வெள்ளி, 28 மார்ச், 2014

கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது


.........கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது...........

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். -

(1கொரிந்தியர்11:26-27).

.
கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கைப்போட முடியாது. அதில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் தங்களுடைய பாவ நிலைமையை உணர்ந்து கர்த்தரோடு ஒப்புரவாகிப்பின்தான் பந்தியில் பங்கு பெற வேண்டும்.

.

அநேக சபைகளில் பந்தி பறிமாறுவதற்கு முன் போதகர்கள் எச்சரிக்கை செய்தியைக் கொடுப்பதில்லை. நேராக பந்திக்கு சபையாரை அழைத்து சென்று விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். போதகர்கள் பறிமாறுமுன், சபையை எச்சரித்துப் பின்னரே பந்தியை பறிமாற வேண்டும்.

.

'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' (1 கொரிந்தியர் 11:28-30) என்று வேதம் எச்சரிக்கிறது.

.

பேட் நோவாக் என்னும் போதகர் ஒரு ஆஸ்பத்திரியில் உள்ள சிறு ஆலயத்தில் போதகராக இருந்தபோது, அங்கு வேலை செய்யும் நர்சுகள் அவரிடம் ஜான் என்பவரைப் பற்றி தெரிவித்தார்கள். ஜானுக்கு அநேக டெஸ்ட்டுகள் செய்தும், எல்லாமே நார்மலாக இருந்தது. ஆனால் மனிதர் மிகவும் மெலிந்து போய்க் கொண்டு இருந்தார். டாக்டர்களுக்கு என்ன வியாதி என்றே தெரியாமல் இருந்தது.

.

ஒரு நாள் அவர் ஜானிடம் போய் பேச ஆரம்பித்தார். அப்போது ஆவியானவர் அவருடைய உள்ளத்தில் கர்த்தருடைய பந்தி எடுக்க ஆயத்தமா என்று கேட்க சொன்னார். போதகர் அவரிடம் அப்படி கேட்;டபோது, உடனே அவர், 'இல்லை, என்னால் எடுக்க முடியாது, நான் பாவி, என் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதவை' என்று கதற ஆரம்பித்தார்.

.

போதகர் பேட் அவரிடம், 'அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' என்று வசனத்தை சுட்டிக்காட்டி, கர்த்தரிடம் தன் பாவத்தை அறிக்கை செய்ய சொன்னார். அப்படியே அவர் தன் பாவத்தை அறிக்கை செய்தப்பின், பேட் அவரை அணைத்துக் கொண்டு, உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது, கர்த்தர் எல்லாவற்றையும் மன்னித்து மறந்து விட்டார். இப்போது நீங்கள் பந்தியில் பங்கு பெற விருப்பமா? என்று கேட்டபோது, அவர் ஆம் என்று கூறினார்.

.

அதன்படி அவர் பந்தியை ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்து, மீண்டும் அந்த வசனங்களை ஞாபகப்படுத்தி, அவருக்கு கொடுத்தபோது, அவர் அதை வாங்கி புசித்தார். அநேக வாரங்களுக்குப்பின் அவர் அன்றுதான் அப்பத்தை முதன் முதலாக புசித்தார். பாத்திரத்தையும் வாங்கி, குடித்தபோது, அவர் விடுதலையாக்கப்பட்டார். பின் மூன்று தினங்களுக்குள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக்கப்பட்டார். இது உண்மையில் நடந்த சம்பவம் ஆகும்.

.

பிரியமானவர்களே, கர்த்தருடைய பந்தியில் இரண்டு காரியங்களும் இருக்கிறது. பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது ஆசீர்வாதமாகவும், அபாத்திரமாக எடுப்பவர்களுக்கு அது ஆக்கினை தீர்ப்பாகவும் மாறுகிறது. பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது நோயை தீர்க்கும் மருந்தாக மாறியது உண்டு, சாபங்கள் மாறியது உண்டு, பாவங்கள் மாறியது உண்டு. ஆசீர்வாதமாக மாறியது உண்டு.

.

ஆனால் அபாத்திரமாய் அதில் பங்கு பெறுபவர்களுக்கு, அது ஆக்கினை தீர்ப்பாக மாறுகிறது. அதனால் பலவீனர்களும், வியாதியுள்ளவர்களுமாய் மாறியிருக்கிறார்கள். சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

.

ஆகையால் இந்த பரிசுத்த பந்தியில் பங்கு பெறுவதற்கு முன் நம்மை நாமே ஆராய்ந்து, 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்' என்ற வசனத்தின்படி, நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளாக தீர்க்காதபட்சத்தில், கர்;த்தரோடு ஒப்புரவாகி, பின் பந்தியில் பங்கு பெற வேண்டும்.

.

அப்படி பாத்திரமாய் பங்கு பெறுபவர்களுக்கு இயேசுகிறிஸ்து 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' என்று வாக்குதத்தம் செய்திருக்கிறார். பாத்திரமாய் பங்கு பெற்று நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3776-14th-march-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக