.................துதிப்போம் சாத்தானை மேற்கொள்வோம்...................
நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிரியமானவர்களை புகழுகிறோம். சிலர், தஙகள் மேல் இருக்கும் அதிகாரிகளை புகழுவார்கள், சிலர் தங்கள் துணைவர்களை புகழுவார்கள், சிலர் தங்கள்
பிள்ளைகளை புகழுவார்கள். ஆனால் நாம் கர்த்தரை புகழுகிறோமா? அவரைத் துதிக்கிறோமா?
நமது போராட்ட வேளையிலும், தேவனை நாம் துதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். துதியினால்,
தேவ பிரசன்னத்தையே நாம் இந்த பூமியிலேக் கொண்டு வர முடியும். துதியின் மத்தியில் வாசம்
பண்ணுகிற தேவன் நம் தேவன். கேரூபீன்களும் சேராபீன்களும் ஓயாமல் புகழ்ந்துப் பாடிக்
கொண்டிருக்கும் துதிகளின் மத்தியில் அவர் வாசம் பணணுகிறவர். அவர் நாம் துதிக்கும் வேளையில் இறங்கி வந்து, நம்மை ஆசீர்வதிக்கிறார். ‘தம் நாமத்ததை பிரஸ்தாபம் பண்ணும் எந்த இடத்திலும் வந்து ஆசீர்வதிப்பேன்’ என்றவர் துதிக்கிற நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நமது தேவைகளை சந்திப்பார்.
துதியின் சத்தத்தில் சத்துரு வாசம் பண்ண முடியாது. உங்களுக்கு பிரச்சனைகள் வரும்போது, நீஙகள் தேவனை துதிக்க ஆரம்பியுங்கள். உங்கள் பிரச்சனை
தானாக மாறுவதை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் துன்பங்களினாலும், உயிருக்குயிரானவர்களை இழந்ததினாலும் துக்கத்தோடு இருக்கிறீர்களா?
அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை என்றுச் சொல்கிறீர்களா? தேவனை துதிக்க ஆரம்பியுங்கள், உங்கள் சோர்வுகள், துக்கங்கள் மறைய ஆரம்பிக்கும். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்,
துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். - (ஏசாயா 61:3) என்று
நாம் வாசிக்கிறோம். ஆம், அவர் நமக்கு ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையைக்
கொடுத்திருக்கிறார். அவரை துதிக்க துதிக்க துயரம் நீங்குவதையும் கிருபை பெருகுவதையும் கண்கூடாக காண்பீர்கள். ஆகவே துதிப்போம், சாத்தானை ஜெயிப்போம். துதிக்கு முன்பாக ஒரு எரிகோ கோட்டையால் நிற்க முடியவில்லை. துதிக்கு முன்பாக, எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர்.
துதிக்கு முன்பாக, எதிரிகள் ஒருவருக்கொருவர் வெட்டுண்டு விழுந்தார்கள். துதிக்கு முன்பாக சாத்தான் நிற்க முடியாது. அவன் வெட்கப்பட்டு ஓடுவான்.துதிப்போம் சாத்தானை மேற்கொள்வோம்
ஆமென் அல்லேலூயா!
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=264:2009-09-29-07-25-25&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக