உண்டெனறால், மூங்கிலுக்கு வேறு ஒரு நோக்கம் உண்டு. ஆனால் இரண்டுமே இந்த காட்டை அழகுப்படுத்துகிறது.  அதுப் போல உன்னுடைய நேரமும் வரும், உன் நிலைமையும் மேலே உயரும் அது வரை பொறுத்திரு, என்றார்.

.

நம் ஆண்டவர் நம்மை கனி கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். நாமோ கனிக் கொடாதிருக்கும்போது அவர் நம்மை விட்டு விடுவதில்லை. இந்த வருடமும் இருக்கட்டும் என்று சுற்றிலும் கொத்தி, எருப் போட்டு நம்மை வளர்க்கிறார். நம்மை ஒருபோதும் சுத்தபடுத்தி, எருப் போடுவதை அவர் நிறுத்துவதே இல்லை. அடுத்த வருடமாவது கனிக் கொடுக்க மாட்டோமாவென்று அவர் தொடர்ந்து காத்திருக்கிறார்.

.

கர்த்தரே நம்மை நிறுத்தாமல் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கும்போது நாம் ஏன் விரக்தியடைய வேண்டும்? நல்ல நாட்கள் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. கெட்ட நாட்கள் நமக்கு படிப்பினையைக் கொடுக்கின்றன. இரண்டுமே வாழ்வில் முக்கியம். எவ்வளவு கஷ்டப்படுகிறீர்களோ அந்த அளவு நீங்கள் பலம் மிகுந்தவர்களாக மாறுகிறீர்கள். எந்த அளவு நீங்கள் துன்பங்களை சகிக்கிறீர்களோ, அந்த அளவு சகிப்புத் தன்மையும், பொறுமையும் நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள். கீழே வேர் பற்றி மேலே கனிக் கொடுப்பீர்கள். ஆகையால் உங்கள் இருதயத்தை தளர விடாதீர்கள். கர்த்தர் நம்மை விட்டுவிடவில்லை. ஆகையால் தைரியம் கொண்டு கர்த்தருக்காக வாழுங்கள். கனி கொடுங்கள். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3764-11th-march-2014-&Itemid=56

தேவனுடைய வார்த்தையாகிய வேதம்

.............தேவனுடைய வார்த்தையாகிய வேதம்..............

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).

.

ஒருஇங்கிலாந்து தேசத்தில் பிராங்க்மாரிசன் என்ற வக்கீல் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முழு நாத்திகர். அவர் இயேசுவைப் பற்றி எண்ணியிருந்த கருத்து என்னவென்றால், 'ஒருவேளை இயேசு என்ற ஒருவர் இந்த உலகில் பிறந்து, போதனை செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மரணமடைந்து பின்னர் உயிரோடெழுந்தார் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது' என்பதுதான். இவர் தனது கருத்தை தானே அடிக்கடி மெச்சிக் கொள்வார். மேடைகளிலும் இதனை குறித்து சொற்பொழிவாற்றுவார்.

.

திடீரென்று ஒரு ஆசை வந்தது. தன் திறமை எல்லாவற்றையும் செலவிட்டு இயேசு உயிரோடு எழும்பவில்லை என்பது சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதிவிட்டால், அது காலங்காலமாக மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுமே என்றெண்ணினார். மறுநாளே புத்தகம் எழுத உட்கார்ந்து விட்டார். வேதத்தை மறுத்து எழுத வேண்டுமென்றால், முதலில் வேதத்தை முழுவதுமாக படிக்க வேண்டுமல்லவா?.

.

மாரிசன் தாமதிக்கவில்லை. பரிசுத்த வேதாகமத்தை இரவு பகலாக படித்தார். வாசிக்க, வாசிக்க மறுப்பு வருவதற்கு பதிலாக வியப்பும் திகைப்பும் வந்தது. இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க கண்ணீர் வந்தது, தான் எத்தனை பெரிய பாவி என்று உணர்ந்தார். கடைசியாக புத்தகம் எழுதினாரா? ஆம், எழுதியே விட்டார். ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று எழுதுவதற்கு பதிலாக, 'இயேசு நிச்சயமாகவே உயிர்த்தெழுந்தார்' என்று ஆக்கபூர்வமான புத்தகம் எழுதி முடித்தார். இவர் எழுதிய புத்தகம்தான் ஆங்கிலத்தில் மிகவும் புகழ்பெற்ற நூலான “Who Moved the Stone”  என்ற புத்தகமாகும்.

.

பயங்கரமான நாத்திகர்களையும் ஆஸ்திகர்களாக மாற்ற வல்லது நம் தேவன் தந்த பரிசுத்த வேதாகமம்தான். நிறைகளை மாத்திரம் சொல்லாமல், ஒரு மனிதன் செய்த குற்றங்களையும், அதினால் ஏற்பட்ட விளைவுகளையும், உள்ளதை உள்ளபடி சொல்வதால்தான் அது சத்திய வேதம் என்று பெயர் பெற்றது.

.

ஒரு மனிதனை மாற்ற வல்லது வேதாகமம்தான். அதை உள்ளன்போடு கர்த்தர் என்னோடு பேசுமே என்று பயபக்தியோடு  படிப்பவர்கள் தாங்கள் இருந்தபடி இருக்க மாட்டார்கள். பரிசுதத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற்று, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவார்கள்.

.

ஒரே வசனத்திலிருந்து பலவித பிரசங்கங்களை செய்ய முடியும். விதவிதமான கருத்துக்களை சொல்ல முடியும். ஏனெனில் 'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'. ஆம், அந்த வார்த்தைகள், ஜீவனுள்ளது, வல்லமையுள்ளது. பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க வல்லது. அந்த அற்புத வார்த்தைகளை கவனத்தோடும், அன்போடும், ஆழமாயும் வாசிப்போம். நேசிப்போம். நம் வாழ்க்கை மாறும். நம் நினைவுகள் மாறும், நம் சிந்தனைகள் மாறும். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3772-13th-march-2014-&Itemid=56

நிறைவாக்குகிற தேவன்

 .........................நிறைவாக்குகிற தேவன் ..........................

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். - பிலிப்பியர் - 4:11 .

அப்போஸ்தலனாகிய பவுல்,  'தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு'  என்று பிலிப்பியரில் கூறுகிறார். என்ன ஒரு சவால் விடும் வசனம்! நமக்கு நாம் இருக்கும் இடத்திலிருந்து ஏதோ வேலையாக வேறிடத்திற்கு வரும்போது  கொஞ்சம் வசதிகள் குறைவாக இருந்தால், எத்தனை முறுமுறுப்பு, எத்தனை வாக்குவாதங்கள். மிகவும்படித்த மேதையான பவுல், கிறிஸ்துவுக்காக தனது மேன்மை கல்வி எல்லாவற்றையும் இழந்து தைரியமாக சொல்கிறார்,  தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் என்று.
.
நாமும் யாருக்கும் குறைந்தவர்களல்ல, ஆனால் எந்தக் குறைவிலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு அது இல்லையே இது இல்லையே என்று முறுமுறுத்துக் கொண்டிருக்காமல், தேவன் நமக்கு என்று கொடுத்திருக்கிறதை சந்தோஷமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். குறைவிலும் நிறைவாயிருக்க கற்றுக் கொண்டோமானால் நம்மை வெல்வதற்கு யாருமில்லை.
.
நம்முடைய குறைவுகளை எல்லாம் நிறைவாக்குகிற தேவன் இயேசுகிறிஸ்து நம்மோடிருப்பதால் நாம் எதைக் குறித்தும் கலங்க தேவையில்லை. அப்போஸ்தலனாகிய பவுலினால் குறைவுகளிலும் நிறைவாகயிருக்க முடியும் என்றால் ஒரு பீத்தோவனால் முடியும் என்றால் ஏன் நம்மால் முடியாது? நம் குறைவுகளிலும் தேவனுக்கென்று சாதிப்போம், நிறைவாக வாழ்ந்துக் காட்டுவோம். ஆமென் அல்லேலூயா!

வெள்ளி, 28 மார்ச், 2014

கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது


.........கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது...........

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். -

(1கொரிந்தியர்11:26-27).

.
கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கைப்போட முடியாது. அதில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் தங்களுடைய பாவ நிலைமையை உணர்ந்து கர்த்தரோடு ஒப்புரவாகிப்பின்தான் பந்தியில் பங்கு பெற வேண்டும்.

.

அநேக சபைகளில் பந்தி பறிமாறுவதற்கு முன் போதகர்கள் எச்சரிக்கை செய்தியைக் கொடுப்பதில்லை. நேராக பந்திக்கு சபையாரை அழைத்து சென்று விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். போதகர்கள் பறிமாறுமுன், சபையை எச்சரித்துப் பின்னரே பந்தியை பறிமாற வேண்டும்.

.

'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' (1 கொரிந்தியர் 11:28-30) என்று வேதம் எச்சரிக்கிறது.

.

பேட் நோவாக் என்னும் போதகர் ஒரு ஆஸ்பத்திரியில் உள்ள சிறு ஆலயத்தில் போதகராக இருந்தபோது, அங்கு வேலை செய்யும் நர்சுகள் அவரிடம் ஜான் என்பவரைப் பற்றி தெரிவித்தார்கள். ஜானுக்கு அநேக டெஸ்ட்டுகள் செய்தும், எல்லாமே நார்மலாக இருந்தது. ஆனால் மனிதர் மிகவும் மெலிந்து போய்க் கொண்டு இருந்தார். டாக்டர்களுக்கு என்ன வியாதி என்றே தெரியாமல் இருந்தது.

.

ஒரு நாள் அவர் ஜானிடம் போய் பேச ஆரம்பித்தார். அப்போது ஆவியானவர் அவருடைய உள்ளத்தில் கர்த்தருடைய பந்தி எடுக்க ஆயத்தமா என்று கேட்க சொன்னார். போதகர் அவரிடம் அப்படி கேட்;டபோது, உடனே அவர், 'இல்லை, என்னால் எடுக்க முடியாது, நான் பாவி, என் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதவை' என்று கதற ஆரம்பித்தார்.

.

போதகர் பேட் அவரிடம், 'அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' என்று வசனத்தை சுட்டிக்காட்டி, கர்த்தரிடம் தன் பாவத்தை அறிக்கை செய்ய சொன்னார். அப்படியே அவர் தன் பாவத்தை அறிக்கை செய்தப்பின், பேட் அவரை அணைத்துக் கொண்டு, உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது, கர்த்தர் எல்லாவற்றையும் மன்னித்து மறந்து விட்டார். இப்போது நீங்கள் பந்தியில் பங்கு பெற விருப்பமா? என்று கேட்டபோது, அவர் ஆம் என்று கூறினார்.

.

அதன்படி அவர் பந்தியை ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்து, மீண்டும் அந்த வசனங்களை ஞாபகப்படுத்தி, அவருக்கு கொடுத்தபோது, அவர் அதை வாங்கி புசித்தார். அநேக வாரங்களுக்குப்பின் அவர் அன்றுதான் அப்பத்தை முதன் முதலாக புசித்தார். பாத்திரத்தையும் வாங்கி, குடித்தபோது, அவர் விடுதலையாக்கப்பட்டார். பின் மூன்று தினங்களுக்குள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக்கப்பட்டார். இது உண்மையில் நடந்த சம்பவம் ஆகும்.

.

பிரியமானவர்களே, கர்த்தருடைய பந்தியில் இரண்டு காரியங்களும் இருக்கிறது. பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது ஆசீர்வாதமாகவும், அபாத்திரமாக எடுப்பவர்களுக்கு அது ஆக்கினை தீர்ப்பாகவும் மாறுகிறது. பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது நோயை தீர்க்கும் மருந்தாக மாறியது உண்டு, சாபங்கள் மாறியது உண்டு, பாவங்கள் மாறியது உண்டு. ஆசீர்வாதமாக மாறியது உண்டு.

.

ஆனால் அபாத்திரமாய் அதில் பங்கு பெறுபவர்களுக்கு, அது ஆக்கினை தீர்ப்பாக மாறுகிறது. அதனால் பலவீனர்களும், வியாதியுள்ளவர்களுமாய் மாறியிருக்கிறார்கள். சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

.

ஆகையால் இந்த பரிசுத்த பந்தியில் பங்கு பெறுவதற்கு முன் நம்மை நாமே ஆராய்ந்து, 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்' என்ற வசனத்தின்படி, நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளாக தீர்க்காதபட்சத்தில், கர்;த்தரோடு ஒப்புரவாகி, பின் பந்தியில் பங்கு பெற வேண்டும்.

.

அப்படி பாத்திரமாய் பங்கு பெறுபவர்களுக்கு இயேசுகிறிஸ்து 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' என்று வாக்குதத்தம் செய்திருக்கிறார். பாத்திரமாய் பங்கு பெற்று நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3776-14th-march-2014-&Itemid=56

நடப்பதெல்லாம் நன்மைக்கே

.....................நடப்பதெல்லாம் நன்மைக்கே......................

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

- (ரோமர் 8:28).

.
ஆப்பிரிக்க நாட்டிற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக ஒரு ஊழியர் புறப்பட்டார். எதிர்பாராத விதமாக அவர் ஒரு விபத்துக்குள்ளானார். அதில் அவர் தன் காலை இழக்க வேண்டிதாயிற்று. அதனால் அவருடைய உறவினர்களு;ம், நண்பர்களும் அவரை மனம் சோர்ந்து போகப் பண்ணினது மாத்திரமல்லாமல், மிஷனெரி பணிக்கு போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவரோ மரக்கால் ஒன்றைப் பொருத்திக் கொண்டு மிஷனெரியாக ஆப்ரிக்க நாட்டிற்கு சென்றார்.

.

ஒருமுறை அங்கே இருந்த காட்டுமிராண்டி ஜாதியார் அவரைப் பிடித்து தாங்கள் வசித்த அடந்த காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்றனர். அவர் தன் ஜீவனுக்காக அந்த மக்களிடம் மன்றாடிப் பார்த்தார். ஆனால் அவர்களோ அவருடைய மாமிசத்தை புசிக்கும் நோக்கத்திலே கருத்தாயிருந்தார்கள்.

.

அந்த காட்ட மிராண்டியின் தலைவன் அவருடைய காலை கத்தியால் ஓங்கி வெட்டினான். என்ன ஆச்சரியம்! இரத்தம் வரவில்லை, காரணம், அது மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. மரத்திலான கால்களை அவர்கள் அதற்கு முன்பு பார்த்தேயில்லை. ஆகையால் அவரை தெய்வீகப்பிறவி என்றும் கடவுளின் அவதாரம் என்றும் எண்ணி, அவருக்கு பயந்து நடுங்கினார்கள்.

.

மட்டுமல்ல, அவர் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கும் செவிக் கொடுத்தார்கள். அப்பொழுதுதான் அந்த ஊழியருக்கு கர்த்தர் ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தை அனுமதித்தார் என்பதை உணர முடிந்தது. பின் முப்பது ஆண்டுகள் வெற்றிகரமாக ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்.

.

சில வேளைகளில் நாம் அறியாத சில காரியங்களை தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிப்பார். அது ஒருவேளை வியாதி, பெலவீனம், கவலை, இழப்பு, துன்பம் இப்படி எதுவாகிலும் இருக்கலாம். அப்பொழுதெல்லாம் ஏன் ஆண்டவரே இப்படி நடக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். சிலவேளைகளில் முறுமுறுக்கவும் செய்கிறோம்.

.

'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்' என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் நம்முடைய வாழ்வில் நடப்பது எல்லாமே அவருடைய சித்தத்தின்படியும், அவருடைய திட்டத்தின்படியும்தான். அதுவும் எல்லாம் நன்மைக்கு ஏதுவாகவே இருக்கும்.

.

ஆகவே அவருடைய திட்டத்திற்கும், சித்தத்திற்கும் நம்மை ஒப்புக் கொடுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு நம்மை அர்ப்பணிப்போம். எல்லாவற்றையும் நன்மையாக தேவன் மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3791-18th-2014-&Itemid=56

தேவனின் தெரிந்தெடுப்பு

..........................தேவனின் தெரிந்தெடுப்பு..........................


வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - (சங்கீதம் 118:22-23).

.

முற்காலத்தில் கல்வி கற்றோரின் சதவிகிதம் ஏறக்குறைய வளர்ந்த நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் பின்தங்கியிருந்தது. இருப்பினும் தங்கள் குழந்தைகளை எப்படியாகிலும் கல்வி கற்க வைக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்பினர். இதறகாக அவர்கள் அதிக பிரயாசமெடுத்தனர். இந்த சூழ்நிலையில் ஒரு விவசாயி இங்கிலாந்தின் நாட்டுப்புறத்தில் தனது மகனை தொடக்கப்பள்ளி ஒன்றில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படிக்க வைத்தார். அப்பையன் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்ததும் உயர்நிலை பள்ளிக்கு செல்ல நகருக்கு செல்ல வேண்டியதாருந்தது. அது ஐந்து மைல்களுக்கும் அதிகமாக இருந்ததால் அந்த தகப்பன் தன் மகனை தோளின் மீது சுமந்தே சென்றார்.

.

பள்ளிக்கு சென்றதும் தலைமையாசிரியர் அவனுக்கு ஒரு நுழைவுத்தேர்வு வைத்தார். அதில் அவன் தேர்ச்சியடையாததால் அவனை தன் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாதென்று புறக்கணித்தார். ஆனால் தகப்பன், தலைமையாசிரியரை நோக்கி, அவனை இதுவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததையும், அன்று அவனை தூக்கி சுமந்தே கொண்டு வந்ததையும அவரிடம் கூறி அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சி மன்றாடினார். அவர் மீது இரக்கம் கொண்டு தலைமையாசிரியர் அந்த பையனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து ஆஸ்திரேலிய நாட்டின் வரைப்படத்தை வரைய சொன்னார். அச்சிறுவன் எவ்வித அடித்தலுமின்றி அப்படியே வரைந்து கொடுத்தான். அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பள்ளியில் இடம் கொடுத்தார். தகப்பனார் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

.

அந்த சிறுவன் யார் தெரியுமா? அவர்தான் இங்கிலாந்து ஜனாதிபதியான லார்ட் வின்சென்ட் சர்ச்சில் ஆவார். சர்ச்சில் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார். வல்லரசு நாட்டிற்கு தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவரின் பின்னணி இப்படியாக இருந்தது.

.

ஆம் நம் தேவனின் தெரிந்தெடுப்பை மனித மூளையால் கணிக்க முடியாது. அவர் ஞானிகளை வெட்க்கப்படுத்தும்படி பைத்தியங்களை தெரிந்து கொள்பவர். பலவான்களை வெட்கப்படுத்தும்படி பலவீனரை தெரிந்து கொள்பவர். உள்ளவைகளை அவமாக்கும்படி இல்லாதவைகளையும் அற்பமானவைகளையும் தெரிந்து கொள்பவர். ஆம், ஆடுகளின் பின்னால் அலைந்த தாவீதை இராஜாவாய் அபிஷேகம் பண்ணினவர். தாய் தகப்பனற்று எதிர்கால நம்பிக்கையற்றிருந்த எஸ்தரை இராஜாத்தியாய் உயர்த்தினவர் நம் தேவன்.

.

இவன் எல்லாம் தெரிந்தவன், என்ற தகுதியால் தேவன் ஒருவரையும் தெரிந்தெடுப்பதில்லை. அவரது தெரிந்தெடுப்பு வித்தியாசமானது, விசேஷமானது!

.

பிரியமானவர்களே, ஐயோ நான் ஒன்றுக்கும் தகுதியில்லையே, வீட்டில் யாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரன் இல்லையே என்று நினைக்கிறோமா? பூமியின் கடையாந்திரத்தில் ஒரு புழுவைப் போல எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த என்னை தேவன் தெரிந்துக் கொள்ள முடியுமானால், உங்களையும் தெரிந்துக் கொள்வது நிச்சயமல்லவா?

.

தேவனின் தெரிந்தெடுப்பு இல்லாதவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், யாருடைய கவனமும் ஈர்க்காத, ஈர்க்கமுடியாதவர்களையும் சந்திக்கிறது. அவர்களை தகுதிப்படுத்தி கர்த்தர் தமக்கென்று உபயோகப்படுத்துகிறார். எத்தனையோப் பேர் சொல்ல முடியும், நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்திருந்தேன், தேவன் என்னை தெரிந்தெடுத்து பயன்படுத்துகிறார் என்று.

.

'ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்' (2தீமோத்தேயு 2:21) என்ற வசனத்தின்படி கர்த்தரால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட எவரும், எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாக முடியும். ஆகாது என்று மற்றவர்களால் தள்ளப்பட்டவர்களே அவருக்கு உபயோகமான பாத்திரமாக மாற்றப்பட்டு, அவருக்காக எழும்பி பிரகாசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பாத்திரமாக தேவன் நம்மையும் எடுத்து உபயோகிப்பாராக. ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3813-26th-march-2014-&Itemid=56

The Pentecostal Mission: TPM - International Convention - 2014 Live























வியாழன், 27 மார்ச், 2014

நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு

.....................நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு...................


உங்கள்வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.... இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். -  (1 கொரிந்தியர் 12:4,5,11).

.

பழங்காலத்தில் வழக்கத்தில் கதை ஒன்று உண்டு. தேவன் இந்த உலகத்தை படைத்தபோது, உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு தூதனை பாதுகாக்கும்படி நியமித்தார். மனிதனுக்கு, கடல் வாழ் ஜீவ ராசிகளுக்கு, காட்டில் வாழும் மிருகங்களுக்கு, மரங்களுக்கு, பூக்களுக்கு என்று எல்லாவற்றிற்கும் ஒரு தூதனை காக்கும்படி நியமித்தார்.

.

அப்போது புல்லை பாதுகாக்கும்படி அதற்கும் ஒரு தூதனை நியமித்தார். ஆனால் அந்த தூதன் அதில் விருப்பப்படவில்லை. இதை பாதுகாக்க நான் என்ன செய்வது? அது தானாகவே வளர்ந்து பெருகும். இதை பாதுகாக்க நான் செய்யப் போவது ஒன்றும் இல்லை என்று புறக்கணித்து விட்டு, ஒன்றும் செய்யாமல் அந்த தூதன் சென்று விட்டான்.

.

காலங்கள் மாறினபோது, புல் காய்ந்து போனது. பூக்கள் வாடிப்போனது, ஏனெனில் புல் காய்ந்து, அதன்மேல் பனித்துளிகள் நிற்காத காரணத்தினால். நாட்டில் வாழும் பசுக்கள், மாடுகள், ஆடுகள், காட்டில் வாழும் மான்கள் போன்றவை புல் இல்லாமல் பசியால் வாடின.

.

தேவன் அந்த தூதனை நோக்கி, 'நான் உனக்கு கொடுத்த வேலை சிறியதா? பெரியதா? பார் நீ பாதுகாக்காததால் புல் இல்லாமல் உயிரினங்கள் தவிப்பதை? இதில் உனக்கு சந்தோஷமா?' என்று கேட்டார்.

.

அப்போதுதான் தன் தவறை உணர்ந்த தூதன், தேவனிடம் மன்னிப்புக் கேட்டு, தன் சிறிய வேலையிலும் எத்தனை அரிய காரியங்கள் உண்டு என்பதை உணர்ந்து, தன் வேலையை செய்ய துவங்கினான்.

.

பிரியமானவர்களே, நமக்கும் சபையில் சிறிய வேலைதான் கொடுக்கப்பட்டிருக்கலாம், அல்லது நாம் வேலை செய்யும் இடங்களில் நம்மோடு வேலை செய்பவர்களை விட நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு சிறியதாக இருக்கலாம். நான் படித்த படிப்பு என்ன? என்னுடைய அறிவு என்ன? நான் இதை எப்படி செய்யலாம் என்று நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்பை அல்ல தட்டாமல், நம்மை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையோடும், நேர்மையோடும் செய்வோம்.

.

அதைக்காணும் தேவன் நாம் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கிறதை பார்த்து, நம்மை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார். ஆனால் நாம் நம் உள்ளத்தில் இது என்ன வேலை என்று வேண்டா வெறுப்பாக செய்வோமானால், அதையும் தேவன் காண்பார்.

.

'வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்' என்று வேதம் கூறுகிறது. ஆவியானவரே நமக்கு பகிர்ந்து கொடுக்கிற வரங்களிலும், ஊழியங்களிலும் உண்மையாக இருப்போம்.

.

ஆரம்பத்தில் உண்மையாக இருந்த பலர், அதினிமித்தமாக கர்த்தர் உயர்த்தும்போது, பெருமையின் நிமித்தமாக விழுந்து போயிருக்கிறார்கள். கர்த்தர் நம்மை உயர்த்தும்போது நாம் நம்மை அதிகமாக தாழ்த்துவோமானால் இன்னும் அதிகமாக உயர்த்தப்படுவோம்.

.

அநேகருக்கு கர்த்தருக்காய் உழைக்க வேண்டும் என்கிற வாஞ்சை உண்டு. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் கனி நிறைந்த ஜீவியம் இல்லாதபடியால், ஆவியானவரின் கனியாகிய அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஆவியானவர் விரும்பும் கனி இல்லாதிருப்பதால் அவர்களை கர்த்தர் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

.

அதே சமயம் கனி கொடுக்கிறவர்கள் என்று ஆவியானவர்  நம்மை நம்பி கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில், பொறுப்பில் உண்மையோடு இருப்போம். கர்த்தர் பார்க்கிறார் என்கிற உணர்வோடு செய்வோம். இந்த சிறிய பொறுப்புதானா என்றோ, இந்த சிறிய வேலைதானா என்றோ முறுமுறுப்போடு செய்யாமல், நம்மால் இயன்ற அளவு சிறப்பாக செய்வோம். சிறிய வேலைக்கும் அதற்கேற்ற பொறுப்பு உண்டு. பலன் உண்டு. கர்த்தர் அதை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நம்மை ஏற்றக்காலத்தில் உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3805-24th-march-2014-&Itemid=57

தேவ கட்டளையை நிறைவேற்றுவோம்

................தேவ கட்டளையை நிறைவேற்றுவோம்...................

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. - (மத்தேயு 7:21).

.
ஒரு நாட்டில் அதில் வாழும் மக்கள் தங்களை மீனவர்கள் என்று சொல்லி கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாழ்கின்ற இடம் முழுவதும் ஏரிகளும், ஆறுகளும், குளங்களும் அதிகமாய் இருந்தன. அவற்றில் அநேக சிறிய மீன்களும், பெரிய மீன்களும் அதிகமாய் இருந்தன.

.

ஆனால் அந்த மக்கள் தங்களை மீனவர்கள் என்று சொல்லி கொள்வதில் ஆர்வமாய் இருந்தார்களே ஒழிய, ஒருவரும் போய் மீன் பிடிக்க விருப்பப்படவில்லை. அவர்களின் ராஜா, அந்த மக்களின் சோம்பலை நன்கு அறிந்திருந்தார். ஆகையால் ஒரு நாள், 'நான் சற்று காலம் மற்ற ஒரு நாட்டிற்கு போக வேண்டி இருக்கிறது, நீங்கள் அனைவரும் மீனவர்கள், நான் வருவதற்குள் அனைவரும் மீன் பிடிக்க வேண்டும்' என்று கட்டளையிட்டு விட்டு சென்றார்.

.

அந்த மக்கள் ஒவ்வொருவரும், அவர் எனக்கு சொல்லவில்லை, மற்றவர்களுக்குத்தான் சொன்னார் என்று நினைத்து கொண்டு ஒருவரும் மீன் பிடிக்க போகவில்லை. ஒவ்வொரு வாரமும் அமைச்சர்கள் முதல் கொண்டு அனைவரும் கூடி மீன் வளர்ப்பு மையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டம் கூடி பேசினார்கள். ஆனால் ஒருவரும் மீன் பிடிக்க போகவில்லை. மீன் எப்படி பிடிக்க வேண்டும் என்கிற புத்தகம் அப்போது மிகவும் பிரபலமாக விற்கப்பட்டது. அனைவரும் அதை வாங்கினார்கள், ஆனால் யாரும் அதை படிக்கவில்லை.

.

நாட்டின் ஒவ்வொரு பட்டணத்திலும் எப்படி மீன் பிடிப்பது என்று சிறந்த மீனவர்களால் பாடம் சொல்லி தருவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டது, அதன்படி அவர்களும் சொல்லி தந்தார்கள். மக்கள் நினைத்தார்கள், அவர்களே போய் மீன்பிடித்து வருவார்கள் என்று. ஆகவே யாரும் மீன் பிடிக்க போகவில்லை. அநேக மீன்களை பிடித்தால் எங்கு வைப்பது என்று திட்டமிடப்பட்டு, அதற்கென்று பெரிய ஸ்டோர் ரூம் கட்ட வேண்டுமென்று ஒவ்வொரு கூட்டத்திலும் அதற்கென்று பணத்தை வசூலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் யாரும் மீன்பிடிக்க போகவில்லை. ஸ்டோர் ரூமும் கட்டி முடிந்தது, ஆனால் யாரும் மீன் பிடிக்க போகாததால், அந்த அறைகள் காலியாக இருந்தன.

.

ஒரு நாள் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜா நாட்டிற்கு திரும்ப வந்தார். அவர் பார்த்தபோது, ஸ்டோர் அறைகள் எல்லாம் காலியாக இருந்தன. ராஜா மிகவும் நல்லவர், தாம் சொன்ன கட்டளையை மறந்திருப்பார், அப்படியே நினைவில் இருந்தாலும், நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் மன்னித்து விடுவார் என்று அனைவரும் அமைதியாக நின்றார்கள். ராஜாவின் நியாயசன சிங்காசனத்தின் முன் அனைவரையும் ஒவ்வொருவராக ராஜா வர சொன்னார்.

.

ஓவ்வொருவரும் வந்து நின்றபோது, அவர் அவர்களை நோக்கி, 'ஒருக்காலும் நான் உங்களை அறியவில்லை, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று அவர்களை அவர் சமுகத்தினின்று துரத்தி விட்டார்.

.

பிரியமானவர்களே, இயேசுகிறிஸ்துவும் தாம் பரலோகத்திற்கு சென்றபோது, 'நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்று கட்டளை கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அவர் தங்களுக்கு சொல்லவில்லை என்று அநேகர் ஒன்றும் செய்யாமலேயே கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதர்களை பிடிக்கிறவர்களாக இன்னும் போகவில்லை, அநேகர் அதற்கென்று படிப்புகளை படித்திருக்கிறார்கள், ஆனால் வசதியாக தங்களுடைய இடத்திலேயே சுகமாக அமர்ந்திருந்திருக்கிறார்களே தவிர மனிதர்களை பிடிக்க போகவில்லை, மனிதர்களை எப்படி கர்த்தருக்குள் கொண்டு வருவது, எழுப்புதலை எப்படி கொண்டு வருவது என்று புத்தகங்கள் அநேகம் வாங்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் படிப்பதில்லை, படித்ததை வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. ஒரு நாள் இயேசு கிறிஸ்துவின் சிங்காசனத்தின் முன் யாவரும் நிற்போம், ஒவ்வொருவரும் கணக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் நம்மை பார்த்து, 'பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்' (மத்தேயு 7:21-23) என்று சொல்லாதபடி, அவர் சொன்ன கட்டளைக்கு நாம் இருக்கும் இந்த கடைசி நாட்களில் நிறைவேற்றுவோம். 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' (மத்தேயு 25:23) என்று கர்த்தர் நம்மை பார்த்து சொல்லும்படியாக அவருக்கென்று நாம் உழைக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/

வேதாகமத்திலும் குர்- ஆனிலும் உள்ள வேறுபாடு

........வேதாகமத்திலும் குர்- ஆனிலும் உள்ள வேறுபாடு........
மோசே எழுதிய ஆகமங்களையும், கிறிஸ்துவினுடைய போதனைகளையும் நம்பும் இஸ்லாமியர்களுடைய குர்-ஆனிற்கும் வேதாகமத்திற்கும் படைப்பிலிருந்தே வேற்றுமையிருக்கின்றது. இஸ்லாமியர்கள் சொல்கின்றார்கள் வேதாகமம் மாற்றமடைந்துவிட்டது என்று.
அது தன்னுடைய பழைய நிலையில் இல்லை என்றும் அதனால் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். அப்படியானால் பிரித்தானிய நூதனசாலையில் உள்ள வேதாகம பிரதிகள் முகமதுநபிக்கு பல நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதே. அதற்கும் தற்போதுள்ள வேதாகமங்களுக்கும் மொழி மாற்றம் நடந்ததே ஒழிய கருத்து மாற்றங்கள் இடம் பெறவில்லை.
..............................வேறுபாடுகள்..................................
மோசேக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்று நம்பும் இஸ்லமியர்களுடைய குர்-ஆனிற்கும் கிறிஸ்தவர்களின் வேதாகமத்திற்கும் ஏன் இத்தனை வேறுபாடுகள்?
வேதாகமம் சொல்கின்றது ஆதாம் தான் முதன் முதலாக தேவனால் உருவாக்கப்பட்ட மனிதன் என்று, ஆனால் குர்-ஆனில் அதுகூட குறிப்பிடப்படவில்லை.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களை கவனித்துப்பாருங்கள், வேதாகமம் எவ்வளவு தெளிவான புஸ்தகம் என்றும், குர்-ஆன் எந்த நிலையில் இருக்கின்றது என்றும் தெரியும்.
1.வேதாகமம் சொல்கிறது
தேவன் பூமியில் மனிதனை மண்ணினாலே உருவாக்கினார், ஆதியாகமம் 2:7
1. குர்- ஆன் சொல்கிறது
மனிதன் சொர்க்கத்திலே படைக்கப்பட்டான், உலகத்தில் படைக்கப்படவில்லை. பின்பு சில காலம் உலகத்தில் தங்கும்படியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. குர்-ஆன் 2: 36
2.வேதாகமம் சொல்கிறது
வேதாகத்தில் எந்தெந்த நாட்களில் என்னவென்ன உருவாக்கப்பட்டதென்று தெட்ட தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. உதாரணம் பூமி உருவாக்கப்பட்டதன் பின்பே சூரியன் படைக்கப்பட்டது.
2. குர்- ஆன் சொல்கிறது
எந்தவிதமான சரியான தகவல்களும் சொல்லப்படவில்லை. பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டதென்றும், 7 வானங்கள் உள்ளதென்றும், நான்கு நாட்களில் உணவுகள் சீரமைக்கப்பட்டதென்றும் கூறப்பட்டுள்ளது. குர்-ஆன் 41: 9- 12
3.வேதாகமம் சொல்கிறது
6 நாட்களில் சகலமும் உருவாக்கப்பட்டது (24 மணித்தியாலம்;) ஆதியாகமம் 1:31
3. குர்- ஆன் சொல்கிறது
6 நாட்களில் படைக்கப்பட்டது, ஆனால் மில்லியன் வருடங்கள்.
4.வேதாகமம் சொல்கிறது
மனிதர்களும், மிருகங்களும்; மரக்கறி வகை உணவுகளையே உட்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மரணமும், கவலையும் காணப்படவில்லை ஆதியாகமம் 1: 29- 30
4. குர்- ஆன் சொல்கிறது
இதைப்பற்றி தெளிவான விளக்கம் இல்லை, ஆனால் அவைகளை உண்பதற்காகவே படைக்கப்பட்டன என்று இருக்கின்றது. மரணமும், அழுகையும் ஆதியிலே இருந்ததென்று கூறுகின்றது. குர்-ஆன் 6: 142, 16: 5, 40: 79
5.வேதாகமம் சொல்கிறது
சகலமும் இயேசுகிறிஸ்து மூலமாய் உண்டாகிற்று. இயேசு சகலமும் உருவாவதற்கு முன்பே இருந்தவர். ஆதியாகமம் 1:26, 3:22, 11: 7, மீகா 5:2, யோவான் 1:- 3,10, 3:13, 6:62, 8:35,58, 17:5,24 ரோமர் 11:36, 1கொரிந்தியர் 8:6, கொலோசேயர் 1:16-17, எபிரேயர் 1:2
5. குர்- ஆன் சொல்கிறது
இயேசு கிறிஸ்துவும் ஆதாமைப்போல மண்ணில் இருந்து உருவாக்கப்பட்டார் குர்-ஆன் 3: 59
..........................மனிதனின் வீழ்ச்சி.........................
1.வேதாகமம் சொல்கிறது
ஆதி பாவத்தின் மூல காரணம்: ஆதாமும் ஏவாளும் தன்னிச்சையாக ஜீவ விருட்சத்தின் கனியை பறித்து புசித்ததன் மூலம் ஆதியாகமம் 2:9, 16:17
1.குர்- ஆன் சொல்கிறது
அவர்களை நிர்வாணிகளாக்கி, அவர்களது மானத்தை காணும் பொருட்டு சாத்தான் அவர்களை நித்திய மரத்தின் கனியை புசிக்க சொன்னான், அதன் மூலம் பாவம் வந்தது குர்-ஆன் 7: 20, 20: 120
2.வேதாகமம் சொல்கிறது
வேதாகமம் புசிக்க வேண்டாம் என்று சொன்ன மரத்தை குறித்து, விரிவான விளக்கத்தை எமக்கு தருகின்றது, அதன் கனியை புசிக்கின்ற நாளில் சாகவே சாவீர்கள் என்று சரியாக குறிக்கப்பட்டுள்ளது. ஆதியாகமம் 2:16,17
2.குர்- ஆன் சொல்கிறது
எந்தவிதமான சரியான தகவல்களும் சொல்லப்படவில்லை. விலக்கப்பட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்றும் நெருங்கினால் சாவீர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. குர்-ஆன் 7: 19, 2: 35
3.வேதாகமம் சொல்கிறது
ஏதேனில் பாம்பு அல்லது வலு சர்ப்பம் ஆதியாகமம் 3:1- 15
3.குர்- ஆன் சொல்கிறது
பாம்பைப்பற்றியோ, வலு சர்ப்பத்தைப்பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. மோசேயின் தடி சர்ப்பமாக மாறியதைத்தவிர.
4.வேதாகமம் சொல்கிறது
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
ஆதியாகமம் 3:21
4.குர்- ஆன் சொல்கிறது
அலங்காரம், ஆடை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தோல் பற்றி குறிப்பிடப்படவில்லை குர்-ஆன் 7: 26
5.வேதாகமம் சொல்கிறது
பாவத்திற்கு பின்பு சாபம் அவர்களுக்கு வருகின்றது. ஏதேனில் இருந்து துரத்தப்படுகின்றனர். ஆகாரத்தை வருத்தத்தோடே புசிப்பாய், மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கு திரும்புவாய். மரணம். பூமியில் வியர்வை சிந்தி உழைத்தல். பூமி முள்ளும் குருக்கும் பிறப்பிக்கும் ஆதியாகமம் 3: 17-19
5.குர்- ஆன் சொல்கிறது
மனிதன் கஷ்டப்படுவதெற்கென்றே படைக்கப்பட்டவன் குர்-ஆன் 90: 4 படைப்பிலே மனிதன் கஷ்டத்தை அனுபவித்தான். பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டான். குர்-ஆன் 7: 24, 2: 26
6.வேதாகமம் சொல்கிறது
மரணம் நம்முடைய எதிரி, ஆதாம் செய்த பாவத்தினால் நமக்கு அது வந்தது. ஆதியாகமம் 2:17, 3:19 ரோமர் 5:12,17 1கொரிந்தியர் 15:21-22,26
6.குர்- ஆன் சொல்கிறது
குர்- ஆன் மரணத்தைப்பற்றி "எதிரி" என்று சொல்லவில்லை
7.வேதாகமம் சொல்கிறது
பாவத்தின் விளைவால் பூமி சபிக்கப்பட்டது. சகல சிருஷ்டியும் தவித்து ஏகமாய் பிரவச வேதனைப்படுகிறது. ஆதியாகமம் 3:17, ரோமர் 8:20-22, வெளிப்படுத்தின விசேஷம் 22:3
7.குர்- ஆன் சொல்கிறது
மனிதனுடைய பாவத்தின் விளைவினால் மரணமோ, வருத்தமோ, வேறெதுவுமே வரவில்லை. ஆனால் தேவனுடைய படைப்பிலேயே மரணம், வருத்தம் இருக்கின்றன. மரணம் உருவாவதற்கு தேவன் தான் காரணம்.
.................................ஜலப்பிரளயம்.................................
1.வேதாகமம் சொல்கிறது
ஆதாமிலிருந்து பத்தாவது சந்ததி நோவா. ஆதியாகமம் 5:3- 32 வேதாகம ஆய்வாளர்களின் கருத்துப்படி ஏறக்குறை கிறிஸ்துவுக்கு முன் 4300 ஆண்டுகள்.
1.குர்- ஆன் சொல்கிறது
காலம்; குறிப்பிடப்படவில்லை.
2.வேதாகமம் சொல்கிறது
நோவாவின் பேழை உள்ளும் புறமும் கீலால் பூசப்பட்டது. (மரத்தின் பிசின் என்று நம்பப்படுகின்றது) ஆதியாகமம் 6:14
2.குர்- ஆன் சொல்கிறது
பலகையும், ஆணியும் பாவிக்கப்பட்டது. குர்-ஆன் 54: 13- 14
3.வேதாகமம் சொல்கிறது
பேளையின் நீளம், அகலம், உயரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாகமம் 3:1- 15
3.குர்- ஆன் சொல்கிறது
எதுவும் குறிப்பிடப்படவில்லை.
4.வேதாகமம் சொல்கிறது
இரவும் பகலுமாக 40 நாட்கள் மழை பெய்தது. 150 நாட்கள் வெள்ளம் பூமியில் இருந்தது. மொத்தம் 370 நாட்கள் எடுத்தது.
ஆதியாகமம் 7: 12,24 8: 4,14
4.குர்- ஆன் சொல்கிறது
காலம்; குறிப்பிடப்படவில்லை.
5.வேதாகமம் சொல்கிறது
8 நபர்கள் காப்பற்றப்பட்டனர். 1 பேதுரு 3:20 நோவாவின் குடும்பம் காப்பற்றப்பட்டது ஆதியாகமம் 7:1,7
5.குர்- ஆன் சொல்கிறது
எத்தனை பேர் என்று குறிப்பிடப்படவில்லை. நோவாவின் மகன் கைவிடப்பட்டான் (குர்-ஆன் 11: 42- 43) நோவாவின் மனைவியும் கைவிடப்பட்டாள் (குர்-ஆன் 11: 40...... 66: 10)
6.வேதாகமம் சொல்கிறது
அசைவம் உண்பதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆதியாகமம் 9:3
6.குர்- ஆன் சொல்கிறது
ஆதியில் இருந்தே மனிதன் மாமிசம் புசிக்கின்றான் குர்-ஆன் 6: 142, 16: 5, 40: 79
7.வேதாகமம் சொல்கிறது
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், ப+மியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். ஆதியாகமம் 9: 11-17
7.குர்- ஆன் சொல்கிறது
இவைகளைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
...............................பாபேல் கோபுரம்..............................
வேதாகமம் சொல்கிறது
தேவனாகிய கர்த்தர் பாபேலிலே பாஷைகளை தாறுமாறாக்க முதல் உலகமெங்கும் ஒரே பாஷையும், பேச்சும் இருந்தது. ஆதியாகமம் 11: 1-9 பாபேலைப்பற்றியோ, அல்லது பாஷைகளைப்பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குர்- ஆன் சொல்கிறது
பாபேல் நிகழ்ச்சிக்கு பின்பு, ஜனங்கள் ஜாதி, ஜாதிகளாகவும், வௌ;வேறு பாஷைக்காரர்களுமாக பிரிந்தனர். தேசங்கள் பகுக்கப்பட்டது. ஆதியாகமம் 10:5, 20:31 மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. குர்-ஆன் 30: 22
தேவனுடைய படைப்பிலேயே இவ்வளவு வேறுபாடுகளை இரு புஸ்தகங்களும் கொண்டிருக்கின்றதே, அப்படியென்றால் எப்படி இரு புஸ்தகங்களும் ஒன்றாக முடியும் ? குர்-ஆன் தெளிவானாது என்று குர்-ஆன் சொல்கின்றது. தெளிவான குர்-ஆனில் ஏன் காலங்களைப்பற்றிய எந்த விளக்கங்களோ, அல்லது மனிதர்களைப்பற்றிய சரியான குறிப்புக்களோ எதுவும் குறிப்பிடப்படவில்லை?
கடவுளுடைய படைப்பிலேயே மரணமும், வேதனையும் இருக்கின்றது என்று குர்-ஆன் சொல்கின்றது. அப்படியானால் எங்களுடைய கண்ணீருக்கும், கவலைகளுக்கும் கடவுளா காரணம்?
அப்படியானால் கடவுள் மனிதனுடைய வேதனையை இரசித்து, அவனுடைய மரணத்தை ருசிக்கின்றாரா ?ஆனால் வேதாகமம் சொல்கின்றது: மனிதன் பாவம் செய்ததாலே இவைகள் எல்லாம் வந்ததுஎன
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=67:2008-12-30-10-09-33&catid=11:islam&Itemid=34

புதன், 26 மார்ச், 2014

THE PENTECOSTAL MISSION TAMIL SONG 453 Unthan balathile deva ezhuntharulum

The Pentecostal Mission Tamil Song 2014 Endraendrum vanthadaum YESUVE

The Pentecostal Mission Tamil Songs 2014 Naetrum intrum entrum Mareda YE...

The Pentecostal Mission Chief Pas.Willson funeral Service Song

The Pentecostal Mission Tamil Songs 2014_Yaesuvay ummugam kandiduven

The Pentecostal Mission Tamil Songs 2014 Naetrum intrum entrum Mareda YE...

The Pentecostal Mission Tamil Song 2014_Yaesuve Um Naamam

கள்ளதீர்க்கதரிசிகளையும் கள்ளபோதகர் களையும் கண்டு கொள்ளுங்கள்

அண்மை நாட்களில் நான் பல பொய்யான தீர்கதரிசிகளையும், அவர்கள் சொல்லும் வேதாகமத்திற்கு புறம்பான தீர்க்கதரிசனங்களையும் எனக்குள் வெறுப்பையும், கசப்பையும், ஏற்படுத்தியது. இவர்களுடைய தவறான போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் நம்பும் மனிதர்களை பார்த்தபோது மிகவும் கவலையும் ஆத்திரமும் வந்தது.
அந்த சமயம் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன:

1. மக்களுக்கு வேதாகமத்தைப்பற்றிய அறிவே இல்லையா?
2.அல்லது ஜனங்கள் வேதமே வாசிப்பது இல்லையா?
3.அல்லது பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியதபடிக்கு அனேகருடைய கண்கள் மூடியிருக்கின்றதா?


பிற்பாடு நான் வேதாகமத்தையும் பல ஆவிக்குரிய மனிதர்கள் எழுதிய புஸ்தகங்களையும் வாசிக்கும் போது அதற்கான விடையும் கிடைத்தது.

இயேசு கிறிஸ்துவின் போதனையைவிட அனேகருக்கு பொய்பேசுகின்ற தீர்க்கதரிசிகளைத்தான் பிடிக்கும் என்பதனை புரிந்து கொண்டேன்.

இயேசு சொன்னார்:

யோவான் 8: 43 - 44 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

இன்று அனேகர் வேதாகமத்தை ஆராய்ந்து வாசிப்பதில்லை. வேதாகமம் தெரியாமல் ஒருவன் சொல்லும் தீர்க்கதரிசனம் வேதாகமத்துக்கு புறம்பானதா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்ள முடியும் ?????
வேதாகமத்தை வாசிக்க வேண்டும்

ஏசாயா 8: 20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.


மக்களே ஆவியை சோதித்தறியுங்கள்

1 யோவான் 4: 1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

ஜனங்களை தேவன் முன்னெச்சரிக்கை செய்கின்றார்! தேவன் எச்சரிக்கை செய்தும் அறிவில்லாமல் அழிந்து போக வேண்டாம் !!!
மக்களே எச்சரிக்கையாயிருங்கள்!

மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

1 தீமோத்தேயு 4: 1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 பேதுரு 1: 1 - 2 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

அப்போஸ்தலர் 20: 29 - 30 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.



தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கான நியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! <அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்>
எச்சரிக்கை! பொய் தீர்க்கதரிசிகளுக்கு!

மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.


வெளி 18, 19 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

எசேக்கியேல் 13

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்

எரேமியா 23

9. தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.

16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

11. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

25. சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.

31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26. எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=248%3A2009-09-15-12-04-14&catid=28%3Abible-study&Itemid=44

தன்னை இறை தூதன் (முகம்மது நபி )என்று சொல்லும் ஒருவரின் செயலைபாருங்கள்

..............தன்னை இறை தூதன் (முகம்மது நபி )என்று சொல்லும் ஒருவரின் செயலைபாருங்கள்...................

............நாம் தெரிந்து கொள்ளும் படியாக ...............

ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்று குர்-ஆன் சொல்கின்றது. முகமது நபிக்கு மட்டும் அல்லா எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் என்று அனுமதிக்கின்றார்.ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

நபிக்கு மட்டும் அல்லாவின் அருள்- எத்தனை வேண்டுமானால் கட்டு

ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.



முகமது திருமணம் செய்த பெண்களை கவனிப்போம்.

கத்யா (முதல் மனைவி)
ஒரு பணக்கார விதவை. முகமது நபி தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயதான கத்யாவை திருமணம் செய்தார். அவளை திருமணம் செய்தபடியால் முகமது நபி பெரிய பணக்காரர் ஆனார். நான் நினைக்கிறேன் இவர்கள் வீதியில் நடந்து சென்றால் ஜனங்கள் தாயும் மகனும் என்று நினைத்திருப்பார்கள் என்று.

கத்யா இறந்த பின்பு முகமது நபி ஏறக்குறைய 11 பெண்களை திருமணம் செய்தான்.



சௌதா பிந்த் சமா

கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் இனுமொரு விதவையை முகமது திருமணம் செய்தான். (இவளுடைய கணவனும் இவளும் எத்தியோப்பியாவிலே குடியிருந்தனர்- இவளுடைய கணவனுடைய மரணத்திற்கு பின்பு இவளை முகமது திருமணம் செய்தான்).

அயிஷா

முகமதுவின் மரணத்திற்கு பின்பு முகமது நபியின் ஸ்தானத்தில் இருந்த அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6 குடும்பம் நடத்தியது அயிஷாவுக்கு 9 வயது இருக்கும் பொழுது. முகமதுவின் வயது அந்த சமயம் 52.

ஆதரம்: Sahih Bukhari 5.236 ஹதீஸ் (இது முகமது நபியின் வாழ்க்கை வரலாறையும், போதனைகளையும் கொண்டுள்ளது).

http://answering-islam.org/Index/A/aisha.html

http://answering-islam.org/Hadith/aisha.html

http://answering-islam.org.uk/Silas/childbrides.htm


இப்படியnhரு கேவலம் கெட்ட செயலை செய்கின்ற மனிதனை எப்படித்தான் எங்கள் தமிழ் மக்களும் அறியாமல் ஏற்றுக்கொண்டார்களோ ! இனியாவது தமிழ் முஸ்லிம்களை உண்மையை அறிந்து உண்மையான மார்க்கத்தை ஏற்று கொள்ளுங்கள்.



ஹவ்சா பிந்த் உமர்
இவளுடைய தந்தையின் பெயர் உமர் இபின் அல் கடாப். முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.



சைனாப் பிந்த் குசைமா
இவளுடைய கணவனின் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, இவள் முகமதை திருமணம் செய்ய கேட்டாள். முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் மரித்துப்போனாள்.



உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
போரில் இவளுடைய கணவனும் மரித்த பின்பு இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.



யுவேரியா பிந்த் ஹரித்
முகமது நபி இவளை திருமணம் முடிக்கையில் இவளுக்கு வயது 20, முகமது நபிக்கு 58. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து கொண்டுபோய் திருமணம் செய்தான். திருமணம் செய்த பின்னர் இவளுடைய தந்தையிடம் இருந்து கொள்ளையிட்ட பொருட்களை முகமது திரும்ப கொடுத்து விட்டான்.

முகமது அல்லாவினுடைய தீர்க்கதரிசி ஆயிற்றே ... ஏன் இந்த பெண் ஆசை? பண ஆசை?



உம் ஹபிபா ரம்லா
இவள் 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி. முகமதுடைய வாழ் நாள் முழுக்க இவன் எதிரியாக இருந்தான். உம் ஹபிபா ரம்லாவினுடைய முதல் கணவன் பெயர்: உபய் துல்லா இபின் யாஷ். இவன் சைனாப் பிந்த யாஷ் உடைய சகோதரன். இவர்கள் அபிசினியா(எத்தியோப்பியா)விலே தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர். அங்கே உபய் துல்லா இபின் யாஷ் உண்மையான ஆண்டவர் இயேசு தான் என்பதை அறிந்து ஏற்றுக்கொண்டான். அதனால் உம் ஹபிபா ரம்லா அவனை விவாக இரத்து செய்தாள். அதன் பின்பு முகமது இவளையும் திருமணம் செய்து கொண்டான்.



சபியா பிந்த் ஹீயாய்
இவளுக்கு வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். பின்பு முகமது இவளை சிறை செய்து, திருமணமும் செய்து கொண்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதiவாயாகவே தன்னுடைய எஞ்சிய காலத்தை கழித்தாள். தன்னுடைய 60 ஆவது வயதில் இவள் மரித்தாள்.



மைமுனா பிந்த் அல் ஹரித்
முகதினுடைய 60 ஆவது வயதில் 36 வயதான முகமது திருமணம் செய்து கொண்டான்.



மரியா அல் கிபித்தியா
எகிப்திய மன்னனுடைய அடிமையான இவள், எகிப்திய மன்னனுக்கு ஒரு குழந்தையைப்பெற்றாள். குழந்தை பெயர் இப்ராஹிம். குழந்தை சிறுவயதிலே மரித்துவிட்டது. இவள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் முகமதுவை திருமணம் செய்தாள். இவளை எல்லாரும் மனைவிபோல பாவித்தார்கள்.

மனதை தொட்டு சொல்லுங்கள்.. ! உண்மையிலே முகமது கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருக்க முடியுமா என்று ? 52 வயதுக்கிழவன் 9 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்வதென்றால்.... காறித்துப்பவேண்டும் போல உங்களுக்கு மனம் வரவில்லையா?

நான் சொல்வது பொய்யென்று நினைத்தீர்களானால் ஸாஹிஹ் அல்புகாரியை (ஹதிஸ்) நீங்களே வாசித்துப்பாருங்கள்.

http://www.witness-pioneer.org/vil/hadeeth/bukhari/062.htm

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.htm

அல்லா- குர்-ஆன்.... என்கின்ற போர்வையில் முகமது கொலையும், கொள்ளையும், அநேகம் பெண்களுடன் உடலுறவும் கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு பெண்களுடைய வயதையும் கவனியுங்கள், குழந்தையிலிருந்து கிழவிகள் வரை.

இது அநியாயமாக்தெரியவில்லையா ?

கடவுள் ஆதாமுக்கு ஏன் ஆயிரத்தெட்டு மனைவிகளை படைக்கவில்லை?

ஆதாமுக்கு கடவுள் ஒரு மனைவியைத்தான் படைத்தார்.

இப்படி மிருக குணமுள்ள முகமதுவை எப்படி தீர்க்கதரிசி என்று ஏற்கமுடியும்? இவனை மனிதன் என்று சொல்வதற்கே வெட்கப்படவேண்டும்.

இவனை எப்படி இயேசுவுடன் ஒப்பிட முடியும்.

வேதம் சொல்லுகிறது, இயேசுவானவரிடத்தில் பாவமே இல்லையென்று.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=62%3A2008-12-30-09-57-57&catid=11%3Aislam&Itemid=34
இயேசுகிறிஸ்துவிற்கும் முகமதுவிற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்களே பாருங்கள் !

இயேசு நாதருடைய போதனையாகட்டும், அவருடைய செயல்களாக இருக்கட்டும், அல்லது அவருடைய வாழ்க்கை முறைமையாக இருக்கட்டும்- சகல காரியங்களும் முகமதுவிலிருந்து அவரை நூறு சதவிகிதம் வேறுபடுத்தி காண்பிக்கின்றது. முகமதுவை இயேசு நாதருடன் ஒப்பிவது என்பது ... ச்சே ... எழுதுகின்ற எனக்கே மனம் வரவில்லை. யாரை யாருடன் ஒப்பிடுவது என்கின்ற விவஸ்தையே இல்லாமல்...

இருந்தாலும் நீங்களும் இவைகளை அறிய வேண்டும் என்பதற்காக ஒப்பிட்டு, குறிப்பிட்டுக்காட்டுகிறேன்.

1.முகமது ஒரு மனிதன்

இயேசு நாதர் கடவுள் (யோவன் 1: 1, ஏசாயா 9: 6)

2.முகமது ஒரு பாவி

இயேசு நாதர் எந்தப்பாவமும் செய்யவில்லை.

3.முகமது ஒரு கொலைகாரன்

கிறிஸ்துவுக்கு எதிரிகள் இல்லை, அவரை எதிர்க்கின்றவர்களையும் அவர் நேசிக்கின்றார்.

4.முகமது யுத்தத்திற்கு தீர்க்கதரிசியாயிருந்தான்

இயேசு நாதர் சமாதானத்திற்கு தேவனாக இருக்கின்றார். (ஏசாயா 9: 6,7)

5.முகமதுவின் சீடர்கள் தங்கள் மார்க்கத்திற்காக மனிதர்களை கொன்றார்கள்

இயேசுவின் சீடர்கள் தங்களின் நம்பிக்கைக்காக கொல்லப்பட்டனர். (அப்போஸ்தலர் 12: 2, 2 தீமோத்தேயு 4: 7)

6.முகமது மனித உயிர்களை எடுப்பவனாக காணப்பட்டான்

இயேசு நாதர் எமக்காக தம்முடைய உயிரை கொடுத்தார்.(யேவான் 10: 27, 28)

7.முகமது கையாண்ட முறை கட்டாயப்படுத்துதல்

இயேசு நாதரின் போதனை: விரும்பி, மனந்திரும்பி, ஏற்றுக்கொள்ளுதல்.

8.முகமது ஆயுத பலத்தினை நம்பினான்

இயேசு நாதர் விசுவாசத்தை பிரசங்கித்தார். (யோவான் 6:29, 35)

9.முகமது சண்டைக்காரனாக காணப்பட்டான்

இயேசு நாதர் விடுவிப்பவராக, காப்பாற்றுபவராக காணப்பட்டார். (கொலோசேயர் 1:13; 1 தெசலோனிக்கேயர் 1:10)

10.முகமது தன்னுடைய எதிரிகளை வாளினால் வென்றான்

இயேசு நாதர் தேவனுடைய வார்த்தையினால் தம்முடைய சத்துருக்களை வென்றார் (எபிரேயர் 4:12;, அப்போஸ்தலர் 2:37)

11.முகமது சொன்னான் மதம் மாறு அல்லது செத்துமடி

இயேசு நாதர் சொன்னார் விசுவாசி நித்தியமாக வாழ்ந்திரு. (யோவான் 6:47; 11:25-26)

12.முகமது தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக புனிதப்போர் (ஜிகாத்) மேற்கொண்டான்

இயேசு நாதர் தம்மை பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்து பிசாசை ஜெயித்தார்(கொலோசேயர் 2: 14-15). இயேசு நாதருடைய சீடர்களும் அப்படியே செய்தார்கள்.

13.முகமது போதித்தான் "அவநம்பிக்கையுள்ளவர்கள் சாக வேண்டும்";.

இயேசு நாதர் தம்முடைய போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்காக " பிதாவே இவர்களை மன்னியும், அறியாமல் செய்கின்றார்கள்" என்று ஜெபித்தார்.(லூக்கா 23: 24)

14.முகமது யுத்தத்தினால் மக்களை மேற்கொண்டு அவர்களை தன்னை ஏற்றுக்கொள்ள செய்தான்

இயேசு நாதர் அன்பினாலே ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.(2 கொரிந்தியர் 5: 14)

15.முகமதின் செயல்களின் பிரதிபலிப்பினால் தற்காலத்து பயங்கரவாதக்கும்பல்கள், அநேக அவமான காரியங்களை செய்கின்றனர் அதுவும் தங்கள் கடவுள் அல்லாவின் பெயரில்.

கிறிஸ்துவின் சீடர்கள், இயேசு கிறிஸ்துவின் வசனங்களை கடைப்பிடிக்கின்றனர்: "சமாதானம் செய்கின்றவர்கள் பாக்கியவான்கள்";. (மத்தேயு 5: 9)

16.அநேக முஸ்லிம்கள் நல்லவர்களாகவும், சாந்தமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். காரணம்: அவர்கள் முகமதுவை பின்பற்றாததனால்.

இயேசுவின் சீடர்கள் நல்லவர்களாகவும், சாந்தமுள்ளவர்களாகவும் இருக்கின்றனார். காரணம் அவர்கள் இயேசுவை பின்பற்றுவதால். (ரோமர் 12: 17- 21)

17.முகமது கட்டளை கொடுத்தான் யூதர்களை கொலைசெய்யும்படியாக

இயேசு நாதர் சொன்னார் முதலில் யூதர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டுமென்று (ரோமர் 1: 16).

18.முகமது கட்டளை கொடுத்தான் விக்கிரக ஆராதனை செய்பவர்களை கொலைசெய்யும்படியாக

இயேசு நாதர் சொன்னார் சகல மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கும்படியாக (மாற்கு 16: 15).

19.இஸ்லாம் மதத்திலிருந்து விலகுபவர்கள் இஸ்லாம் சமுதாயத்தினராலேயே கொல்லப்படலாம்

கிறிஸ்தவன் ஒருவன் தன்னுடைய மதத்திலிருந்தோ, அல்லது கிறிஸ்துவை விட்டோ விலகினாலும், எந்தவிதமான நியாயத்தீர்ப்புக்களும் கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாது.
இஸ்லாம் மதம் கட்டாயமாக வரவேற்கப்பட வேண்டும், நிராகரிப்போர் கொலை செய்யப்படலாம் கிறிஸ்துவின் போதனைகளை நிரகரிப்பதோ, அல்லது ஏற்பதோ என்பது ஒவ்வொரு மனிதனும் தானே தீர்மானிக்க வேண்டிய காரியம்.

20.முகமது: இயேசு நாதரை ஒரு நல்ல தீர்க்கதரிசியென்று கூறினான்

இயேசு நாதர் சொன்னார் (அநேக கள்ளத்தீர்க்க தரிசிகள் வந்து ஜனங்களை வஞ்சிப்பார்கள் என்று) முகமது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி (யோவான் 10: 10, மத்தேயு 24: 11)

21.முகமது சொன்னான் அல்லா என்று கடவுள் உண்டு என்று இயேசு நாதர் சொன்னார் தாம்; கடவுளாக இருந்தவர் என்று ( யோவான் 14: 9, 5: 18)

22.முகமதுவின் கல்லறை மூடியிருக்கின்றது. ஏன் என்றால் முகமது இறந்து விட்டான்.

இயேசு நாதரின் கல்லறை துறந்திருக்கின்றது, ஏனென்றால் அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபடியால்.

இயேசுவிலுள்ள காரியங்கள் நூறு சதவிகிதம் இஸ்லாமியர்களுக்கு புதிதாக இருக்கும். ஏன் என்றால் இஸ்லாமில் அன்பு என்கின்ற வார்த்தைக்கு இடமே இல்லை. பயமும், வெறுப்பும், கசப்பும் மட்டுமே.

இயேசுகிறிஸ்துவிற்கும் முகமதுவிற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்களே பாருங்கள் !

உனக்காகவும், உலகத்திலுள்ள அனைவருக்காகவும் உயிரை கொடுத்தவர் இயேசு.

அவரிடத்தில் பாவம் அணு அளவும் காணப்படவில்லை.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=64%3A2008-12-30-10-06-08&catid=11%3Aislam&Itemid=34

திங்கள், 24 மார்ச், 2014

அன்பாயிருங்கள்

.............................அன்பாயிருங்கள்......................................

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும்
ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.  நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று
எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - யோவான். 13:34-35.

  

இந்த கடைசி காலங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிறபடியால் எழுப்புதலை அனுப்பும் தேவா என்று விடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தேசங்களை சந்தியும் ஆண்டவரே, உம்மை அறியாத ஜனங்களுக்கு
உம்மை வெளிப்படுத்தும், என்று தொடர்ந்து திறப்பின் வாசலில் நின்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் மக்கள் இயேசுவை அறியாமல் மரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு பெரிய எழுப்புதல் நம் தேசத்தை இன்னும் அசைக்கவில்லை.
அறுவடைக்கு கதிர்கள் தயாராக உள்ளன. ஆனால் அதை அறுப்பதற்கு போதுமான ஆட்கள் இல்லை ஏன் இந்த நிலைமை?


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று
எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் விசுவாசிகளுக்குள்ளே இன்று அன்பு எங்கே இருக்கிறது? சபையாகிய சரீரத்திற்குள்தான் எத்தனை பிரிவினைகள்? சின்ன சின்னக் காரியங்களுக்கெல்லாம் சண்டையிட்டு, சபைகள் பிரிந்து தனியாக ஒரு சபை ஆரம்பிக்கப்படுகிறது. சத்துரு நம்மை பிரிக்கவேண்டும் என்கிற அவனது தந்திரத்தை நாம் அறியாமல் நமக்குள்ளே பிரிவினைகளை அனுமதித்துக் கெண்டு இருக்கிறோம்.


விளைநிலங்கள் அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கின்றன. ஆனால் அவைகளை அறுக்க நாம்
ஆயத்தமாக இல்லையே! நாம் நம்முடைய பிரச்சனைகளயே நோக்கிக் கொண்டு இருக்கிறோம்.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், நான் பெரியவன், நீ பெரியவன் என்றும் போட்டியிட்டுக் கொண்டும் இருக்கிறோம். இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, தூசியை
உதறிவிட்டு எழுந்தரிப்போமா? ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோமா? கிறிஸ்துவின் சரீரத்தில்
நாம் ஒரே அவயங்களாயிருக்கிறோமே, ஒரு அவயத்திற்கு விரோதமாய இன்னொரு அவயவம்
எப்படி இருக்க முடியும்?


பிரச்சனைகளை நோக்காமல் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்போம். ஒன்று
சேருவோம், அழிந்துப் போகிற ஆத்துமாக்களுக்காக ஒன்றிணைந்து திறப்பின் வாசலில் நிற்போம். நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதால், ஒன்றாய் இருப்பதால் சத்துருவுக்கு அங்கு இடமில்லை. சிறு வயதில் நாம் கற்ற உதாரணம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான்கு மாடுகள் ஒன்றுக்கூடி மேய்ந்துக் கொண்டிருந்தபோது அங்கு அவைகளை அடித்து சாப்பிட எத்தனித்த சிஙகத்திற்கு அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அந்த மாடுகள் சண்டையிட்டு தனித்தனியாக மேய்ந்துக் கொண்டிருந்தபோது,  மிகவும் சுலபமாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாடாக அடித்து ஏப்பம் விட்டதைப் படித்திருக்கிறோம்.


இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம் 133:1 என்று வேதம் சொல்கிறது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள் அப்போஸ்தலர் 2:44. என்று ஆதிகால கிறிஸ்தவர்களைக் குறித்து நாம் காண்கிறோம். அந்நாட்களில் விசுவாசிகள் ஒருமித்து இருந்தபடியால்தான், கர்த்தருக்கென்று ஆச்சரியமான, அற்புதமான காரியங்களை அவர்களால் செய்ய
முடிந்தது. இன்று அந்த அதிசயஙகள், அற்புதங்கள் நடைபெற்று நாம் புறஜாதிகளுக்கு முன் நம்
கர்த்தரே தெய்வம் என்று வெளிப்படுத்த வேண்டுமானால் ஒரு மனம் மிக மிக முக்கியம்.
ஒருமனப்படும் இடத்தில் தான் கர்த்தரின் ஆவியானவர் கிரியை செய்ய முடியும். ஒருமனப்பட்டு சாத்ட்னுக்கு எதிர்த்து நிற்போம். அவன் ஓடிப் போவான். நாம் அறுப்பதற்கு, விளைநிலங்கள் தயாராக உள்ளன. உடனே வேலையை ஆரம்பிப்போமா?
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=172:2009-06-29-08-45-15&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43

மாம்ச சுபாம் ? ஆவியின் சுபாம் ?

...................மாம்ச சுபாம் ? ஆவியின் சுபாம் ?.....................

மாம்ச சிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். - ரோமர் - 8:6.


கிறிஸ்தவர்களாகிய நமக்குள் அனுதினமும் போராடும் மாம்ச சுபாவத்தையும், ஆவியின் சுபாவத்தையும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.  அவைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை.  ஆனால் அவைகளுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை ஒரு ஆவிக்குரிய மனிதனால் மட்டுமே நிதானிக்க முடியும்.  இன்று இவ்விரு சுபாவங்களுக்கிடையேயுள்ள வித்தியாசத்தைக் கீழே காண்போம்.


மாம்ச சுபாவமோ தனக்காகவே பிரயாசப்படும்.  பிறரிடமிருந்து தனக்கென்ன நன்மை கிடைக்கும்
என்றே பார்க்கும்.  ஆவியின் சுபாவமோ தனக்கானவைகளை மட்டுமல்ல பிறருக்கானவைகளையும் தேடும்.

மாம்ச சுபாவம் கீழ்படியாது.  மற்றவர்களுக்கு கீழ்பட்டிருப்பதையோ ஆலோசனையை கேட்பதையோ விரும்பாது.   ஆவியின் சுபாவமோ கீழ்ப்படிய தீவிரிக்கும்.  மற்றவர்களை ஆளுகை செய்ய விரும்பாது.  முழு வாழ்க்கையையும் தேவ சித்தத்திற்கும் தேவைப்படும் இடங்களில் மனித
அதிகாரத்திற்கும் தேவவைப்படும் இடங்களில் மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படுத்தும்.

மாம்ச சுபாவம் கனத்தையும் புகழையும் ஆர்வமாய் ஏற்றுக்கொள்ளும்.  ஆவியின் சுபாவமோ எல்லா கனத்தையும் மகிமையையும் தேவனுக்கே செலுத்தும்.

மாம்ச சுபாவம் நிந்தனைகளையும் அவமானங்களையும் வெறுக்கும்.  ஆவியின்
சுபாவமோ கிறிஸ்துவின் நாமத்திற்காக எல்லா அவமானங்களையும் நிந்தனைகளையும் சகிக்கும்.


மாம்ச சுபாவமும் விலையுயர்ந்த பொருட்கள் மேல் நாட்டம் கொண்டு அதை வைத்திருக்க விரும்பும். சாதாரண பொருட்களை அற்பமாய் எண்ணும். ஆவியின் சுபாவமோ எளிமையானவைகளில் மகிழும்.  எளியவர்களோடு நட்பு கொள்ளும். மாம்ச சுபாவம் பேராசை நிறைந்தது.  கொடுப்தைக் காட்டிலும் பெற்றுக் கொள்வதையே விரும்பும். ஆவியின் சுபாவமோ கொஞ்சத்தில் திருப்தியாயிருக்கும்.  வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே நலமென்று இருக்கும்.


அன்பானவர்களே! அனுதினமும் ஜெபித்து மாம்ச சுபாவத்தை சாகடித்து ஆவியின்படி நடவுங்கள்.
அப்பொழுது நீங்கள் தேவனுடைய புத்திரராய் இருப்பீர்கள்.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=182:2009-07-12-08-24-09&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43

பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய இயேசுகிறிஸ்து

 ........பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய இயேசுகிறிஸ்து.........

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட
சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான
ஜனமாயும் இருக்கிறீர்கள். - 1பேதுரு 2:9.

பழங்குடி மக்களில் ஒரு வகையினர்,  ஒரு குகைக்குள் குளிரிலும், இருளிலும் வாழ்ந்து
வந்தார்கள். குளிர் தாங்க முடியாமல், அவர்கள் இருளில், தங்களால் இயன்ற வரை சத்தமிட்டுக்
கதறி அழுதுக் கொண்டிருந்தார்கள்.  அதுதான் அவர்களால் செய்ய முடிந்ததும் அறிந்ததும்.
அவர்கள் இருந்த இடம், மிகவும் துக்ககரமான இடமாக, அவர்கள் இடும் ஓலம் மரண ஓலமாக
இருந்தது. அவர்கள் மகிழ்ச்சி என்பது என்ன என்று அறியாமல், இருளிலும் குளிரிலும் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு நாள் அவர்கள் அப்படி கதறிக் கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு ஒரு குரல் கேட்டது, 'நான் உங்கள் அழுகுரலைக் கேட்டேன், உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்' என்று அந்தக் குரல் கூறியது. அதைக் கேட்ட அந்த குகை வாழ்மக்கள் மத்தியில் ஒரு அமைதி
ஏற்பட்டது. அவர்கள் வித்தியாசமான வார்த்தைகளை கேட்டதில்லை. ஆகையால் அவரிடம்,  'நீர் எப்படி எங்களுக்கு உதவ போகிறீர்' என்றுக் கேட்டார்கள். அதற்கு அவர், 'என்னை நம்புங்கள், நான் உங்களுக்கு தேவையானதைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்றுக் கூறி எதையோ செய்ய ஆரம்பித்தார்.

அந்த பழங்குடியினர், அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தார்கள். அவர், அங்கு குச்சிகளை வைத்து எதையோ செய்துக் கொண்டிருந்தார். அவரிடம் 'என்ன செய்கிறீர்'  என்று ஒரு குரல் கேட்டது, அதற்கு அவர் பதில் சொல்லாமல், தொடர்ந்து செய்துக் கொண்டிருந்த போது, மற்றொருக் குரல் 'என்ன செய்கிறீர்'  என்று மீண்டும் சத்தமாகக் கேட்டது.
அப்போது அவர்,  'உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்றுக் கூறி, தனது காலின் கீழே சேர்த்து வைத்திருந்த குச்சிகளை நெருப்பு வைத்து பற்ற
வைத்தார். அந்தக் குச்சிகள் நெருப்பைப் பற்றிக் கொண்டு அந்தக் குகைக்குள் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அதைக் கண்ட அம்மக்கள்,  'ஐயோ அதை அணைத்துப் போடும், அது
எங்கள் கண்களை கூசப் பண்ணுகிறது'  என்று கத்த ஆரம்பித்தார்கள். அப்போது அவர்,  ‘ஆரம்பத்தில் வெளிச்சம் கூசத்தான் செய்யும், கிட்ட வாருங்கள், பழகிப் போகும்’  என்றுக்
கூறினார். ஒரு மனிதன்,  ‘நான் வர மாட்டேன்’ என்றுக் கூற மற்றவர்களும்,  ‘ஆமாமாம் நாங்களும் வர மாட்டோம்’  என்று பிடிவாதம் பிடித்தனர். அப்போது அவர்,  ‘உங்களுக்கு இருளும்
குளிரும்தான் பிடித்திருக்கிறதா?  உங்கள் பயங்களை உதறிவிட்டு, விசுவாசத்தோடு பக்கம் வாருங்கள்’  என்று அன்போடு அழைத்தார்.

அதிக நேரம் யாரும் வரவில்லை. அப்போது அவர்,  ‘பாருங்கள் இங்கு சூடாக இருக்கிறது’  என்றழைத்தார். ஒரு பெண் அவர் அருகில் சென்று,  ‘ஆஹா ஆமாம் இங்கு சூடாக இருக்கிறது.
நான் என் கண்களை திறக்க முடிகிறது’  என்றுக் கூறி மற்றவர்களையும் வரும்படி அழைத்தாள். இன்னும் நெருப்பின் அருகில் சென்றபோது, அவளுடைய குளிரெல்லாம்
மறைய ஆரம்பித்தது. மீண்டும் அவர்களை அவள் அழைத்தபோது, அவர்கள்,  ‘உனக்கென்ன? அமைதியாயிரு, எங்களை  விட்டுவிடு,  நீ அந்த வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு போ’ என்று அவளைச் சத்தம் போட ஆரம்பித்தார்கள். அப்போது அவள் அந்த மனிதரிடம்,  ‘ஏன் இவர்கள் ஒளியினிடத்திற்க்கு வரமாட்டேன்’ என்கிறார்கள்?  என்றுக் கேட்டாள். அப்போது அவர்,  ‘அவர்கள் குளிரை மட்டும் அறிந்து வைத்திருக்கிறபடியால், குளிரிலும் இருளிலும் இருப்பதையே தான்
விரும்புகிறார்கள், வேறு மாற்றத்தை விரும்பவில்லை’  என்றுக் கூறினார்.  அவளிடம்  ‘நீயும் அவர்களிடமே போய் விடுவாயா?’ என்றுக் கேட்டார். அப்போது அவள்,  ‘இல்லை, எனக்கு இந்த வெளிச்சமும், கதகதப்பும் வேண்டும். என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை. ஆனால் என்
மக்கள் அப்படியே குளிரிலும் இருளிலும் இருப்பதையும் என்னால் பொறுக்க முடியவில்லை’ என்றுக் கூறினாள். அப்போது அவர்,  ‘கவலைப்படாதே’ என்றுக் கூறி, அந்த நெருப்பிலிருந்து ஒரு குச்சியை அவளிடம் கொடுத்து,  ‘நீபோய் உன் மக்களிடம் சொல்,  இது வெளிச்சம், இதன் ஒளி கதகதப்பானது,  இது யார் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு கிடைக்கும்  இருளிலும் குளிரிலுமிருந்து உங்களுக்கு விடுதலைக் கிடைக்கும் என்றுச் சொல்’ என்று அவளிடம் கொடுத்தார்.

ஆம் பிரியமானவர்களே,  இந்த உலகத்தில் இருளிலே வாழ்கிற மக்கள், ஒளி அவர்களிடத்தில் அனுப்பபட்டும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ‘ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள்
ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது’. - (யோவான் 3:19). அவர்கள் கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே என்று தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள். இயேசுவேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
என்கிற வார்த்தை அவர்கள் அறியாததால், இவரும் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரே தெய்வம், இவரேயன்றி, இரட்சிப்படைவதற்கு வேறு நாமம் கொடுக்கப்படவில்லை என்பதை அறியாதபடி இருளிலும், அந்தகாரத்திலும் இருக்கிறார்கள். அப்படி இருளிலும் அந்தகாரத்திலும் இருந்த நம்மை,  ‘நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்,
ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்’  (1பேதுரு 2:9) என்று தேவன் தெரிந்துக் கொண்டு ஒளியைக் கொடுத்ததுப்  போல, அந்த ஆச்சரியமான ஒளியாகிய கிறிஸ்துவை நாம் இருளில் வாழ்கிற மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்களை ஒளியினிடத்திற்கு கொண்டு வர வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஒருவரும் சேரக் கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற தேவனிடத்தில் சேரும் மக்களும், அந்த ஒளியின் வெளிச்சத்தை தாங்க கூடாதவர்களாக இருளே எங்களுக்குப்
போதும் என்று இருளை விரும்புகிறதே அவர்கள் ஆக்கினைத்தீர்ப்பு அடைவதற்க்குக் காரணமாயிருக்கிறது. நாம் பெற்றுக் கொண்ட கிறிஸ்துவாகிய ஒளியை மற்றவர்களும் பெறச் செய்து, அவர்கள் ஒளியைக் கண்டு விலகி ஓடாதபடிக்கு, அவர்களும் நித்திய பரலோகத்தில் பங்குள்ளவர்களாய் மாறும்படி அவர்களையும், தேவனிடத்தில் கொண்டு வருவோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=221:2009-08-18-06-33-26&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43

மிருகத்தின் முத்திரை 666

......................மிருகத்தின் முத்திரை 666......................

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. - (வெளிப்படுத்தின விசேஷம்.- 13:16,17).

சத்திய வேதம் கடைசி காலங்களில் நடக்க இருக்கும் காரியங்களைக் குறித்து தீர்க்கதரிசனமாக அநேக காரியங்களைக் குறித்து தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து கண்டோம். இன்று அவனுடைய முத்திரையைக் குறித்துக் காண்போம்.


வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள காரியங்கள் மிக சீக்கிரமாய் நடைபெற உள்ளன. அவை உலகத்தில் வந்த எந்த மனிதனும் எதிர்ப்பார்க்காத விளைவுகளை உண்டுப்
பண்ண போகிறது. அதில் கூறப்பட்டுள்ளபடி மிருகத்தை வணங்கி, அதன் முத்திரையைத் தரித்துக் கொணடால் அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும்
வாதிக்கப்படுவான் என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது.


மிருகத்தின் முத்திரை என்பது, சில எழுத்துக்களோ, அல்லது குறிகளோ சேர்ந்து அது ஒரு மனிதனின்
நெற்றியிலோ அல்லது வலதுகையிலோ முத்திரையாகப் போடப்படும். அநேகர், அந்த முத்திரையை பெறுவது தங்களுக்கு கிடைத்த சிலாக்கியம் என்று எண்ணுவார்கள். அந்த முத்திரையை பெறுகிறவர்களுக்கு எல்லா வசதிகளும் தேவைகளும் கிடைக்கும். அதை பெறாதவர்களுக்கோ பயங்கரமான தண்டனைகளும், பிரச்சனைகளும் உருவாகும்.


மிருகத்தின் முத்திரையை யார் யார் தரித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் சாத்தானை ஏற்றுக் கொண்டு அவனை வணங்குவார்கள். அவர்கள் அவனை வணங்குவதால் சந்தோஷமாக அவன் கொடுக்கும் முத்திரையை தரித்துக் கொள்வார்கள். அவன் சாத்தானைப் போல் வரமாட்டான். அவன் தான் சாத்தான் என்பது யாருக்கும் தெரியாது. மிருகம் சாத்தானாக ஆனால் மகிமையான உருவத்தில் இருப்பதால், அவனை தெய்வமாக அநேகர் ஏற்றுக் கொள்வார்கள். அவனும் தன்னை தேவனாக காட்டிக் கொள்வான். அவனது இலக்கம் 666. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின்
நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்
கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன்
கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்படுதின விசேஷம். 13:17-18).


இந்த 666 என்னும் இலக்கம் சாத்தானுடைய இலக்கமாயிருக்கிறது. அவன் இந்த உலகத்தில் வருமபோது 7 தூஷணமான நாமத்தோடு வருவான். அதன் பிறகு, அவன் தன்னை தெய்வமாக காட்டிக்கொள்ளும்போது, அவனுடைய பெயரை விதவிதமாக மாற்றி 666 பெயர்கள் அவனுக்கு இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். எல்லா மதங்களும் கடைசி காலத்தில், ஒரு இரட்சகன் தோன்றுவார் என்றுக் கூறுகின்றன. உதாரணமாக, இஸ்லாமியருக்கு, இமாம் மஹ்டி, புத்தமதத்தை சார்ந்தவர்களுக்கு மைத்திரேயா புத்தர், இந்துக்களுக்கு கிருஷ்ணன், கிறிஸ்தவர்களுக்கு இயேசுகிறிஸ்து, யூதர்களுக்கு மேசியா என்று எல்லா மதத்தவரும் எதிர்ப்பார்த்திருக்கும் இரட்சகனாக இவன் தன்னைக் காட்டிக் கொள்வான். அதனால் எல்லா மதத்தினரும் சந்தோஷமாக அவனை ஏற்றுக் கொள்வார்கள். இவனுடைய மொத்த குறிக்கோளுமே ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தொழுதுக் கொள்ள வேண்டும் என்பதே.


இந்த முத்திரை என்பது மிருகத்தின் 666 பெயர்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். இந்த முத்திரையை
அணிந்தவர்கள் அதை மற்றவர்கள் காணும்படியாக அந்த முத்திரை அமைந்திருக்கும். அதை தரித்தவர்கள் அதைக் குறித்து பெருமைக் கொள்வர். அதை தரித்தவர்கள், வேலைக்குச் செல்லும்போது மற்றவர்கள் அதை காணமுடியும். கடைக்குச் செல்லும்போது கடைக்காரனுக்கு அந்த முத்திரை தெரியும்.


சரி, அந்த முத்திரை எப்படி இருக்கும்? அதைக் குறித்து அநேக காரியங்கள் கூறப்பட்டாலும், வெரிசிப் (VeriChip) எனப்படும் ஒரு அரிசியின் அளவிலான சிப், உடலில் பொருத்தப்படும்படியான அளவில் அமைந்துள்ளது. இது ஏற்கனவே மருத்துவ காரியங்களுக்காக சிலருடைய உடலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Verichip என்பது Radio Frequency Identification Device (RFID)
எனச் சொல்லப்படும் ஒரு சிறிய அளவு சிப் ஆகும். இந்த வெரிசிப் என்பதே மிருகத்தின் முத்திரை என்பது அல்ல. மிருகம் வந்த பிறகே அவனது முத்திரை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும். இந்த வெரிசிப் அவனது முத்திரையை ஒவ்வொருவருடைய வலதுகையிலோ நெற்றியிலோ பதிப்பதற்கு
உதவியாயிருக்கும் வகையில் மிகச் சிறியதாக இருப்பதால் இதுவே அவனது முத்திரையாக பயன்படுத்தப்படலாம் என்றுக் கூறப்படுகிறது. ஏன் அப்படி வலதுகை அல்லது நெற்றி என்று இரண்டு
இடங்களில் மட்டும் கூறப்படுகிறது என்றால் நமது சரீரத்திலேயே இந்த இரண்டு இடங்களில் மட்டும்தான், சிப்பிற்கு வேண்டிய பவர் (Power), Self Charging செய்யப்படுகிறது. இதை 15 மில்லியன் டாலர் செலவு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை 2000 வருடத்திற்கு முன்பே நமது சத்திய வேதம்
கூறியிருப்பது என்ன ஒரு அதிசயம்! எந்த ஒரு காரணத்தினாலும் நாம் இந்த முத்திரையை ஏற்றுக்
கொள்ளக்கூடாது. இதைக் குறித்து நாம் தொடர்ந்து நாளையும் காணலாம். நாட்களும் காலங்களும்,
அந்திக்கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மனிதனின் அறிவு பெருகிக் கொண்டே இருக்கிறது, அவை அவன் வரும்காலத்தில் அவன் உலகத்தை ஆளவதற்கு பயன்படும் வகையில் அமைந்திருக்கின்றன. நாம் இயேசுவை சார்ந்து அவரில் பரிசுத்தமாய் வாழ்ந்து, அவனது முத்திரையை தரித்துக் கொள்ளாமல், அவனது வருகைக்கு முன்பாக வர இருக்கும் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=228%3A2009-08-26-07-04-45&catid=24%3A2009-05-23-20-54-58&Itemid=43

சனி, 22 மார்ச், 2014

ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள்

...................ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் ....................


 முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும்  உண்டாகி,  பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.


மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின் மேலும்,  நீரூற்றுகளின் மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.


நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில்
மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில்
மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று,
இரவிலும் அப்படியேயாயிற்று.  -  (வெளிப்படுததின விசேஷம் 8:7-12).

இந்த நான்கு எக்காள நியாயத்தீர்ப்புகளிலும் மூன்றிலொரு பங்கு சேதமாகிறது என்றுப்
பார்க்கிறோம்.


பின்பு,  ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்து வரக்கண்டேன்: அவன் மகா சத்தமிட்டு; இனி
எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில்
குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன் - (வெளி 8:13). மேற்கண்ட இந்த வசனத்தில் ஐயோ என்று மூன்று முறை வருவதை கவனியுங்கள்.
அதிலிருந்து வரப்போகிற மூன்று எக்காள சத்தங்களினால் பயங்கரமான உபத்திரவங்களும்
ஆபத்துகளும் வரப் போகிறது என்று அர்த்தமாகும்.


ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு
நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக்
குழியிலிருந்து புகை  எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது;  அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கொலைசெய்யும் படிக்கு
அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்-
படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது;  அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக்
கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும். அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. இரும்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல்
யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச்
சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன. அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்;  எபிரெயு பாஷையிலே அபெத்தோன் (Abaddon)
என்றும்,  கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் (Apollyon)  என்றும்
அவனுக்குப் பெயர்.  - -  (வெளி 9:1-11)


இந்த வசனங்களின்படி, பாதாளக்குழி திறக்கப்பட்டு, வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வந்து, தேவனுடைய முத்திரையை தரித்திராத மக்களை, கொட்டும்படி அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகிறது. அதுவும் ஐந்து மாதத்திற்கு தொடர்ந்து அந்த வேதனை இருக்கும். அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமையாய் இருக்கும்! அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும். மனிதர்
சாக வேண்டும் என்று சாவைத்தேடி ஓடினாலும், சாவு அவர்களை விட்டு ஓடிப் போம். இந்த
வெட்டுகிளிகளுக்கு தலைவனாக அப்பொல்லியோன் காணப்படுகிறான். அப்பொல்லியோன் என்பதற்கு அழிக்கிறவன் என்று அர்த்தமாகும். முதலாம் ஆபத்து ஐந்துமாதங்கள் கழித்து முடிந்துப்போகும். இதோ, இரண்டாம் ஆபத்து வருகிறது:


ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,  எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை
நோக்கி: ஐபிராத்தென்னும் (Euphrates) பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில்
மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு
மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு  தூதர்களும்
அவிழ்த்துவிடப்பட்டார்கள். குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது
கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன். குதிரைகளையும் அவைகளின் மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினி நிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்;
குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய
வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது,  அவைகளாலே சேதப்படுத்துகிறது. அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும்
நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள்
கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும்விட்டு மனந்திரும்பவுமில்லை. -  (வெளி 9:13-21)


இந்த ஆபத்து இரண்டாவது ஐயோ என்று கூறப்படுகிறது. இந்த நியாயததீர்ப்பில் ஐபிராத்து
நதியண்டையில் கட்டப்பட்டிருந்த நான்கு தூதர்களும் கட்டவிழ்க்கப்பட்டு,  இருபது
கோடியாயிருக்கிற குதிரை சேனைகளை தலைமை தாங்கி மனுஷரில் மூன்றிலொரு பங்கை
கொன்றார்கள். நான்காம் முத்திரையாகிய நியாயத்தீர்ப்பில் பூமியில் கால்பங்கு மனிதர்
கொல்லப்படடதை கடந்த நாட்களில் படித்தோம். இப்போது மூன்றிலொரு பங்கு கொல்லப்படும்-
போது 58சதவீத மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனாலும் மீதியாயிருந்த மக்கள்
மனந்திரும்பவில்லை என்று பார்க்கிறோம். இன்னும் அவர்களின் மனம்  கடினப்பட்டுப் போய்
தேவனை நோக்கி பார்க்க மறுத்து,  இன்னும் வர இருக்கும்; நியாயத்தீர்ப்புகளை எதிர்கொள்வார்கள்.

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும்,  அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும்  ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். -  (வெளி 11:15-18)


இந்த கடைசி எக்காள நியாயத்தீர்ப்பு உண்மையில் ஒரு நியாயத்தீர்ப்பாக இல்லாவிட்டாலும், 
பரலோகத்தில் கெம்பீர சத்தங்கள் உண்டாயின என்று பார்க்கிறோம். பரலோகத்தில் சந்தோஷமான சத்தம் உண்டாகிறது. ஏனென்றால் முடிவு நெருங்கி விட்டது என்பதாலும், தேவன் தம்மேல் பயபக்தியாயிருந்தவர்களுக்கு  பலனளிக்க காலம் வந்தது என்றும் களிகூர்ந்தார்கள். இந்த ஏழு எக்காள நியாய தீர்ப்புகள் நடந்துக் கொண்டிருக்கும்போதே உலகத்தில் வேறு சில காரியங்களும் நடக்கின்றன. அவற்றைக் குறித்து நாளைய தினம் காண்போம்.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=234:2009-09-01-08-17-45&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43