புதன், 19 மார்ச், 2014

தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை2014

.................தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை2014................

அருமையான சகோதர சகோதரிகளே நாளை நம்முடைய கன்வன்ஷனின் முக்கிய நாளான தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை.
இந்த ஆராதனை ஆசீர்வாதமாக காணப்படவேண்டும் வியாதியஸ்தர் சுகமகவேண்டும் சப்பானியர் நடக்கவேண்டும் குருடர் பார்வைஅடைய வேண்டும் செவிடர் கேட்கவேண்டும் ஊமைகள் பேசவேண்டும் பிசாசின் பிடியில் உள்ளவர்கள் விடுதலை ஆக்கப்படவேண்டும் தேவநாமம் மகிமைபடும் படியாக தம்முடைய வல்லமையானகிரியையை கர்த்தர் நடபிக்கவேண்டும் தம்முடைய பரிசுத்தவான்களை அக்கினிஜுவாலயக கர்த்தர் மாற்றவேண்டும் ஒரு பெரிய எழுப்புதல் நம்முடைய தேவன் நடப்பிக்க வேண்டும் கர்த்தர் பெரியவர் என்பதை ஜனங்கள் காணவேண்டும் ஜாதிகள் பார்த்து நடுங்கவேண்டும் . கர்த்தர் செய்த சில அற்புதங்களை நாம் தியானிப்போம் திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.மாற்கு 2 :5 அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. மாற்கு 3 :11
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.மாற்கு 5 :29பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.மாற்கு 5 :41,42பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.மாற்கு 8:25அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான.இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்.மாற்கு 9:25,26,27 பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.மாற்கு 1 : 34 இப்படி இன்னும் பல அற்புதங்களை கர்த்தர் செய்தார் அதுமாத்திரம் அல்ல அதே அதிகாரத்தை தாம்முடைய சீசர்களுக்கும் கொடுத்தார் .)அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர் களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார் மாற்கு 3 :14,15) இந்த நாளிலும் கர்த்தர் தம்முடைய அதிகாரத்தை தம்முடைய தாசர்களுக்கு கர்த்தர் கொடுக்க வேண்டும் . நாம் எல்லோரும் அந்த அதிசயத்தை பார்க்கவேண்டும் . கர்த்தர் தாமே உதவி செய்வாராக ஆமென் ஆமென் ஆமென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக