.............தேவனுடைய வார்த்தையாகிய வேதம்..............
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).
.
ஒருஇங்கிலாந்து தேசத்தில் பிராங்க்மாரிசன் என்ற வக்கீல் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முழு நாத்திகர். அவர் இயேசுவைப் பற்றி எண்ணியிருந்த கருத்து என்னவென்றால், 'ஒருவேளை இயேசு என்ற ஒருவர் இந்த உலகில் பிறந்து, போதனை செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மரணமடைந்து பின்னர் உயிரோடெழுந்தார் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது' என்பதுதான். இவர் தனது கருத்தை தானே அடிக்கடி மெச்சிக் கொள்வார். மேடைகளிலும் இதனை குறித்து சொற்பொழிவாற்றுவார்.
.
திடீரென்று ஒரு ஆசை வந்தது. தன் திறமை எல்லாவற்றையும் செலவிட்டு இயேசு உயிரோடு எழும்பவில்லை என்பது சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதிவிட்டால், அது காலங்காலமாக மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுமே என்றெண்ணினார். மறுநாளே புத்தகம் எழுத உட்கார்ந்து விட்டார். வேதத்தை மறுத்து எழுத வேண்டுமென்றால், முதலில் வேதத்தை முழுவதுமாக படிக்க வேண்டுமல்லவா?.
.
மாரிசன் தாமதிக்கவில்லை. பரிசுத்த வேதாகமத்தை இரவு பகலாக படித்தார். வாசிக்க, வாசிக்க மறுப்பு வருவதற்கு பதிலாக வியப்பும் திகைப்பும் வந்தது. இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க கண்ணீர் வந்தது, தான் எத்தனை பெரிய பாவி என்று உணர்ந்தார். கடைசியாக புத்தகம் எழுதினாரா? ஆம், எழுதியே விட்டார். ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று எழுதுவதற்கு பதிலாக, 'இயேசு நிச்சயமாகவே உயிர்த்தெழுந்தார்' என்று ஆக்கபூர்வமான புத்தகம் எழுதி முடித்தார். இவர் எழுதிய புத்தகம்தான் ஆங்கிலத்தில் மிகவும் புகழ்பெற்ற நூலான “Who Moved the Stone” என்ற புத்தகமாகும்.
.
பயங்கரமான நாத்திகர்களையும் ஆஸ்திகர்களாக மாற்ற வல்லது நம் தேவன் தந்த பரிசுத்த வேதாகமம்தான். நிறைகளை மாத்திரம் சொல்லாமல், ஒரு மனிதன் செய்த குற்றங்களையும், அதினால் ஏற்பட்ட விளைவுகளையும், உள்ளதை உள்ளபடி சொல்வதால்தான் அது சத்திய வேதம் என்று பெயர் பெற்றது.
.
ஒரு மனிதனை மாற்ற வல்லது வேதாகமம்தான். அதை உள்ளன்போடு கர்த்தர் என்னோடு பேசுமே என்று பயபக்தியோடு படிப்பவர்கள் தாங்கள் இருந்தபடி இருக்க மாட்டார்கள். பரிசுதத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற்று, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவார்கள்.
.
ஒரே வசனத்திலிருந்து பலவித பிரசங்கங்களை செய்ய முடியும். விதவிதமான கருத்துக்களை சொல்ல முடியும். ஏனெனில் 'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'. ஆம், அந்த வார்த்தைகள், ஜீவனுள்ளது, வல்லமையுள்ளது. பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க வல்லது. அந்த அற்புத வார்த்தைகளை கவனத்தோடும், அன்போடும், ஆழமாயும் வாசிப்போம். நேசிப்போம். நம் வாழ்க்கை மாறும். நம் நினைவுகள் மாறும், நம் சிந்தனைகள் மாறும். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3772-13th-march-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக