திங்கள், 24 மார்ச், 2014

மாம்ச சுபாம் ? ஆவியின் சுபாம் ?

...................மாம்ச சுபாம் ? ஆவியின் சுபாம் ?.....................

மாம்ச சிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். - ரோமர் - 8:6.


கிறிஸ்தவர்களாகிய நமக்குள் அனுதினமும் போராடும் மாம்ச சுபாவத்தையும், ஆவியின் சுபாவத்தையும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.  அவைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை.  ஆனால் அவைகளுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை ஒரு ஆவிக்குரிய மனிதனால் மட்டுமே நிதானிக்க முடியும்.  இன்று இவ்விரு சுபாவங்களுக்கிடையேயுள்ள வித்தியாசத்தைக் கீழே காண்போம்.


மாம்ச சுபாவமோ தனக்காகவே பிரயாசப்படும்.  பிறரிடமிருந்து தனக்கென்ன நன்மை கிடைக்கும்
என்றே பார்க்கும்.  ஆவியின் சுபாவமோ தனக்கானவைகளை மட்டுமல்ல பிறருக்கானவைகளையும் தேடும்.

மாம்ச சுபாவம் கீழ்படியாது.  மற்றவர்களுக்கு கீழ்பட்டிருப்பதையோ ஆலோசனையை கேட்பதையோ விரும்பாது.   ஆவியின் சுபாவமோ கீழ்ப்படிய தீவிரிக்கும்.  மற்றவர்களை ஆளுகை செய்ய விரும்பாது.  முழு வாழ்க்கையையும் தேவ சித்தத்திற்கும் தேவைப்படும் இடங்களில் மனித
அதிகாரத்திற்கும் தேவவைப்படும் இடங்களில் மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படுத்தும்.

மாம்ச சுபாவம் கனத்தையும் புகழையும் ஆர்வமாய் ஏற்றுக்கொள்ளும்.  ஆவியின் சுபாவமோ எல்லா கனத்தையும் மகிமையையும் தேவனுக்கே செலுத்தும்.

மாம்ச சுபாவம் நிந்தனைகளையும் அவமானங்களையும் வெறுக்கும்.  ஆவியின்
சுபாவமோ கிறிஸ்துவின் நாமத்திற்காக எல்லா அவமானங்களையும் நிந்தனைகளையும் சகிக்கும்.


மாம்ச சுபாவமும் விலையுயர்ந்த பொருட்கள் மேல் நாட்டம் கொண்டு அதை வைத்திருக்க விரும்பும். சாதாரண பொருட்களை அற்பமாய் எண்ணும். ஆவியின் சுபாவமோ எளிமையானவைகளில் மகிழும்.  எளியவர்களோடு நட்பு கொள்ளும். மாம்ச சுபாவம் பேராசை நிறைந்தது.  கொடுப்தைக் காட்டிலும் பெற்றுக் கொள்வதையே விரும்பும். ஆவியின் சுபாவமோ கொஞ்சத்தில் திருப்தியாயிருக்கும்.  வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே நலமென்று இருக்கும்.


அன்பானவர்களே! அனுதினமும் ஜெபித்து மாம்ச சுபாவத்தை சாகடித்து ஆவியின்படி நடவுங்கள்.
அப்பொழுது நீங்கள் தேவனுடைய புத்திரராய் இருப்பீர்கள்.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=182:2009-07-12-08-24-09&catid=24:2009-05-23-20-54-58&Itemid=43

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக