அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் இல்லை
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்
(யோவான் 1:12).
நம்முடைய கன்வன்சனுக்கு வருகிற யாரும் வெறுமையாய் போககூடாது எல்லோரும் அத்தும இரெட்சிப்பு பெற்று செல்ல வேண்டும்.
இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் வந்த எந்த மனிதனுக்கும் உரியது. 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்' (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. இப்படியிருக்க அநத நாமத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது. யார் யார் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் தேவனால் இலவசமாக கொடுக்கப்படுகிறது. எத்தனை பெரிய கிருபை!. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை பெற்று இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாலொழிய தேவ நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.
'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' எத்தனைப்பேர் என்று ஒரு கணக்கு இல்லை. உலகத்தின் அத்தனை ஜனங்களும் ஏற்றுக் கொண்டாலும் அத்தனைப்பேரும் தேவனுடைய பிள்ளைகளாக நிச்சயமாக முடியும். ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்? இயேசுகிறிஸ்து ஒரு சாராருக்கு மட்டும்தான் வந்தார் என்று நினைத்து அவருடைய இரட்சிப்பை தள்ளிவிடுபவர்கள் எத்தனையோ கோடி கோடியான பேர்கள்! அவர் அருளும் பாவ மன்னிப்பை புறக்கணித்து தங்களுடைய வைராக்கியத்தில் வாழ்பவர்கள் கோடி கோடியானோர்!. அத்தனைப்பேரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக மன்றாடுவோமா? கர்த்தருடைய வசனம் சொல்லப்படும்போது அவர்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உணர்வுள்ள இருதயம் அருளும்படி ஜெபிப்போமா? இரட்சிப்பு இலவசம், ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக