.....................நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு...................
உங்கள்வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.... இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். - (1 கொரிந்தியர் 12:4,5,11).
.
பழங்காலத்தில் வழக்கத்தில் கதை ஒன்று உண்டு. தேவன் இந்த உலகத்தை படைத்தபோது, உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு தூதனை பாதுகாக்கும்படி நியமித்தார். மனிதனுக்கு, கடல் வாழ் ஜீவ ராசிகளுக்கு, காட்டில் வாழும் மிருகங்களுக்கு, மரங்களுக்கு, பூக்களுக்கு என்று எல்லாவற்றிற்கும் ஒரு தூதனை காக்கும்படி நியமித்தார்.
.
அப்போது புல்லை பாதுகாக்கும்படி அதற்கும் ஒரு தூதனை நியமித்தார். ஆனால் அந்த தூதன் அதில் விருப்பப்படவில்லை. இதை பாதுகாக்க நான் என்ன செய்வது? அது தானாகவே வளர்ந்து பெருகும். இதை பாதுகாக்க நான் செய்யப் போவது ஒன்றும் இல்லை என்று புறக்கணித்து விட்டு, ஒன்றும் செய்யாமல் அந்த தூதன் சென்று விட்டான்.
.
காலங்கள் மாறினபோது, புல் காய்ந்து போனது. பூக்கள் வாடிப்போனது, ஏனெனில் புல் காய்ந்து, அதன்மேல் பனித்துளிகள் நிற்காத காரணத்தினால். நாட்டில் வாழும் பசுக்கள், மாடுகள், ஆடுகள், காட்டில் வாழும் மான்கள் போன்றவை புல் இல்லாமல் பசியால் வாடின.
.
தேவன் அந்த தூதனை நோக்கி, 'நான் உனக்கு கொடுத்த வேலை சிறியதா? பெரியதா? பார் நீ பாதுகாக்காததால் புல் இல்லாமல் உயிரினங்கள் தவிப்பதை? இதில் உனக்கு சந்தோஷமா?' என்று கேட்டார்.
.
அப்போதுதான் தன் தவறை உணர்ந்த தூதன், தேவனிடம் மன்னிப்புக் கேட்டு, தன் சிறிய வேலையிலும் எத்தனை அரிய காரியங்கள் உண்டு என்பதை உணர்ந்து, தன் வேலையை செய்ய துவங்கினான்.
.
பிரியமானவர்களே, நமக்கும் சபையில் சிறிய வேலைதான் கொடுக்கப்பட்டிருக்கலாம், அல்லது நாம் வேலை செய்யும் இடங்களில் நம்மோடு வேலை செய்பவர்களை விட நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு சிறியதாக இருக்கலாம். நான் படித்த படிப்பு என்ன? என்னுடைய அறிவு என்ன? நான் இதை எப்படி செய்யலாம் என்று நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்பை அல்ல தட்டாமல், நம்மை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையோடும், நேர்மையோடும் செய்வோம்.
.
அதைக்காணும் தேவன் நாம் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கிறதை பார்த்து, நம்மை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார். ஆனால் நாம் நம் உள்ளத்தில் இது என்ன வேலை என்று வேண்டா வெறுப்பாக செய்வோமானால், அதையும் தேவன் காண்பார்.
.
'வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்' என்று வேதம் கூறுகிறது. ஆவியானவரே நமக்கு பகிர்ந்து கொடுக்கிற வரங்களிலும், ஊழியங்களிலும் உண்மையாக இருப்போம்.
.
ஆரம்பத்தில் உண்மையாக இருந்த பலர், அதினிமித்தமாக கர்த்தர் உயர்த்தும்போது, பெருமையின் நிமித்தமாக விழுந்து போயிருக்கிறார்கள். கர்த்தர் நம்மை உயர்த்தும்போது நாம் நம்மை அதிகமாக தாழ்த்துவோமானால் இன்னும் அதிகமாக உயர்த்தப்படுவோம்.
.
அநேகருக்கு கர்த்தருக்காய் உழைக்க வேண்டும் என்கிற வாஞ்சை உண்டு. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் கனி நிறைந்த ஜீவியம் இல்லாதபடியால், ஆவியானவரின் கனியாகிய அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஆவியானவர் விரும்பும் கனி இல்லாதிருப்பதால் அவர்களை கர்த்தர் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
.
அதே சமயம் கனி கொடுக்கிறவர்கள் என்று ஆவியானவர் நம்மை நம்பி கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில், பொறுப்பில் உண்மையோடு இருப்போம். கர்த்தர் பார்க்கிறார் என்கிற உணர்வோடு செய்வோம். இந்த சிறிய பொறுப்புதானா என்றோ, இந்த சிறிய வேலைதானா என்றோ முறுமுறுப்போடு செய்யாமல், நம்மால் இயன்ற அளவு சிறப்பாக செய்வோம். சிறிய வேலைக்கும் அதற்கேற்ற பொறுப்பு உண்டு. பலன் உண்டு. கர்த்தர் அதை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நம்மை ஏற்றக்காலத்தில் உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3805-24th-march-2014-&Itemid=57

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக