புதன், 30 ஏப்ரல், 2014

ஆவிக்குரிய மனிதன்

...............................ஆவிக்குரிய மனிதன்..........................
.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். - (1கொரிந்தியர்2:15).

.
பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் மூன்று வகையான மக்களைக் குறித்து எழுதுவதை 1கொரிந்தியர் 2:14 லிருந்து 3:3 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த மூன்று வகை மக்களில் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று நம்மை நாமே ஆராய்ந்து அறிந்து நம்மை திருத்திக் கொள்ள முற்படுவோம்.
.
1. ஜென்மசுபாவமுள்ள மனிதன்: 'ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்' (1 கொரிந்தியர் 2:14). ஜென்மசுபாவமுள்ள மனிதன் உலகப்பிரகாரமான மனிதன். தேவனை ஆண்டவர் என்றும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளாதவன். தேவனைக் குறித்த காரியங்கள் அவனுக்கு பைத்தியமாக தோன்றும். அவைகளை அவனுக்கு சொன்னாலும், கிண்டலும் கேலியும் செய்து, அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனே ஜென்மசுபாவமுள்ள மனிதன். இவன் பரலோகத்திற்கு செல்வது என்பது மிகவும் அரிது. 'இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' (யோவான் 14:6) என்று சொன்னதை அவன் ஏற்றுக் கொள்ளாததால் அவன் பிதாவினிடத்தில் செல்ல முடியாது.
.
2. மாம்சத்துக்குரிய மனிதன்: 'மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று' (1கொரிந்தியர் 3:1). இந்த வகையை சேர்ந்தவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள். ஆனால் மாம்சீகத்திற்குரியவர்கள், அல்லது கிறிஸ்துவுக்குள் குழந்தைகள். மறுபடியும் பிறந்தவர்கள், ஆனால் கிறிஸ்துவுக்குள் வளராமல் இன்னும் குழந்தைகளாகவே இருப்பவர்கள். ஒரு குழந்தை பிறந்து 18 வருடம் ஆகியும் குழந்தைத்தனமாகவே இருந்தால், அல்லது ஒரு வயது குழந்தைப் போலவே நடந்துக் கொண்டால் அதை பெற்ற பெற்றோருக்கு எத்தனை வேதனை? அப்படித்தான் நான் மறுபடியும் பிறந்தேன் என்று சொல்லியும், இன்னும் கிறிஸ்துவுக்குள் குழந்தையாகவே இருந்தால் நம் தேவனும் வேதனைப்படுவார்.
.
அவர்களுடைய குணாதிசயங்கள், 'பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?' (1 கொரிந்தியர் 3:3). பொறாமையும், வாக்குவாதமும், பேதகங்களும் நம்மிடத்தில் இருந்தால் நாம் இன்னும் மாம்சத்துக்குரியவர்களாகவே இருப்போம். கிறிஸ்தவர்களில் அநேகர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். நம்மிடத்தில் கிறிஸ்துவில் பூரண வளர்ச்சிக் கிடையாது. நம்மோடுக் கூட இருக்கும் சகவிசுவாசிகளோடு, வாக்குவாதங்களையும், பேதகங்களையும் வைத்துக் கொண்டு, ஆலயத்திற்கு வந்து கர்த்தரை தொழுதுக் கொண்டு இருக்கிறோம்;. நம்மைக் கண்டு தேவன் மிகவும் வருத்தப்படுவார். எத்தனை வருடங்களாகியும், இன்னும் வளரவே இல்லையே என்று! நாம் இப்படி இருப்பதால் சக விசுவாசிகளுக்கும் வேதனை, போதகருக்கும் வேதனை! நம் இந்த நிலை மாறவேண்டும். நாம் மாம்சத்திற்குரியவர்களாக இல்லாமல் கர்த்தருக்குள் வளருவோமாக!
.
3. ஆவிக்குரிய மனிதன்: 'ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்' என்று வசனத்தில் பார்க்கிறோம். ஆம், ஆவிக்குரியவனுக்கு கள்ள போதகங்களைக் குறித்து தெரியும், அவற்றை கேட்டு விலகுவான். தேவனுக்கேற்ற வழிகளில் நடப்பான். கர்த்தருக்கு எதுப் பிரியம் என்று அறிந்து அதன்படி தன் வழிகளை சீர்ப்படுத்துவான். 'மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்,..' (எபேசியர் 4:11) என்ற வசனத்தின்படி, நாம் பூரணபுருஷர்களாக விளங்க வேண்டும் என்பதே தேவனுக்கு நம்மைக் குறித்த சித்தமாயிருக்கிறது. விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமனமாக சகவிசுவாசிகளோடு நாம் வளர்ந்து பூரண புருஷர்களாக நாம் கனிக் கொடுக்க வேண்டும். தேவனுடைய சாயலை ஒவ்வொரு நாளும் நாம் அணிந்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆவிக்குரிய மனிதனே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் அவரோடுக்கூட எடுத்துக் கொள்ளப்படுவான்.
.
பிரியமானவர்களே, நாம் இதில் எந்த வகையில் இருக்கிறோம்? ஜென்மசுபாவமுள்ளவர்களாயிருந்தால் நாம் பரலோகம் செல்ல முடியாது. மாம்சத்துக்குரியவர்களாக இருந்தால், கிறிஸ்துவின் வருகையில் நாம் கைவிடப்படலாம், ஆனால் ஆவிக்குரியவர்களாக இருந்தால், தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யான் என்ற வசனத்தின்படி நம்மை பரிசுத்தமாய்க் காத்துக் கொண்டு, அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தமாக முடியும். நம்மை நாமே ஆராய்ந்து, விட வேண்டியதை விட்டு, ஆவிக்குரியவர்களாக கர்த்தரோடு என்றென்றும் வாழ்கிறவர்களாக தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

பாதி இரும்பும் பாதி களிமண்ணும்

.................பாதி இரும்பும் பாதி களிமண்ணும்.............

இன்றைய ஐரோப்பிய யூனியன் குறித்து தானியேல் இவ்வாறு கூறுகிறான்.

தானியேல் 2-ம் அதிகாரம் 41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும். 43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

மேதிய பெர்சிய அரசுக்குப் பிறகு, நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் வெண்கலதினாலான வயிறு தொடை இவற்றிற்கு ஒப்பான இன்னொரு வல்லரசு எழும்பும் என்ற தானியேலின் கூற்றின்படி கிரேக்க சாம்ராஜ்யம் உலகில் ஸ்தாபிக்கபடுகிறது. அதற்கு பிறகு சிலையின் இரும்பிலான கால்களுக்கு ஒப்பாக நான்காவதாய் ஒரு வல்லரசு எழும்பும், என்று தானியேல் முன்னறிவித்தபடி ரோமப்பேரரசு கிரேக்க சாம்ராஜ்யத்தின் முடிவில் எழும்புகிறது.இரும்பைப்போல உரம் வாய்ந்ததாய் எழும்பின ரோமப்பேரரசு , சிலையின் இரு கால்களுக்கு ஏற்ப கிழக்கு,மேற்கு என்று இரண்டாக பிரிகிறது. இவையாவும் சரித்திரமாகும். இவ்வாறு தீர்க்கதரிசனங்கள் சரித்திரப்பூர்வமாய் நிறைவேறுவது கிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகளில் முக்கியமானதாகும்.

நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் பத்துவிரல்கள் இரும்பும் களிமண்ணுமாய் இருந்தன என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த பத்துவிரல்களும் ஒரு புதிய சாம்ராஜ்யம் என்று தானியேல் கூறவில்லை.அவை ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எழும்பும் பல நாடுகளின் ஒரு கூட்டமைப்பையே குறிக்கின்றன என்று நாம் நிதானிக்கலாம். தானியேலின் தீர்க்கதரிசனத்தின் படி பாபிலோனிய, மேதிய பெர்சிய, கிரேக்க, ரோமப் பேரரசுகள் உலகின் வல்லரசுகளாய் இருந்து முடிந்துவிட்டன. சிலையின் பத்து விரல்களுக்கு ஒப்பான ரோமப்பேரரசிலிருந்து எழும்பும் சில நாடுகள் சேர்ந்த அமைப்பின் காலத்திற்கு இப்போது உலகம் வந்துள்ளது. அதன்படி 1957 ஆம் ஆண்டு பழைய ரோம சாம்ராஜ்யம் எந்தெந்த நாடுகளில் வியாபித்திருந்ததோ அந்தந்த இடங்களைச் சேர்ந்த ஆறு ஐரோப்பிய நாடுகள் ரோமில் கூடி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு "European Economic Community"என்ற அமைப்பை ஏற்படுத்தின. இது "ஐரோப்பிய பொதுச்சந்தை" (European Common Market) என்று அழைக்கப்படுகிறது. இது 1958ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி செயல்படத் துவங்கியது. இந்த ஒப்பந்தம் "Treaty of Rome"என்று அழைக்கப்பட்டது. இதனுடைய ஆரம்ப விழா பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் கொண்டாடப்பட்டது. ஆறு நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்திருந்தும் பத்து கொடிக்கம்பங்களுடன் இந்த ஆரம்பவிழா நடந்தது.(இப்போது இதில் 27 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன) இந்த E.E.C தான் நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் தோன்றிய சிலையின் பத்துவிரல்களுக்கு ஒப்பான வல்லரசாகும். இந்த E.E.C ஓரு பொருளாதார அல்லது வாணிப அமைப்புத்தானே. அது எவ்வாறு ஒரு வல்லரசாகலாம் என்ற கேள்வி எழலாம்.இந்த E.E.C நிறைவேற்றிவருகிற தீர்மானங்கள் E.E.C ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.கீழ்கண்டவை E.E.C யின் தீர்மானங்களில் ஒரு சிலவாகும்:

ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் (United states of Europe) என்ற அமைப்பை ஏற்படுத்துதல்.(இது இன்று EU அதாவது European Union என்று ஆகியிருக்கின்றது.)

E.E.C யில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே பாஸ்போர்ட் முறையை நீக்கிவிடுதல் (ஏற்கனவே European standard passport என்ற பெயரில் அனைத்து அங்கத்தின நாட்டு குடிமக்களுக்கும் burgundy நிறத்தில் பொது பாஸ்போர்ட் இப்போது வழங்கப்படுகிறது.இவர்கள் அங்கத்தின நாடுகளிடையே விசா இன்றி சென்றுவரலாம்)

E.E.C நாடுகளுக்கு ஒரு பொது நாணய முறையைக் கொண்டு வருதல் (Common currency) (ஏற்கனவே வந்தாயிற்று. இன்றைக்கு இதன் 15 அங்கத்தினர்களிடையே யூரோ(Euro)எனும் பொது கரன்சி புழக்கத்திலுள்ளது)

E.E.C நாடுகளுக்கென்று ஒரு தனி பொது ராணுவத்தை நிறுவுதல் (European Union battlegroups (EU BGs) என்ற பெயரில் ஒரு கூட்டுப்படை 2007 முதல் செயல்படத்துவங்கியுள்ளது)

இத்தீர்மானங்கள் E.E.C அதாவது ஐரோப்பிய யூனியன் ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உணர்த்துகின்றன.இப்போது European Union-ல் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா,நெதர்லாந்து, போலந்து, போர்சுகல், ரொமானியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து என்னும் இருபத்தேழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மேலும் இந்த அமைப்பு தனக்கென்று ஒரு European Parliament என்ற பாராளுமன்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு 1979-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேர்தலும் நடத்திவருகின்றது. இந்த பாராளுமன்றத்தில் இன்றைக்கு 785 பேர் உறுப்பினர்கள். தற்போதைய ஜனாதிபதி José Manuel Barroso ஆவார். இந்தியாவிலும் Delegation of the European Commission to India, Bhutan and Nepal தலைநகர் டில்லியில் இயங்கிவருகின்றது. இந்த ஐரோப்பிய கமிஷனின் தலைமையகம் இப்போது பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் உள்ளது. பெரிய உலக பாங்குகளின் இணைப்பு சங்கிலி இப்போது பிரசல்சோடு இணைக்கப்பட்டுள்ளது. உலகமன்றத்திலுள்ள 160 கம்புயூட்டர் மையங்களும் பிரசல்சோடு இணைக்கப்படுள்ளன. European Union-னின் தலைமையகத்தில் மூன்று அடுக்குமாடி உயரமுள்ள ஒரு கம்புயூட்டர் உள்ளது. அதன் பெயர் Beast (மிருகம்) என்பதாகும். அந்திகிறிஸ்துவை வேதம் மிருகம் என்று குறிக்கிறது. இந்த Beast என்ற கம்ப்யூட்டர் உலகில் உள்ள அத்தனை பில்லியன் மக்களின் தகவல்களையும் கணக்கிடும் ஆற்றல் வாய்ந்ததாகும். European Union-ன் தலைமையக கட்டிடமான Berlaymont building ஒரு கவிழ்த்துவைக்கப்பட்ட சிலுவையின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்திகிறிஸ்து செயல்படுவான் என்று தீர்க்கதரிசன ஆராய்சியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
(இரட்சிப்பின் வழி)

நான்கு பேரின் விசுவாசம்

.........................நான்கு பேரின் விசுவாசம்...............................
.

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். - (மாற்கு 2:5).

.

இயேசுகிறிஸ்து கப்பர்நகூம் என்று சொல்லப்படும் தம்முடைய பட்டணத்திற்கு வந்து, ஒரு வீட்டில் இருந்து ஜனங்களுக்கு போதிக்க ஆரம்பித்தார். அங்கு நிற்க இடமில்லாதபடி அநேகர் கூடி வந்திருந்தார்கள். அங்கு ஜனம் நிற்கவே இடம் இல்லாமல் இருக்கும்போது, நான்கு பேர் ஒரு திமிர்வாதக்காரனை ஒரு கட்டிலில் கிடத்தி, எப்படியாவது இயேசுகிறிஸ்துவிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.

.

திமிர்வாதக்காரன் என்றால் படுக்கை கிடப்பானவன். அவனுக்கு தன்னால் எழுந்து எதுவும் செய்ய முடியாது. யாராவது உதவி செய்துதான் அவன் சாப்பிடவே முடியும். கைகளும், கால்களும் மடங்கப்பட்டு, கண்கள் மட்டும் திறந்து பார்த்து, கொண்டு இருப்பவனாகவே இருந்திருக்க முடியும்.

.

அந்த இரண்டு கால்கள் எழுந்து நடக்க வேண்டும் என்று எட்டுக் கால்கள் அவனை சுமந்துக் கொண்டு இயேசுவிடம் கொண்டு வந்தன. அங்கு கொண்டு வந்துப் பார்த்தால் அந்த வீட்டின் முன் ஒரே கூட்டம்! அவர்கள் நிச்சயமாக அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டிருக்க வேண்டும், 'கொஞ்சம் வழிகொடுங்கள், நாங்கள் இந்த மனிதனை இயேசுவிடம் கொண்டு செல்ல வேண்டும்' என்று. ஆனால் ஒருவருக்கும் விருப்பமில்லை, 'நாங்களே எப்போது அவர் எங்களுக்கு உதவி செய்வார் என்று காத்துக் கொண்டு, நிற்க இடமில்லாமல் கஷ்டப்பட்டு நின்றுக் கொண்டிருக்கிறோம், நீங்க வேற ஒரு கட்டிலையே கொண்டு வந்து எங்களிடம் இடம் கேட்கிறீர்களா?' என்று மிரட்டி இருப்பார்கள்.

.

அந்த நான்கு பேரும் யோசித்தார்கள், என்ன செய்வது, எப்படி கிறிஸ்துவிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று. அவர்களில் ஒருவர் 'நாம் இவரை வீட்டின் மேலே கொண்டுபோய், ஓட்டை பிரித்து, கீழே இறக்கினால் என்ன' என்று சொல்ல, மற்றவர்களும், ஆம், வேறு வழியே இல்லை என்று தடதடவென்று வீட்டின் மேலே ஏறினார்கள். ஓட்டைப் பிரிக்க தொடங்கினார்கள். அதைப் பார்த்து வீட்டு சொந்தக்காரர் சும்மா இருந்திருப்பாரா? நம் வீட்டை யாராவது உள்ளே நுழைந்தாலே நாயை விட்டு விரட்டுகிறோம். ஆனால் அந்த வீட்டுக்காரர், இந்த நான்கு பேரின் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பார்த்து, சரி ஓட்டைப் பிரிக்கட்டும், ஆனால் முடிந்த பிறகு திரும்ப சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். (என் கற்பனைதான் இது).

.

அவர்கள் நான்கு பேரும், அந்த திமிர்வாதக்காரனை மெதுவாக மேலேயிருந்து, கிறிஸ்து நிற்கும் இடத்தில் இறக்கினார்கள். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும், இதுவரை யாரும் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருக்க முடியாது என்று.

.

'இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்' (5ம் வசனம்). ஆம், திமிர்வாதக்காரனின் விசுவாசத்தைக் கொண்டு அல்ல, அவரை சுமந்து வந்த நான்கு பேரின் விசுவாசத்தைக் கண்டு, இயேசு திமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார்;. அல்லேலூயா!

.

மட்டுமல்ல, 'நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்' (11-12 வசனங்கள்).

.

பிரியமானவர்களே, அந்த திமிர்வாதக்காரனைப் போல நம்மோடு இருக்கும் ஜனங்களில் அநேகர் கிறிஸ்துவிடம் சேரும்படி எந்தவித உதவியும் அற்றவர்களாக, நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறவர்களாக, தாங்கள் இருக்கும் பரிதாபமான நிலையில் வாழ்ந்து மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். நம் நாடு, நம் தேசம், நம் சகோதரர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய மக்களில் அநேகர் இப்படித்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவாரும் இல்லை, கர்த்தரைக் குறித்து அறிவிப்பாரும் இல்லை.

.

அந்த நான்கு பேர் அவர்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை, தங்களை யார் என்ன நினைத்தாலும், சொன்னாலும் சரி, எப்படியாவது தங்களுடைய நண்பனோ, உறவினரோ தெரியவில்லை, அந்த திமிர்வாதக்காரன் சுகமடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கிறிஸ்துவிடம் கொண்டு வந்ததுப் போல் நாமும் நம்மோடு இருக்கும், நம்மோடு வேலை செய்யும், நம்முடைய உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ கிறிஸ்துவை அறிவித்து, அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமல்லவா? நாம் அவரிடம் கொண்டு போய் சேர்த்தால் போதும் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.

.

அந்த திமிர்வாதக்காரன் உடல் சுகம் பெற்றது மட்டுமல்ல, தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இரட்சிப்பையும் பெற்றுக் கொண்டான். கிறிஸ்துவினிடத்தில் வரும்போது, உடல்சுகம் மட்டுமல்ல, உள்ளத்தின் சுகமும் பெற்று, பரலோக இராஜ்யத்திற்கு பங்குள்ளவர்களாக மாறி, நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்வார்கள். அப்போது அதை காண்பவர்கள் அதை செய்ய வல்லமையுள்ள தேவனுக்கு மகிமையை செலுத்துவார்கள். அந்த நான்கு பேரைப் போல நாமும் உதவியற்று, நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவோமா? நாம் பெற்ற இரட்சிப்பை அவர்களும் பெற்றுக் கொள்ள உதவுவோமா? ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

............கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு .............
.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - 1 பேதுரு 5:7.

.
விசுவாசத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜார்ஜ் முல்லர் George Mueller (1805-1898) என்னும் அருமையான தேவ ஊழியர். அவர் கர்த்தருக்காக தன் வாழ்நாளில் பெரிய காரியங்களை செய்ததுமல்லாமல், விசுவாசத்தில் எப்படி எல்லாம் சாதிக்கலாம் என்பதை நடைமுறையில் செய்துக் காட்டியவர். அவர் அநேக அனாதை இல்லங்களை வைத்து நடத்தியவர். மாத சம்பளம் ஒன்றும் பெறாமல் கர்த்தர் மேல் விசுவாசத்தின் மூலமே அவைகளை நடத்திக் காட்டியவர். அவர் ஒருமுறை தன் அனாதை இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை கீழ்க்கண்டவாறு கூறினார்:

.

ஒரு நாள் காலை உணவிற்கு நேரம் வந்தபோது இங்கிலாந்தில் உள்ள எனது அனாதை இல்லத்தில் உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் கையில் பணமும் இல்லை. என்னைக் காண என் நண்பனின் மகள் வந்திருந்தாள். அவளை சாப்பிடும் அறைக்குக் கூட்டிச் சென்று, 'எங்கள் தகப்பன் செய்யப் போகும் காரியத்தைப் பார்' என்றுக் கூறி, அவளை அந்த இடத்தில் அமரச் செய்தேன். அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து, எங்கள் தலைளை தாழ்த்தி, 'எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுக்க இருக்கும் உணவிற்காக நன்றி' என்றுச் சொல்லி ஜெபித்தோம்.

.

ஆமென் என்றுச் சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளைச் செய்பவர் நின்றிருந்தார். அவர், 'எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதியதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்' என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக உடைந்துப் போய் விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமென்றால், அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்றவேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா என்றுக் கேட்டாராம். 'அன்று அருமையான காலை உணவு எங்களுக்கு கிடைத்தது' என்று முல்லர் கூறினாராம்.

.

உங்கள் தேவைகளைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று வசனம் கூறுகிறது. அன்று கேரீத் ஆற்றங்கரையில் எலியா தீர்க்கதரிசிக்கு காகங்களைக் கொண்டு காலையும் மாலையும் போஷித்து (1 இராஜாக்கள் 17:6-7) வழி நடத்தின தேவன், இன்றும் உங்கள் தேவைகளை சந்திக்க மாறாதவராயிருக்கிறார்.

.

நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையைக் காண்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறினதுப் போல நாம் விசுவாசித்தால் தேவன் நம் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்ய வல்லராயிருக்கிறார். ஒரு முல்லருடைய வாழ்வில் அற்புதங்களைச் செய்ய தேவன் வல்லமையுள்ளவராயிருக்கும்போது நம் வாழ்விலும் அவர் செய்ய வல்லவராகவேயிருக்கிறார். அவர் படசபாதமுள்ள தேவன் அல்ல. ஆனால் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று வேதம் கூறுகிறது. நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் கலங்க வேண்டும்? அவர் நம் தேவைகளை சந்திக்கிற யெகோவாயீரே! கடன்தொல்லையா? பணத்தேவையா? வேலையில்லாத பிரச்சனையா? கலங்காதிருங்கள்! விசுவாசத்தோடு தேவனிடம் கேளுங்கள். தேவன் உங்கள் தேவைகளை சந்திக்க போதுமானவராயிருக்கிறார். வானமும் பூமியும் அவருடையது. அவருடைய பிள்ளளைகளாகிய நமக்கு செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். பெரிய காரியங்களைச் செய்ய நம்தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.
(Anudhina Manna, A Free Daily Devotional)

விசுவாச தொடுதல்

.............................விசுவாச தொடுதல்...............................
.

உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். - (மாற்கு 5:30).

.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, இஸ்ரவேலில் உள்ள கலிலேயாவை சுற்றி அவர் செய்த அற்புதங்கள் அநேகம். மற்ற இடங்களை பார்க்கிலும் அவர் கலிலேயாவில்தான் அநேக அற்புதங்களை செய்தார். அவர் முதன்முதலாக செய்த அற்புதம் கலிலேயாவில் உள்ள கானா ஊரிலேதான். அவருடைய சீஷர்களாகிய பேதுரு அந்திரேயாவின் சொந்த ஊரும் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம். கப்பர்நகூம் இயேசுவின் நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கலிலேயாவில் உள்ள கடலில் தான் அவர் நடந்து வந்து அற்புதம் செய்தார். காற்றையும் கடலையும் அடக்கினது இந்த கலிலேயா கடலில்தான். அப்படி விசேஷித்த ஊராகிய கலிலேயாவிற்கு செல்லும்போது நம் உள்ளமெல்லாம் பரவசமாவது இயற்கையே!

.

கலிலேயாவின் தூசி படிந்த தெருக்களில் இயேசுகிறிஸ்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஜெப ஆலயத்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து, தன் மகளுக்காக வந்து ஜெபிக்க கேட்டு கொண்டான். அதன்படி அவர் நடந்து அவனுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த காரியம் நடந்தது.

.

அந்த நாட்களில் பெண்களை ஒரு பொருட்டாக எண்ணாத உலகம். இந்த நாட்களிலும் மத்திய கிழக்கு பகுதிகளில் பெண்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அவர்களுக்கு தலையிலிருந்து கால் வரை கறுப்பு அங்கி தரித்து, அவர்கள் முகம் வெளியே தெரியாதவாறு அவர்கள் மூடப்பட்டு தான் வெளிஉலகத்தை காண வேண்டும். இந்த நாட்களிலேயே அப்படி என்றால் அந்த நாட்களில் இன்னும் அதிகமாக பெண்களை புறக்கணித்த நாட்கள். அதில் ஒரு பெண் பன்னிரண்டு வருடமாக அதிகமான உதிர போக்கினால் பாடுபட்டு வந்தாள். பயங்கர வேதனையும், தொடர்ந்து உதிரம் போய் கொண்டிருந்தபடியால், வெளிறிப்போய், இரத்த சோகை இருந்திருக்கலாம். அவள் தன் சொத்து பணம் எல்லாவற்றையும் வைத்தியர்களுக்கு செலவழித்தும் கொஞ்சமும் சுகமாகாத நிலைமை! 'ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக' - (லேவியராகமம் 15:25-27). இந்த வசனத்தின்படி ஒரு பெண் உதிரம் ஊறிக்கொண்டிருந்தாள் அவள் தீட்டுப்பட்டவள். அவள் யாரையும் தொடக்கூடாது. அவளை தொட்ட யாரும் தீட்டுப்பட்டவர்களே!

.

இந்த பெண் இயேசுகிறிஸ்துவின் சுகமாக்கும் வல்லமையை குறித்தும் அவர் அவள் இருந்த ஊரின் பக்கமாக வருகிறார் என்றும் கேள்விப்பட்டாள். அவளுக்கு அவரை எப்படியாவது தொட வேண்டும், தொட்டால் நான் சுகமாவேன் என்கிற எண்ணம் உள்ளத்தில் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆனால் மனதிற்குள்ளே அவர் என்னை தொட்டால், அவர் தீட்டுப்பட்டுவிடுவாரே என்ற அச்சம் இருந்தது. இந்த யூத மக்கள் என்னுடைய நிலையை அறிந்தால் என்னை கல்லெறிந்து கொன்று போடுவார்களே என்று நினைத்திருந்தாள். ஆனாலும் என்ன ஆனாலும் சரி, நான் அவரை போய் தொடுவேன். நான் அவரை தொட்டால்தானே தீட்டு, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை மட்டும் தொட்டாலே போதும் நான் சுகமாவேன் என்று விசுவாசத்தோடு, அவர் இருந்த கூட்டத்திற்குள் செல்ல ஆரம்பித்தாள். ஒரே கூட்டம்! ஒருவரும் வழிவிடுவதாக இல்லை. ஆனால் இவளோ, மற்றவர்களை முட்டி தள்ளி கொண்டு, இயேசுவை நோக்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரு சிலர் அவளை திட்டினார்கள், ஏய் கிழவி, ஏன் என் காலை மிதித்து கொண்டு போகிறாய்? என்று. எதையும் பொருட்படுத்தாதவளாக அவள் இயேசு இருக்கும் இடம் வரை சென்று, கடைசியாய் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். என்ன ஆச்சரியம்! அவள் தொட்ட மாத்திரத்தில் தானே அவள் உதிரம் ஊறுவது நின்றது, ஒரு புதிய பெலத்தை பெற்றவளாக, கண்களில் கண்ணீர் வழிய இயேசுவே உமக்கு நன்றி என்று மனதளவில் சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, 'உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்'. - (மாற்கு 5:31-34)

.

அவரை தொட்டபடியும் அவரை நெருக்கியபடி சென்றவர்களும் அநேகர். ஆனால் அவர்களுடைய யாருடைய தொடுதலும் இயேசுவுக்குள் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. ஆனால் விசுவாசத்தோடு அந்த பெண் அவரை தொட்டதை, அதுவும் அவருடைய வஸ்திர ஓரத்தை தொட்டதை அவர் அறிந்தவராயிருந்தார்.

.

இந்த நாளிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆயிரமாயிரமானவர்கள். அவரோடு நான் மிகவும் நெருக்கமாயிருக்கிறேன் என்று சொல்பவர்களும் அநேகர். ஒரு ஊழியக்காரர் சொன்னார், இயேசுகிறிஸ்து அவருடைய தோள்களின் மேல் கைளைபோட்டு, பரலோகத்தில் தோட்டத்தில் உலாவினார் என்று. இப்படி அநேகர் சொன்னாலும், அவருடைய உள்ளத்தை தொடுபவர்கள் வெகு சிலரே! இவரிடம் நான் சென்றால் இவர் என்னை சுகமாக்குவார் என்கிற விசுவாசத்தோடு சென்று அவரை தொடுபவர்களே அவரை தொடுபவர்கள்! சரீரப்பிரகாரமாக ஒருவருடன் பக்கத்தில் இருப்பதற்கும், அவருடைய உள்ளத்தை தொடுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கிறிஸ்துவை குறித்து அறியாமலேயே, அவரை விசுவாசியாமலே அவருக்கு பக்கத்தில் இருக்கலாம், ஆனால் அவருக்கு தெரியாமல் அவரை தொட முடியாது, அதேப்போல அவரை தொட்டு சுகமடையாமல் இருப்பது என்பதும் இயலாத காரியம்.

.

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், என்னை விட நன்கு ஜெபம் செய்பவர்கள் அனேகர், எனக்கு ஜெபிக்க கூட தெரியாது. இயேசுகிறிஸ்து என் ஜெபத்தை கேட்பாரா என்று. நம் உள்ளத்திலிருந்து விசுவாசத்தோடு, கண்களில் கண்ணீர் வழிய, அவர் சுகமளிக்கும் தேவன் என்று அறிந்து, அப்பா எனக்கு சுகத்தை தாரும் என்று கேட்கும்போது, அவருடைய செவிகள் அந்த ஜெபத்திற்கு திறந்தவைகளாகவே இருக்கின்றன. பதிலை கொடுப்பதற்கு அவர் வாஞ்சையுள்ளவராகவே இருக்கிறார். அந்த பெண் சுற்று சூழலை பார்க்கவில்லை, கண்டுபிடிக்கப்பட்டால், யூதர்களின் தண்டனை தன்னிடம் நிறைவேறுமே என்று நினைக்கவில்லை, விசுவாசத்தோடு, 'நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்' என்று சொல்லி போய் தொட்டாள். தொட்ட மாத்திரத்தில் சொஸ்தமானாள். இந்த பெண்ணை போல நாமும் அவரை அண்டி கொள்வோமா? அவரால் சுகமாகாத வியாதி ஒன்றும் இல்லையே, அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே, விசுவாசத்தோடு அவரிடம் சென்று அவருடைய இருதயத்தை நம் கண்ணீரின் ஜெபத்தினால் தொட்டு, அவரிடம் மன்றாடுவோம். அவரே நமக்கு சுகத்தை தருவார். ஆமென் அல்லேலூயா! ...(Anudhina Manna, A Free Daily Devotional)

சகலத்தையும் சகிக்கும் அன்பு

.................சகலத்தையும் சகிக்கும் அன்பு........................
.

அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். - (1கொரிந்தியர் 13:7).
.
'அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்' என்ற வேத வசனத்தின் மூலம் தேவன் அவரோடு பேசினார். உடனே அவர், 'ஆண்டவரே, என்ன நிந்தை, நெருக்கம், அவமானம், போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக் கொள்ளக் கூடிய கிருபையை எனக்கு தாரும்' என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். உடனே பாரமெல்லாம் மாறி அவரது உள்ளம் இலகுவாகி விட்டது. இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். 'உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா?' என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதை கண்ட பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
.
பிரியமானவர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினிமித்தமோ, அவரை மற்றவர்களுக்கு அறிவித்ததினிமித்தமோ உங்கள் குடும்பத்தாராலும், மற்றவர்களாலும் நிந்தனையும், அவமானத்தையும் அடைந்து வருகிறீர்களோ? கலங்காதீர்கள்! கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் சகலத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகித்துக் கொள்ளும். அப்பொழுது தேவ அன்பு நம் இருதயத்திற்கு மருந்தாய் அமையும். யார் உங்கள் மேல் எரிச்சலானார்களோ, அவர்களே உங்கள் பக்கம் வரும்படி தேவன் அவர்களை மாற்றுவார். அப்படி அவர்கள் வராவிட்டாலும், தேவ அன்பு உங்களை மூடிக் கொள்ளும். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரிப்பீர்கள். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆத்துமாக்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மனம் சோர்ந்து போகாதிருங்கள்.
.
கேலியும் கிண்டலும் செய்கிறவர்கள், உங்களை அல்ல, உங்களை இந்த ஊழியம் செய்யும்படி அழைத்த தேவனையே கிண்டல் செய்கிறார்கள். ஏனெனில் இந்த ஊழியம் உங்களால் ஏற்படவில்லை, தேவனே அதை செய்யும்படி அழைத்தார். ஆகவே அவர்கள் உங்களை காயப்படுத்தவில்லை, கர்த்தரையே காயப்படுத்துகிறார்கள். 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று வேதம் கூறுகிறதல்லவா? ஆகவே அதைரியமாய் இனி இந்த ஊழியம் எனக்கு வேண்டாம் என்று திரும்பி விடாதிருங்கள்.
.
கர்த்தர் மேல் அன்பு வைத்து, அவருக்கென்று தியாகமாய் ஊழியத்தை தொடருவோம், கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார். அநேக ஆயிரமாயிரமான ஆத்துமாக்களுக்கு நம்மை ஆசீர்வாதமாக வைப்பார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

புதன், 23 ஏப்ரல், 2014

பிள்ளைகளை கர்த்தருக்காய் வளர்த்தல்

...........பிள்ளைகளை கர்த்தருக்காய் வளர்த்தல்............

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். - (நீதிமொழிகள் 22:6).

.
இந்நாட்களில் அநேக குடும்பங்களில் நாம் காணும் பிரச்சனை, பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமற் போவதாகும். அவர்கள் இஷ்டத்திற்கு விடப்பட்டவர்களாக, கர்த்தருக்கு பயப்படும் பயமின்றி, பாவத்திலே வாழ்ந்து, தங்களை கெடுத்து கொண்டிருக்கும் வாலிப பிள்ளைகள் இந்த நாட்களில் அநேகர் உண்டு. வாலிப வயதிற்கு வந்த பின் அவர்களை மாற்றுவது என்று முடியாத காரியமாகும். சிறுவயதிலேயே அவர்களுக்கு கர்த்தருடைய பயத்தை போதித்து வளர்க்கும்போது, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்ற வசனத்தின்படி அவர்கள் தங்களை காத்து கொள்வார்கள்.

.

நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பிரியமானவர்களாக, சமுதாயத்திற்கு பிரயோஜனமாயிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தகப்பனும், தாயும் ஆசிப்பதுண்டு. அதில் தாய்மாருக்கான கீழ்க்கண்ட ஆலோசனைகளை 19 பிள்ளைகளுக்கு தாயாராயிருந்த சூசன்னாள் அவர்கள், ஜான் வெஸ்லியின் ஜெபிக்கும் தாயார் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவனுடைய வார்த்தையை போதிப்பதற்கு ஒரு மணி நேரம் செலவழிப்பார்கள். இங்கிலாந்து தேசத்தில் பெரும் எழுப்புதல் ஏற்படுவதற்கு காரணமாயிருந்த ஜான் வெஸ்லிக்கும், கீர்த்தனை எழுத்தாளரான சார்லஸ் வெஸ்லிக்கும் உத்தம் தாயாக விளங்கினவர்கள். அவர்கள் ஆலோசனையை பற்றி தியானிப்பது ஏற்றதாக இருக்கும்.

.

'ஆண்டவருக்கென்று உங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறீர்களா? அதற்கு பிரதானமான முதல் நிபந்தனை அவ்வித பாரம் கொண்ட ஓர் தாய் தன் ஜீவியத்தில் உலக சுகபோகத்தை முற்றிலும் உதறினவளாயிருக்க வேண்டும். இரண்டாவதாக அவள் தன் முழு வாழ்வையும் தன் பிள்ளைகளின் ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கென்றே அர்பணித்திருக்க வேண்டும். 'ஒரு தாய்க்கு அதைவிட மேலான வாழ்க்கை வேறில்லை' என்பதை ஆழமாய் அறிந்தவளாய் இருக்க வேண்டும்.

.

நம் பிள்ளைகள் ஒரு வயதாயிருக்கும்போதே பிரம்பிற்கு பயப்படவும், மெதுவாக அழவும் கற்று தர வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நீங்கள் ஜாக்கிரதை கொண்டு விட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு நேர வேண்டிய திரளான தண்டiயிலிருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றி விடலாம். கோழை மனம் கொண்ட பிள்ளைகள் தண்டனைக்கு பயந்து போய் பொய் சொல்லும்படி தூண்டப்படுவது சாத்தியமே. இந்நிலையில் 'யாரெல்லாம் தாங்கள் செய்த தவறை அறிக்கை செய்து அதற்காக மனம் வருந்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்' என்று நாம் தெளிவுபட பிள்ளைகளுக்கு அறிவித்து விட்டால் பொய் சொல்வதிலிருந்து பிள்ளைகளை நாம் காத்து கொள்ள முடியும்.

.

தேவனிடம் பயபக்தியாய் இருக்கும்படி பிள்ளைகளுக்கு கற்றுதர வேண்டும். குறிப்பாக ஜெபவேளைகளில் அமைதியாய் இருக்கும்படியாகவும், ஒவ்வொரு நாளும் அவர்களாகவே ஜெபிப்பதற்கும் கற்றுத்தர வேண்டும். பெற்றோரிடத்தில் மாத்திரமல்ல, வேலையாட்களிடத்திலும் மரியாதையோடு பேச கற்று தர வேண்டும்.

.

பிள்ளைகளிடம் காணப்படும் சில குழந்தைத்தனமான மதியீனங்களை நாம் பொருட்படுத்த கூடாது. இருப்பினும் இவைகளில் சில கண்டிக்கப்பட வேண்டியதாயிருக்கும். இது போன்ற காரியங்களை மிருதுவாகவே கண்டிக்க வேண்டும். ஆனால் பகிங்கரமான கீழ்ப்படியாமை கண்டிக்காமல் இருக்க கூடாது.

.

பிள்ளைகளுக்கு தரும் வாக்குறுதிகளை பெற்றோர்களாகிய நாம் நிறைவேற்றுவுது மிகமிக முக்கியமானதாகும். ஏதாவது ஒன்றை வாங்கி தருவேன் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால் அவைகளை கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும். அவர்கள் நமக்கு கீழ்ப்படியும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக அவர்களை பாராட்ட வேண்டும். பிள்ளைகள் சரியான காரியங்களை செய்யும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் தண்டிக்க கூடாது.

.

நம் பிள்ளைகளை அன்போடு கூட கண்டிப்பிலும் வளர்த்தால் அவர்களின் ஆத்துமாவை நித்திய அழிவிலிருந்து காக்கும் தாய்மார்களாக விளங்குவீர்கள்'. கர்த்தர் தாமே இந்த ஆலோசனைகளின்படி நம் பிள்ளைகளை வளர்க்க ஒவ்வொரு பெற்றோருக்கும், விசேஷமாக ஒவ்வொரு தாய்க்கும் உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

நியாயாசனத்தின் முன்

.......................நியாயாசனத்தின் முன்.........................
.

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).

.
இவ்வுலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்ப்ட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அன்று சர்வத்திற்கும் நியாதிபதியாம் இயேசுகிறிஸ்து கெம்பீரமாய் நியாசனத்தில் அமர்ந்து நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராண கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டால் எவ்வாறு இருக்கும் என்று காண்போம்.

.

நான் உன் கையில் ஒப்புவித்த உலக பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய், நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக ஐசுவரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்தி கொள்வதற்காகவும் பயன்படுத்தி கொண்டாயா?

.

நான் உனக்கு தந்ந உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிறவிதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உனனை காத்து கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?

.

உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் அவ்வுலக ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயோ? அல்லது வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? இப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்து விட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கி கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பி தந்தாயா?

.

நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன். அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைக்கும் பாய்னபடுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி, உன்னை பூமிக்கு அனுப்பினவரின் சித்தத்தை செய்த முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும், உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எலலாம் உன் அவயவங்களை ஈனமாய் ஒப்புக்கொடுத்து விட்டாயா?

.

நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நம்முடைய கண்களை பார்த்து இத்தகைய கேள்விகளை கேட்டால் நாம் மகிழ்வோடு பதில் கூறுவோமா? அல்லது தலைகுனிந்து காணப்படுவோமா? ஒருவேளை நாம் உண்மையற்றவர்களாய் இருப்போமானால் இன்றே நம் கையில் கொடுத்த உலக பொருளை தேவன் விரும்புகிறபடி செலவிட தீர்மானம் செய்வோம். அப்படியானால் 'நல்லது உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே உன் ஆண்டவரின் சந்தோஷத்திற்குள் பிரவேசி' என்ற மதுரமான பரலோக தொனி நம் செவிகளில் இனிதே தொனிக்கும். ஆம், நம் கிரியைக்குத்தக்கதாக அவர் வழங்கும் பிரதிபலன் நித்திய நித்திய காலத்திற்கும் மாறாததாயிருக்கும். அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

ஆறுதல்களின் தேவன்

...........................ஆறுதல்களின் தேவன்.........................
.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் - (2 கொரிந்தியர். 1:3-4).

.

நெப்போலியன் ரஷிய நாட்டை கைப்பற்ற யுத்தம் நடத்தியபோது எப்படியோ தன் போர் வீரர்களிடமிருந்து தனித்து பிரிக்கப்பட்டார். அப்போது அவரை கண்ட எதிரி படைவீரர்கள் அவரை துரத்த ஆரம்பித்தனர். அவர் வேகமாய் ஓடி, குளிர்காலத்திற்கு இறகுகளால் செய்யப்பட்ட உடையை தயாரிக்கும் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த கடைக்காரரிடம், 'தயவுசெய்து எனக்கு உதவுங்கள், நான் எங்கே ஒளிவது என்று காட்டுங்கள்' என்று கெஞ்சினார். அந்த கடைக்காரரும், அவரை அங்கிருந்த இறகுகள் நிறைய இருந்த இடத்தில் அவரை பதுங்கி கொள்ள செய்து, அவரைச் சுற்றிலும் இறகுகளை தூவி, மறைத்து வைத்தார். சிறிது நேரத்தில் எதிரி படை வீரர்கள் அந்த கடைக்குள் நுழைந்து, எல்லாவற்றையும் நொறுக்கி உடைத்து தேடினார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் இருந்த இடம் தெரியவில்லை. அவர் இல்லை என்று நினைத்து அந்த இடத்தை கடந்து சென்றார்கள். அதற்குள் அவரை தேடி அவருடைய வீரர்களும் மற்றவர்களும் வந்து, அவரை கூட்டிக்கொண்டு சென்றனர். அப்படி கூட்டி செல்லும் போது, அந்த கடைக்காரர், 'வீர நெப்போலியனே, நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்பதற்கு மன்னிக்கவும், அந்த இறகுகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்தபோது, அந்த எதிரி வீரர்கள் வந்து உங்களை தேடும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?' என்று கேட்டார். அப்போது நெப்போலியன், 'பேரரசனான என்னிடம் இந்த கேள்வியை கேட்க உனக்கு எப்படி துணிவு வந்தது' என்று கூறி, தன் படை வீரர்களிடம், 'இவனை பிடித்து கட்டுங்கள், இவன் கண்களை கட்டி, ஒரு இடத்தில் வைத்து, அவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துங்கள். ஆனால் சுடுவதற்கு நானே கட்டளை கொடுப்பேன்' என்று கட்டளையிட்டான். அப்போது அந்த மனிதனின் கண்களை கட்டி, தூரத்தில் நிற்க வைத்து தங்கள் துப்பாக்கியை குறி வைக்க தொடங்கும்போது, நெப்போலியன், குறி வையுங்கள் என்று சொல்லும் சத்தம் கேட்டது. அந்த மனிதனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அடுத்த விநாடி அந்த மனிதனின் கண்களின் கட்டு அவிழ்த்து விடப்பட்டது. நெப்போலியன் தன் அருகில் நின்று தன் கண்களையே உற்று நோக்கி கொண்டிருந்ததை அந்த மனிதன் கண்டான். அப்போது நெப்பொலியன், 'இப்போது உனக்கு புரியும் என்ற நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு தன் குதிரையில் ஏறி பறந்து சென்றான்.

.

சில காரியங்கள் மற்றவர்கள் சொல்வதினால் நமக்கு புரியாது. அதன் வழியாக நாம் கடந்து செல்லும்போதே அதனுடைய வலியும் வேதனையும் புரியும். உதாரணத்திற்கு கேன்சர் வந்த ஒரு மனிதனோ அல்லது மனுஷியின் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான், அவர்கள் கடந்து செல்லும் வேதனையின் அளவு புரியும். தங்கள் உயிரானவர்களை இழக்க கொடுத்தவர்களுக்குத்தான் அதனுடைய வேதனை புரியும். தன் மகளோ, மகனோ கொடும் வியாதிக்குள் பாடுபடுவதை கண்ட பெற்றோருக்குத்தான் அந்த வேதனையுடைய ஆழம் புரியும். மற்றவர்கள் எனக்கு புரிகிறது என்று ஆறுதல் சொன்னாலும், அது வெறும் ஆறுதலுக்காக சொல்லும் வார்த்தையே தவிர உண்மையான வார்த்தை இல்லை.

.

ஒருவேளை நீங்கள் அந்த பாதையின் வழிகளில் சென்றிருப்பீர்களானால், அந்த பாதையில் செல்லும் மற்றவர்களுக்கு வழிகாட்ட தேவன் உங்களை பயன்படுத்த இடம் கொடுங்கள். நீங்கள் அந்த வழியே சென்ற படியால், உங்களுக்கு அந்த வேதனையின் கொடூரம் தெரியும். அப்படி செல்லும் மற்றவர்களை ஆற்றி தேற்ற கர்த்தர்தாமே உங்களை உபயோகிப்பாராக!

.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். ஆமென்! நம் கர்த்தர் சகலவித ஆறுதல்களின் தேவன். அவர் நம் வேதனைகளை அறிந்திருக்கிறார். அவரே நம்மை ஆறுதல் படுத்த வல்லவராயிருக்கிறார். அவருடைய ஆறுதல்கள் நம்மை தேற்றுவதாக. அவர் அந்த பாதைகளின் நடுவே நடந்து சென்றபடியால் நம்மை தேற்ற எல்லாவிதத்திலும் போதுமானவராய் இருக்கிறார். 'உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்' (சங்கீதம் 84:5,6). ஒருவேளை அழுகையின் பள்ளத்தாக்கில் நீங்கள் நடந்து கொண்டிருக்கலாம். கர்த்தர் அருளும் ஆறுதல்கள் உங்களை தேற்றி, அந்த அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை அரும் நீருற்றாய் மாற்றி, உங்களை அரவணைத்து கொள்வதாக! அந்த பதையில் செல்லும் மற்றவர்களுக்கு ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி உங்களை மாற்றுவதாக! ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

குருடாயிருக்கும் மனக்கண்கள்

....................குருடாயிருக்கும் மனக்கண்கள்.....................
.
மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். - (யோவான் 16:2-3).
தீவிரவாத சக்திகளுக்கு, மனித உயிரின் அருமையை அறியாதபடி அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால், அருமையான உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு முன்பே இயேசுகிறிஸ்து இவர்களைப் பற்றி 'மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்' என்று சொல்லி விட்டார். கொலை செய்கிறவர்கள் கிறிஸ்துவையும், பிதாவையும் அறியாபடியினால் இப்படி செய்வார்கள் என்று காரணத்தையும் அவரே சொல்லி விட்டார்.
.
காலாகாலமாய் நாம் இதுப் போன்ற தீயசக்திகள் சாதாரண மக்களை கொல்வதுப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது இதுப் போன்ற செய்திகள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கின்றன. இயேசுக்கிறிஸ்து கடைசிக் கால நிகழ்ச்சிகளைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறும்போது, 'ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; .. உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்' (மத்தேயு 24:7,9) என்றுக் கூறினார். அதன்படி இந்த நாட்களில் நடந்து வருகிறது.
.
இதற்கு விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நாம் ஜெபிக்க வேண்டும். தீவிரவாதிகளின், மதவாதிகளின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். 'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்' (2கொரிந்தியர் 4:4). இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் குருடாக்கியருக்கிற இவர்களின் மனக்கண்களை கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கும்படியாக இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பார்வையற்ற மனிதனால் இயற்கை காட்சிகளையோ, நிறங்களையோ, அழகையோ இரசிக்க முடியாது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனம் குருடாகியிருக்கிற இந்த மனிதர்களுக்கு மனிதனின் ஆத்துமாவின் அருமையோ, உயிரின் விலையே தெரியாது. ஆனால் அவர்களின் மனக் கண்கள் திறக்கப்படும்போது, அவர்கள் அதன் அருமையை அறிந்துக் கொள்வார்கள். ஆகவே அவர்களின் மனக்கண்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியைக் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
இரண்டாவது, சுவிசேஷம் அவர்களை சென்றடையும்படியாக வாசல்கள் திறக்கப்படும்படியாகவும், அவர்களை நற்செய்தி சென்றடையும்படியாகவும் ஜெபிக்க வேண்டும். 'அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?' (ரோமர் 10:14). ஆகவே அவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்படும்படியாக வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சத்தியத்தை கேள்விப்பட்டு, அவரை விசுவாசிக்கத்தக்கதாக ஜெபிக்க வேண்டும்.
.
மூன்றாவதாக, நாம் நம் சாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் பாவத்தின் மேல் பாவம் செய்துக் கொண்டு, கிறிஸ்துவை பிரசங்கித்தால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துக் கொண்டோ, மற்றவர்கள் கேட்கும் சாதாரண உதவிக்கூட செய்யாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சொன்னால் அவர்கள் விசுவாசிப்பார்களா? நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக வாழ்ந்தால் நம்மைக் காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவைக் காண்பார்களல்லவா? இருளில் வாழும் அவர்களுக்கு வெளிச்சமாக நம் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். 'இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16).
.
பிரியமானவர்களே, இவற்றை நாம் உண்மையாக செய்வோமானால் தீவிரவாத சக்திகள் செயலற்றுப் போகும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி செய்பவர்களாக நம்மை மாற்றுவோம். கர்த்தர் மற்றவற்றை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

தேவாலயம் அது தேவனின் வீடு

..............தேவாலயம் அது தேவனின் வீடு.................
.

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். - (சங்கீதம் 122:1)


இந்த நாட்களில் அநேகர் சபை கூட்டங்களை புறக்கணிப்பதில்லை. ஆலயம் என்பது கர்த்தருடைய வீடு. அங்கு நாம் அவரை துதிக்க செல்லும்போது, 'உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்' (சங்கீதம் 36:8) என்ற வசனத்தின்படி தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் சம்பூரணம்  என்ன? நம்முடைய தேவைகளை தேவன் சந்திக்கிறார். அது உலகப்பிரகாரமான, சரீரப்பிரகாரமான, ஆவிக்குரிய எந்த தேவையாயிருக்கட்டும், தேவைகளை அவர் சந்தித்து, உண்மையான இருதயத்தோடும், சுத்த மனசாட்சியோடும் வருபவர்களை நிச்சயமாகவே ஆசீர்வதிக்கிறார்.

.

'ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்' (மத்தேயு 18:20) என்று வாக்குதத்தம் செய்த கர்த்தர் நிச்சயமாக நாம் சபையாக கூடும் நேரத்தில் தமது சமுகத்தால் நிரப்புவார். அங்கு அவருடைய பிரசன்னம் அளவில்லாமல் நிரம்பி வழிகிறதாய் இருக்கிறது. அவருடைய பிரசன்னம் இருக்கும்போது, குறைகளெல்லாம் நிறைவாக மாறி விடும். நம்மிடத்தில் காணப்படும் எல்லா குறைகளும் மாற்றப்பட்டு, நம்மை நிறைவானவர்களாக தேவன் மாற்றுவார்.

.

சபையை சார்ந்து நாம் இருக்கும்போது, நமக்காக ஜெபிக்கிற விசுவாசிகள் உண்டு. நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களுடைய பிரச்சனையாக ஏற்று கொண்டு, கர்த்தரிடம் மன்றாடி ஜெபிக்கும் அன்புள்ளங்களை தேவன் நமக்கு தந்துவிடுகிறார்.

.

சபைக்கு செல்லும்போது நிச்சயமாக நமக்கும் நம் குடும்பத்திற்கும் கர்த்தருடைய பாதுகாப்பு உண்டு. வியாதிகள் வராதபடி, விபத்துகள் ஏற்படாதபடி, தேவனுடைய பிரசன்னம் நம்மை பாதுகாக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு விசுவாசி, அவர் ஏதோ பிரச்சனையினிமித்தம் சபை கூடிவருவதை நிறுத்தினார். அவருக்காக ஜெபிக்கிறவர்களும், விசாரிப்பவர்களும் இல்லாமற் போனபோது, ஒருநாள் ரோட்டை கிராஸ் செய்து போனபோது, ஒரு கார் அவர் மேல் மோதி, அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. நான் இதை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. சபைக்கு செல்லும்போது, நம்மை சுற்றிலும், போதகர்களின் ஜெபமும், விசுவாசிகளின ஜெபமும் நம்மை நிச்சயமாக பாதுகாக்கிறது.

.

ஆவிக்குரிய மனிதன் வளருவதற்கான உணவு அங்குதான் நமக்கு கிடைக்கிறது. சபை போதகருக்கு உங்களை பற்றியதான எல்லா காரியங்களும் அறிந்திருக்கிறபடியால், அவர் உங்களுக்கு தேவையான காரியங்களுக்காக ஜெபிப்பார். தேவையான சத்தியங்களை எடுத்து கூறி உங்களை அருமையாக வழிநடத்துவார். இப்படி, இத்தனை அற்புதங்கள் நிறைந்த சபை கூடுதலை யாரும் விட்டு விடக்கூடாது.

.

ஆலயத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு அநேகர் சொல்லும் காரணங்கள் உண்மையிலேயே பொய்யான காரணங்கள் தான். அவர்கள் ஆலயத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு முதல் காரணம், தேவன் அவர்கள் வாழ்வில் முதன்மையானவராக இல்லை, அல்லது அவர்கள் ஆலயத்திற்கு செல்வதற்கு வாஞ்சை இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆலயத்திற்கு செல்வது ஒரு விருப்பம் அல்லது, நமது இஷ்டப்படுகிற காரியம் இல்லை. அது கர்த்தரால் நியமிக்கப்பட்ட ஒன்று. 'சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்;  நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்' (எபிரேயர் 10:25). நீங்கள் ஆலயத்திற்கு செல்லாமல் இருக்கும் நாளில், கர்த்தருடைய சிறந்ததை, அதாவது  அந்த நாளில் தேவன் உங்களுக்கென்று, உங்கள் ஜெபத்திற்கான பதிலை கொடுக்கும் நாளாக இருக்கலாம், நீங்கள் அன்று போகாததால் அதை இழந்து போக நேரிடும். கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசீர்வாதத்தை அந்த நாளில் வைத்திருக்கிறார். நாம், சுத்த இருதயத்தோடும், திறந்த மனதோடும் செல்லும்போது, அங்கு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்கிறோம். நீங்கள் ஆலயத்திற்கு செல்லும்போது, நீங்கள் கர்த்தரை தொழுது கொள்ளும்போது, உங்களை அறியாமல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறீர்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வீட்டிற்கு செல்வதின் அவசியத்தை போதிக்கிறீர்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சுற்றி, தேவனுடைய பாதுகாப்பு என்னும் வேலிக்குள் வந்து விடுகிறீர்கள்.

.

நாங்கள் குடும்பமாக ஆலயத்திற்கு செல்வதனால், எத்தனை எத்தனையோ ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறோம். அடுத்த ஞாயிற்று கிழமை வரும்போது, கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்ற வசனத்தின்படி மகிழ்ச்சியோடு ஆலயத்திற்கு செல்வோம், கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!  (Anudhina Manna, A Free Daily Devotional)

திங்கள், 21 ஏப்ரல், 2014

பாடுகளின் மத்தியில் வெற்றி

..................பாடுகளின் மத்தியில் வெற்றி....................
.

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. - (லூக்கா 10:19).


பாடுகளும் பிரச்சனைகளும் வரும்போது நாம் துவண்டு போவது சகஜம். என்ன செய்வது என்று தவிக்கும் நேரத்தில் யாராவது உதவிக்கு வந்தால் நலமாக இருக்குமே என்று நினைக்கவும் தோன்றும்.

.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி வரும்போது, எதிரே சிவந்த சமுத்திரம் முன்பாக இருந்தது. அது ஆழம் மிகுந்தது, அதை கடந்து செல்ல எந்த படகும், கப்பலும் அவர்களுக்கு இல்லை. பின்னாக பார்க்கும்போது, பார்வோனின் சேனை அவர்களை துரத்தி பிடிக்கும்படியாக வந்துக் கொண்டிருந்தது. மோசேக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்'. ஆம், மோசேயும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார், 'அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்' ( யாத்திராகமம் 14: 10,15,16) என்று சொன்னார். மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினபோது, புரண்டு வந்துக் கொண்டிருந்த அந்த சிவந்த சமுத்திரம் குவியலாய் இரண்டாக பிரிந்து, நடுவில் பாதையை அமைத்து கொடுத்தது. அல்லேலூயா! உலர்ந்த தரை வழியாக இஸ்ரவேலர் சமுத்திரத்தை கடந்தார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பார்வோனின் சேனையோ, அதே சமுத்திரம் திரும்பி வந்து, அவர்கள் அனைவரையும மூடிப்போட்டது.

.

மோசேக்கு பிறகு தேவன் தெரிந்து கொண்ட யோசுவா ஜனங்களை வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு கொண்டு போவதற்கு முன் அவர்கள் யோர்தான் நதியை கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் அவர்களுக்கு படகோ, கப்பலோ இல்லை. இப்போது மோசேயின் கையில் இருந்த கோலும் இல்லை. அந்த கோலினாலே அநேக அற்புதங்களை மோசே தேவக் கிருபையால் செய்திருந்தார். யோசுவா ஐயோ கோல் என்னிடம் இல்லையே, எப்படி நான் இந்த கடலை தாண்டுவேன் என்று துயரப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை, யோசுவாவுக்கு தெரியும் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தில் வழி திறக்க முடியுமென்றால், யோர்தானிலும் வழிதிறக்க முடியும் என்று. 'யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்' (யோசுவா 3:5). 'யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்' (யோசுவா 3:15-16). யோர்தான் நதியும் விசுவாசிகள் கடந்து போவதற்காக பிரிந்து வழிவிட்டது. அவர்கள் உலர்ந்த தரைவழியாக நடந்துப்போவதுப் போல யோர்தான் நதியின் நடுவாக நடந்துப் போனார்கள். அல்லேலூயா!

.

அதற்குப்பின் அநேக வருடங்கள் கழித்து, எலியா தீர்க்கதரிசி, கர்த்தர் சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், எலிசா அவரை பின்தொடர்ந்து இரட்டிப்பான வரம் வேண்டி அவரோடு சென்றுக் கொண்டிருந்தபோது, இருவரும் யோர்தான் நதியை சந்திக்கிறார்கள். 'அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்' (2 இராஜாக்கள் 2:8). யோர்தான் இருபக்கமாக பிரிந்து, அவர்கள் இரண்டு பேரும் தரைவழியாக போவதைப் போல நடந்து, யோர்தானை கடந்துப் போனார்கள். அல்லேலூயா! கர்த்தரை நம்பியிருந்த இவர்கள் பிரச்சனை முன்பாக இருப்பதைக்கண்டு பயந்து போய் இருக்கவில்லை. தைரியமாக கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, பிரச்சனைகளின் மேல் வெற்றி எடுத்தார்கள்.

.

இவர்கள் எல்லாரையும் விட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட விசுவாசிகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவின் கிருபை இருப்பதால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

.

நாம் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போல கடலை பிளக்க தேவையில்லை, அதன் மேல் நடந்து சென்று அற்புதத்தை பெற்றுக் கொள்ள முடியும்! அல்லேலூயா! 'இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது (மாற்கு 14:25-32). பேதுரு கர்த்தரை பார்த்து நடந்தவரைக்கும் அவர் மூழ்கவில்லை. கடலின் மேல் நடந்தார். ஆனால் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பயந்த போது அமிழ ஆரம்பித்தார். கர்த்தர் மூழ்கட்டும் என்று சும்மா பார்த்துக் கொண்டு இருக்கவில்லை, உடனே தம் கரத்தை நீட்டி அவரைப்பிடித்து, தூக்கி, திரும்பவும் இருவரும் நடந்து வந்து படகில் ஏறினார்கள்.

.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு மோசேயைப் போல நமக்கு கோல் தேவையில்லை, யோசுவாவைப்போல் உடன்படிக்கை பெட்டி தேவையில்லை, எலியாவின் சால்வை தேவையில்லை. பிரச்சனைகளைப் பார்த்து அப்படியே மூழ்கிப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கடலின் மேல் இயேசு நடந்ததைப் போல நாமும் பிரச்சனைகளின் மேல் நடக்க முடியும். அல்லேலூயா!

.

'இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது' (லூக்கா 10:19) என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மோடு இருப்பதால் பிரச்சனைகளை கண்டு மனம் துவளாமல், அவைகளின் மேல் நாம் நடந்து, பிரச்சனைகளை கொண்டு வருகிற சாத்தானாகிய சர்ப்பங்களையும் தேள்களையும் மிதித்து, வெற்றி எடுப்போம். உலகத்தின் கடைசி பரியந்தம் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னவர் நம்மோடு இருந்து வெற்றி எடுக்க கிருபை செய்வார். பிரச்சனைகளை பார்த்து அமிழ்ந்து போகும்போது, அவரை நோக்கி பார்க்கும்போது, அவர் உடனே தம் கரத்தை நீட்டி நம்மை தூக்கி எடுத்து, மீண்டும் நம்மை நடக்க வைப்பார். ஆமென் அல்லேலூயா!

அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்:

அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்: கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். - (மத்தேயு 28: 6).
.
ஆம்! உலகினில் எத்தனையோ கல்லறைகள் எத்தனையோ கதைகளை சொல்லும், ஆனால் மன்னவர் இயேசுவின் கல்லறையோ அவர் என்னிடம் இல்லை என்றே சொல்கிறது. அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்.

.

யார் நம்பினாலும், நம்பாவிட்டாலும், இயேசுகிறிஸ்து பாடுகளை சகித்தது உண்மை, சிலுவையில் அறையப்பட்டது உண்மை, சிலுவையில் மரித்தது உண்மை, அதுப்போலவே அவர் உயிரோடு எழுந்ததும் உண்மை. அல்லேலூயா!

.

கிறிஸ்து எழுந்தரிக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா - (1கொரிந்தியர் 15:12). என்னிடம் சில மதத்தை சேர்ந்தவர்கள் வந்து, கிறிஸ்து மரிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக வேறொருவர் அவருடைய உருவத்தில் வந்து மரித்தார் என்றும், கிறிஸ்து திரும்பவும் வர இருப்பதால் அவர் மரிக்கமுடியாது என்றும் கூறினர். அப்போது நான் சொன்னேன், 'கிறிஸ்தவமே, அவர் மரித்து, உயிர்த்தெழுந்ததை வைத்துதான் கட்டப்பட்டிருக்கிறது. அவர் மரிக்கவில்லை, அவர் உயிரோடு எழுந்தரிக்கவில்லை என்றால் கிறிஸ்தவமே இல்லை, எங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் வீணானனது ஆகும்' என்று கூறினேன்.

.

ஒரு நாள் இயேசுகிறிஸ்து இராஜாதி இராஜாவாக வானத்தின் மீது வருவார். அவரை குத்தின கண்கள் அவரை காணும், அவர் சிலுவை பாடுகளை சகிக்கவில்லை, அவர் மரிக்கவில்லை என்று சொல்லும் மக்களின் கண்கள், அவருடைய கரங்களின் கால்களின் ஆணிகள் கடாவப்பட்ட காயங்களை காணும். அப்போது அவர்கள் கிறிஸ்து மனுக்குலத்தின் பாவத்திற்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்.

.

கிறிஸ்து உயிரோடு எழுந்ததால் நமக்கு நம்பிக்கை உண்டு. நமக்கு இருக்கிற பயங்கள், பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்க உயிரோடு இருக்கும் நேசர் நமக்கு இருப்பதால் நாம் தைரியமாக பிரச்சனைகளை எதிர்நோக்கலாம்.

.

கிறிஸ்து உயிரோடு எழுந்தது கர்த்தருடைய வார்த்தை உண்மையென்ற நிரூபிக்கப்படுகிறது. கிறிஸ்து உயிரோடு எழுவார் என்ற திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வார்த்தைகள் சத்தியமானவை என்பது நிரூபிக்கப்படுகிறது.

.

இயேசுகிறிஸ்து ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்பது நிரூபிக்கப்படுகிறது.

.

இயேசுகிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் பாதாளத்தையும் வென்று சிலுவையிலே வெற்றிசிறந்தார். சாத்தான் அங்கு தோற்று போனான். நான் பிழைக்கப்படுகிறதினால் நீங்களும் பிழைப்பீர்கள். - (யோவான் 14:19) என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் உயிரோடு இருப்பதால் நாமும் பிழைக்கிறோம். நாமும் வாழ்கிறோம். அவர் உயிரோடு எழுந்தரிக்கவில்லை என்றால் கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்களுடைய நம்பிக்கையும், நாம் அவர்களை காண்போம் என்ற நம்பிக்கையும் விருதாவாயிருக்கும். இப்போது நாம் நமக்கு பிரியமானவர்களை மீண்டும் சந்திப்போம் என்ற விசுவாசத்தோடு நாம் ஒருவரையொருவர் தேற்றுகிறோம். கிறிஸ்து எழுந்தரிக்காவிட்டால் நம்முடைய நம்பிக்கை வீணாயிருக்குமே.

.

அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்: கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என்ற வார்த்தைகள் நிச்சயமும் சத்தியமுமாயிருக்கிறது. நம்முடைய கர்த்தர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார். ஆகவே நமக்கும் மரணத்தை கண்டு பயமில்லை. இயேசு ஜெயமெடுத்தபடியால் நாமும் ஜெயமெடுப்போம். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional )

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம்

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம் 
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். - (பிரசங்கி 3:11-12).

ஒரு தகப்பன் தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர் அவர்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது என்று மிகவும் கடினமாக உழைத்தார். வேலை செய்து முடித்து விட்டு, சாயங்கால வேளைகளில் படிக்க ஆரம்பித்தார். இப்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் விடாது படிக்க ஆரம்பித்தார். அவரது குடும்பம் அவரிடம், 'நீங்கள் எங்களோடு சரியாக நேரம் செலவழிப்பதில்லை' என்று முறையிட்டபோது, 'நான் எதற்கு இவற்றை எல்லாம் செய்கிறேன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே' என்று தேற்றுவார். தன் குடும்பத்தோடு இருப்பதை வாஞ்சிப்பார், ஆனால் படிப்பினிமித்தம் முடியாமல் போய்விடும்.
.
படித்த பாடங்களில் பரிட்சை எழுதி அதில் நல்ல மதிப்பெண்களோடு அவர் வெற்றி பெற்றார். மிகுந்த சந்தோஷத்தோடு வீடு வந்தார். 'பாருங்கள் நான் பட்ட பாட்டிற்கு கிடைத்த பரிசை!' என்று கூறினார். அவருடைய வேலை இடத்தில் அவருக்கு வேலை உயர்வு கிடைத்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது. குடும்பத்திற்கு இன்னும் வசதிகளை செய்து கொடுத்தார். பிள்ளைகளுக்கு நல்ல உடையும், உணவும் அவர்களுடைய தேவைகளும் சந்திக்கப்பட்டன.
.
இதோடு முடிந்தபாடில்லை, எப்படியாவது மேனேஜர் பதவி வேண்டும் என்று அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அதற்காக திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கும்படியாக ஓபன் யூனிவர்சிட்டியில் சேர்ந்தார். பிள்ளைகள் மீண்டும் தங்கள் தகப்பனிடம் முறையிட்டனர், 'நீங்கள் எங்களோடு இருக்கும் நேரம் மிகவும் குறைவு' என்று. அப்போதும் அவர் சொன்னார், 'நான் படும் கஷ்டங்கள் யாருக்காக? உங்களுக்காகத்தானே, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!' என்று கூறினார். அவர் பட்டபாடுகளுக்கு பலனாக அவருக்கு மேனேஜர் பதவியும் கிடைத்தது. வீட்டிற்கு ஒரு வேலைக்காரியும் வைத்து மனைவிக்கு உதவி செய்தார்.
.
மீண்டும் இரவும் பகலும் உழைத்து, ஒரு பெரிய பங்களாவை மிகவும் பிரபலமான இடத்தில் நகரத்தில் வாங்கினார். கடைசியாக சொன்னார், 'இனிமேல் நான் எதுவும் படிக்க போவதில்லை, கடினமாக உழைக்க போவதில்லை, வருகிற சமபளத்தில் நாம் சந்தோஷமாக இருக்க போகிறோம், இனிமேல் நான் உங்களோடு அதிகமான நேரத்தை செலவிட போகிறேன்' என்று கூறினார். மனைவியும் பிள்ளைகளும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அடுத்த நாள் காலை அவர் எழுந்திரிக்கவில்லை, போய் எழுப்பி விட்டபோது, அவர் உயிரோடு இல்லை!
.
பிரியமானவர்களே, 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை' (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு திருப்தி உண்டாவதே இல்லை. இன்னும் இருந்தால் நலமாக இருக்குமே என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய, போதும்  என்று ஒருபோதும் நினைப்பதில்லை. நமக்கு இருக்க ஒரு வீடு நிச்சயமாக வேண்டும். அதற்காக நாம் கண்டிப்பாக உழைக்கத்தான் வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு நமது நேரத்தை கொடுக்காதபடி, எப்பொழுதும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று அதற்காக நமது பிரயாசத்தை எல்லாம் செலுத்தி, நமது உடல் நிலையை கெடுத்து கொள்வது கூடாது. அந்த தகப்பன் எப்பொழுது பார்த்தாலும் உழைத்து, உழைத்து தன் உடல் நிலையை கூட கவனிக்காது, பின்னர் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் அவற்றை அனுபவியாமற் போனது எத்தனை பரிதாபமான காரியம்!
.
நாம் எத்தனை தான் சம்பாதித்தாலும், நாம் அவற்றை அனுபவிக்கவும் வேண்டும். தகாதவிதமாக அல்ல, நல்ல உணவை உண்டு, நல்ல உடை உடுத்தி, தேவன் கொடுத்த சம்பாத்தியத்தை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு குடும்பம், வெளிநாட்டில் தாங்கள் இருக்கிற வீட்டை தங்கள் குடும்பம் (கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள்) மற்றும் மூன்று பேருக்கு வாடகை கொடுத்து, (இரண்டு அறைகள் கொண்ட வீடு) வாழ்ந்து வந்தார்கள். சிலர் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை அப்படியே நாட்டிற்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டில் சரியாக உண்ணாமலும், தங்களை கவனித்து கொள்ளாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன் என்ற வசனத்தின்படி, கர்த்தர் நமக்கு கொடுத்த வருமானத்தை ஏற்றபடி செலவு செய்யும் போது, அந்த வேலையை நமக்கு கொடுத்த தேவனும் மகிழ்வார், நாமும் சந்தோஷமாய் இருக்க முடியும். அதை நாம் தகாதவிதமாக பயன்படுத்தினால், வயிற்றை கட்டி, வாயை கட்டி பணம் எப்படியாவது சேர்ந்தால் போதும் என்று நினைத்தால், நமக்கு தேவன் கொடுத்த வேலைக்காக அவரே வேதனைப்படுவார், இந்த மனிதனுக்கு போய் இந்த நல்ல வேலையை கொடுத்தேனே என்று!  'இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம் (பிரசங்கி 5:18-19). ஆகவே அந்த அநுக்கிரகத்தை நாம் நல்லவிதமாக பயன்படுத்த தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

Anudhina Manna, A Free Daily Devotional

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கொடுப்பவரை நாடுவோம்

.................கொடுப்பவரை நாடுவோம்.............

ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. ...என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். - (நீதிமொழிகள் 8:18,20,21).

பிரியமானவர்களே, நாமும் கர்த்தரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று பெரிய லிஸ்டுகளை போட்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோமா? நமக்கு வேண்டியது இன்னதென்று அவருக்கு தெரியும், ஆனால் நம்முடைய கணக்கற்ற தேவைகளை அவரிடம் சொல்லி, தாரும் தாரும் என்றுக் கேட்டுக் கொண்டே இருக்கிறோமா?
.
நாம் உலக காரியங்களை கேட்பதற்கு முன், அதை கொடுப்பவரை நாம் நம் உள்ளத்தில் வரும்படி கேட்டால், அவர் வரும்போது, எல்லா தேவைகளும் சந்திக்கப்படுமல்லவா? 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே!
.
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்னென்ன தேவை? ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு என்று அனைத்தையும் படைத்த தேவன் கூறுகிறார். அவரை சிநேகிக்கிறவர்கள் அவற்றை பெற்றுக் கொள்ளும்படி தேவன் கிருபை செய்கிறார்.
.
பிரியமானவர்களே, உலக காரியங்களை கேட்பதற்கு முன், அவற்றை கொடுக்கும் தேவனை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் வாரும் என்று கேட்போமா? அவரை நாம் முழு இருதயத்தோடு தேடும்போது, மற்ற காரியங்கள் நமக்குக்கூட கொடுக்கப்படுமே! இயேசு வந்த வீட்டிலே சந்தோஷம் வருமே, சமாதானம் வருமே, சண்டை இல்லையே சச்சரவு இல்லையே அப்படிப்பட்ட தேவனை தேடுவோம். அவரிடத்திலிருந்து ஐசுவரியம், கனம், நிலையான பொருள், நீதியை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

ஜெப வேண்டுகோள்

............................ஜெப வேண்டுகோள் ...................................

கர்த்தருக்குள் அருமையான சகோதர சகோதரிகளே கர்த்தருடைய நாமத்தினால் உங்களை வரவேற்கிறேன் . நாம் நம்முடைய கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்காக அதிகமாய் ஜெபிக்க கடமை பட்டுஉள்ளோம் . நான் ஜெபிக்கும் படியாக சிலகரியங்களை ஞாபக படுத்த விரும்புகிறேன் நம் வெள்ளிநாட்டு ஊழியங்களுக்காக அதிகமாய் ஜெபிக்க கடமை பட்டுள்ளோம் நம்முடைய நாட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு ஊழியத்திற்கு அனுப்பப்படும் ஊழியர்கள் ஆத்தும பாரத்தினால் சத்தியத்தின் நிமித்தம் அதிகமாய் கஷ்டப்படுகிரத்தை நான் காண்கிறேன் . ஏன் என்று சொன்னால் இங்கு உள்ள விசுவாசிகள் மற்றும் விசுவசிகளுடைய பிள்ளைகல் நிமித்தமாக . ஏன் என்றல் உலகத்திற்கு ஒத்த வேசத்தை தரித்து கொண்டு உலகத்திற்கு பின்னால் போவதை கண்டு அதிகமாய் கஷ்டபடுகின்றனர் . தமிழர்களை மட்டும் நான் சொல்லுகிறேன் அவர்களுடை உடை மற்றும் பழக்க வழக்கங்கால் எல்லாம் அவர்களை அதிகமாய் வேதனை அடையசெய்கிறது. இவர்கள் எல்லாம் நாகரிகத்தின் பின்னால் ஓடிக்கொண்டு இருப்பதை காணமுடிகிறது . இவர்களிடம் ஊழியர்கள் கடிந்து கொள்ளகூடிய சூழ்நிலை இல்லை ஆகவே நாம் வெளிநாடுகளில் உள்ள ஊழியங்களுக்காக அதிகமாய் ஜெபிக்க நாம் கடமை பட்டுள்ளோம் . இவர்களும் நம்முடைய சரீரத்தின் ஓர் அவயமாக இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து போய்விட கூடாது அதிகமாய் நாம் இவர்களுக்காக ஜெபிப்போம். அதுமாத்திரம் அல்ல வெளி நாடுகளில் உள்ள ஊழியர்களுக்காக அதிகமாய் பாரப்பட்டு ஜெபிப்போம் அவர்கலுக்கு தேவையான சுகம் பெலம் ஆலோசனை எல்லாம் அதிகமாய் கர்த்தர் கொடுக்க வேண்டும் .......அடுத்து நம்முடைய தேசத்தின் தேர்தலுக்காக அதிகமாய் ஜெபிக்க கடமை பட்டுள்ளோம் . அநேக கிறிஸ்துவ நண்பர்கள் நயவசனிப்பின் பேச்சினாலே இழுக்க பட்டுஉள்ளதை காண்கிறோம் அதற்காக நாம் அதிகமாய் ஜெபிக்க கடமை பட்டுள்ளோம் . அதுமாத்திரம் அல்ல நல்லதொரு அரசு அமைய நாம் ஜெபிப்போம் . நம்முடைய கிருஸ்துவ நன்பற்களுக்கு கர்த்தர் வெளிபடுத்த வேண்டும் யாரால் நல்லதொரு ஆட்சி கொடுக்க முடியும் என்பதை கர்த்தர் அவர்களுக்கு வெளிபடுத்த வேண்டும் . நான் ஜெபிக்கிறேன் நீங்களும் ஜெபியுங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வர் . ஆமென் ஆமென் ஆமென்

சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்

சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்

முதலாம் வார்த்தை
லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

இரண்டாம் வார்த்தை
லூக்கா:23:43.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மூன்றாம் வார்த்தை
யோவான்:19:26,27
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.

நான்காம் வார்த்தை
மத்தேயு:27:46, மாற்கு:15:34
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

ஐந்தாம் வார்த்தை
யோவான்:19:28.
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

ஆறாம் வார்த்தை
யோவான்:19:30.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

ஏழாம் வார்த்தை
லூக்கா:23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

அடிமையின் ரூபமெடுத்தவர்

........................அடிமையின் ரூபமெடுத்தவர்.........................

இயேசுகிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8).

.
ஆப்பிரிக்க தேசத்திலே வீட்டு சபை ஒன்றிலே ஒரு மிஷனெரி ஞாயிறு ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார். பிரசங்கத்திலே இயேசுகிறிஸ்து எப்படியெல்லாம் பாடுகளை சகித்தார் என்பதை சொல்ல ஆரம்பித்தார். முள்முடி சூட்டப்பட்டு, கசை அடிபட்டு, ஆணிகள் கடாவப்பட்டவராக சிலுவையில் தொங்கினார் என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கறுப்பு இன வாலிபப் பெண், ஆராதனை முடிந்தவுடன் அழுதுக் கொண்டே வெளியே ஓடினாள். கை நிறைய பணத்தோடு திரும்பினாள்.

.

அந்த பணத்தை மிஷனெரியிடம் பணிவோடு நீட்டி, 'என் வாஞ்சை ஆசையெல்லாம் எனக்காக இரத்தம் சிந்திய என்இயேசுவுக்குத்தான். என் பணத்தையெல்லாம் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பதுதான். ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றாள். மிஷனெரி அந்த பணத்தை வாங்க தயங்கினார். இந்த பெண்ணே பரம ஏழை, சில்லரை காசுக்கூட காணிக்கைத்தர முடியாத வறுமை. அப்படியிருக்க இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று எண்ணினார், அவள் சொன்னாள், 'ஐயா நீங்கள் இயேசுகிறிஸ்து எனக்காக அடிமையின் ரூபமெடுத்து வந்தார் என்று சொன்னீர்கள். அவருக்கு ஏதாவது நான் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். உடனே ஓடிப்போய் நான் வேலை பார்க்கும் தேயிலை தோட்ட முதலாளியிடம் என்னை வாழ்நாள் முழுவதும் அடிமையாக விற்று விட்டேன். என்றென்றும் அடிமை வேலை செய்வதற்கு. அவர் கொடுத்த பணம்தான் இது' என்றாள். மிஷனெரி கண்கலங்கினவராக, 'மகளே நான் இங்கிலாந்தை விட்டு மிஷனெரியாக வந்ததுதான் பெரிய தியாகம் என்று நினைத்தேன், நீ என்னை விட அதிகமாய் தியாகம் செய்து விட்டாயே' என்றார்.

.

இயேசுகிறிஸ்து நமக்காக பரலோக சிங்காசனத்தை துறந்து, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷ சாயலானவர், சிலுவையின் மரண பரியந்தம் தம்மை தாழ்த்தினார். தேவனுக்கு ஒப்பாக அவர் பரலோகத்தில் போற்றப்பட்டவர், மனுஷ சாயலாகி, ஒரு அடிமையைப் போலாகி, அநேக பாடுகள் பட்டு, தம் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நமக்கு இரட்சிப்பை உண்டுபண்ணினார்.

.

அப்படிப்பட்ட அருமையான தேவனுக்கு நாம் என்ன செலுத்துகிறோம்? நம்முடைய சிறந்ததை அவருக்கு கொடுக்க வேண்டுமல்லவா? சபை கூடுதலில் மட்டுமல்ல, லெந்து நாட்களில் மட்டுமல்ல, நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும், அவருடைய தியாகத்தை மனதில் வைத்து, பாவத்தை வெறுத்து, பரிசுத்தமாய் வாழ வேண்டும்.

.

எத்தனையோப் பேர் தங்கள் ஜீவனை துச்சமாக நினைத்து, கர்த்தருக்காக கோதுமைமணிப் போல் மடிந்திருக்கிறார்கள். பெரும் பாடுகளை சகித்திருக்கிறார்கள். ஏராளமாய் இழந்திருக்கிறார்கள். ஆனால் நாம் கர்த்தருக்காக எதை இழந்திருக்கிறோம்? எதை சகித்திருக்கிறோம்? நம் சக விசுவாசி எதையாவது சொன்னாலே மூக்குக்கு மேல் கோபப்பட்டு விடுகிறோமே! கிறிஸ்துவின் அன்பை நாம் எந்த முறையில், எந்த வகையில் வெளிப்படுத்துகிறோம்?

.

கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிப்பது மட்டுமல்ல, உருகிப் பாடுவது மட்டுமல்ல, நம் அனுதின ஜீவியத்தில் அவருக்காக வாழ்வோம். அவருக்காக சகிப்போம், அவருக்காக இழப்போம். அதில்தான் தேவன் பிரியப்படுவார். பாரம்பரிய காரியங்களைவிட உண்மையான தேவ அன்பு நம் இருதயத்தில் பிறக்கட்டும். அதை வெளிக்காட்டுவோம். கர்த்தருக்காக வாழ்வோம். கர்த்தர் சிலுவையில் மரித்து உயிர்த்தது நம் வாழ்வில் அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கட்டும். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும்

...இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும்...
.
.

அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டுபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். - (யோவான் 19:16-18).

.

பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் வீட்டிலிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட இயேசுகிறிஸ்து அங்கு நியாயம் விசாரிக்கப்படுகிறார். பிலாத்து அவரிடம் குற்றம் ஒன்றையும் காணாமல் அவரை விடுதலையாக்க தீர்மானித்த பொது யூதர்கள் அவரை சிலுவையில் அறைய சொல்லி சத்தமிட்டபடியால், அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். எருசலேமில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்த பாதை 14 நிலையங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது சிலுவை பாதை அல்லது Via Dolorosa என்றழைக்கப்படுகிறது.

.

1. பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தல். (யோவான் 19:16). இப்போது பிலாத்துவின் அரண்மனையில் அரபிய பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து முதலாம நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது.

.

2. இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது. இங்கு ரோம போர்ச்சேவகர், அவரை வாரினால் அடிப்பித்து, முள்ளுகளினால் ஒரு முடியை உண்டு பண்ணி, அவர் சிரசின்மேல் வைத்து, விசப்பான அங்கியை உடுத்திய இடம் (யோவான் 19:1-2).

.

3. இயேசுகிறிஸ்து முதன் முறையாக சிலுவையின் பாரம் தாங்காமல் கீழே விழுகிறார்.

.

4. இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள் தன் மகன் சிலுவை சுமந்து செல்வதை காண்கிற இடம். இதில் ஒரு சிறிய ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள்.

.

5. சிரேனே ஊரானாகிய சீமோனை சிலுவையை சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள் (லூக்கா 23:26).

.

6. வெரோனிக்கா என்னும் சகோதரி இயேசுவின் முகத்தை தன்னிடம் இருந்த துணியால் துடைத்த இடம். அந்த துணியில் இயேசுவின் முகம் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது.

.

7. இயேசுகிறிஸ்து இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்.

.

8. எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்ன இடம். (லூக்கா 23:27-31).

.

9. இயேசுகிறிஸ்து மூன்றாம் முறையாக கீழே விழுகிறார்.

.

மேற்கண்ட ஒன்பது நிலையங்களும் சந்தடி நிறைந்த பாலஸ்தீனியரின் கடைவீதிகளுக்கு நடுவே இருக்கிறது.

.

10-14 நிலையங்கள் Holy Sepulchre என்னும் பெரிய ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.

.

10. இயேசுகிறிஸ்து உடுத்தியிருந்த துணி உரியப்படுகிறது.

.

11. இயேசுகிறிஸ்து சிலுவையில் ஆணிகளால் கடாவப்படுகிறார்.

.

12. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி மரிக்கிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி இருந்த கொல்கதா மலையின் பெரிய கற்பாறை ஒரு பெரிய கண்ணாடியில் மூடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இயேசுகிறிஸ்துவின் தாயார் மரியாளின் இருதயத்தை ஒரு பட்டயம் ஊடுருவி இருப்பதைப் போன்று சிலையில் வடிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்குவதை போன்று பிரத்யேகமாக செய்திருக்கிறார்கள்.

.

13. இயேசுவின் சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறது. யோசேப்பு அந்த சரீரத்தை பிலாத்துவினிடத்தில் கேட்டு பெற்று கொள்கிறான் (யோவான் 19:38). இவை அங்கு படங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த படத்தில் சிறு சிறு தூதர்களும் தங்கள் கண்களை ஒரு துணியால் துடைத்தபடி பறந்து செல்லும் காட்சி மனதை உருக்க வைக்கும். அங்கு பக்கத்திலேயே நிக்கோதேமு வெள்ளைப்போளமும் கரிய போளமும் கலந்து, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை சுகந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றி கட்டின இடம் உள்ளது (யோவான் 19:40).

.

14. இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரு புதிய கல்லறையில் வைக்கப்படுகிறது. - (யோவான் 19:41).

.
ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

பாடுகளின் மத்தியில் வெற்றி

..................பாடுகளின் மத்தியில் வெற்றி....................
.

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. - (லூக்கா 10:19).


பாடுகளும் பிரச்சனைகளும் வரும்போது நாம் துவண்டு போவது சகஜம். என்ன செய்வது என்று தவிக்கும் நேரத்தில் யாராவது உதவிக்கு வந்தால் நலமாக இருக்குமே என்று நினைக்கவும் தோன்றும்.

.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி வரும்போது, எதிரே சிவந்த சமுத்திரம் முன்பாக இருந்தது. அது ஆழம் மிகுந்தது, அதை கடந்து செல்ல எந்த படகும், கப்பலும் அவர்களுக்கு இல்லை. பின்னாக பார்க்கும்போது, பார்வோனின் சேனை அவர்களை துரத்தி பிடிக்கும்படியாக வந்துக் கொண்டிருந்தது. மோசேக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்'. ஆம், மோசேயும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார், 'அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.  நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்' ( யாத்திராகமம் 14: 10,15,16) என்று சொன்னார். மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினபோது, புரண்டு வந்துக் கொண்டிருந்த அந்த சிவந்த சமுத்திரம் குவியலாய் இரண்டாக பிரிந்து, நடுவில் பாதையை அமைத்து கொடுத்தது. அல்லேலூயா! உலர்ந்த தரை வழியாக இஸ்ரவேலர் சமுத்திரத்தை கடந்தார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பார்வோனின் சேனையோ, அதே சமுத்திரம் திரும்பி வந்து, அவர்கள் அனைவரையும மூடிப்போட்டது.

.

மோசேக்கு பிறகு தேவன் தெரிந்து கொண்ட யோசுவா ஜனங்களை வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு கொண்டு போவதற்கு முன் அவர்கள் யோர்தான் நதியை கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் அவர்களுக்கு படகோ, கப்பலோ இல்லை. இப்போது மோசேயின் கையில் இருந்த கோலும் இல்லை. அந்த கோலினாலே அநேக அற்புதங்களை மோசே தேவக் கிருபையால் செய்திருந்தார். யோசுவா ஐயோ கோல் என்னிடம் இல்லையே, எப்படி நான் இந்த கடலை தாண்டுவேன் என்று துயரப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை, யோசுவாவுக்கு தெரியும் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தில் வழி திறக்க முடியுமென்றால், யோர்தானிலும் வழிதிறக்க முடியும் என்று. 'யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்' (யோசுவா 3:5). 'யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது;  உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்' (யோசுவா 3:15-16). யோர்தான் நதியும் விசுவாசிகள் கடந்து போவதற்காக பிரிந்து வழிவிட்டது. அவர்கள் உலர்ந்த தரைவழியாக நடந்துப்போவதுப் போல யோர்தான் நதியின் நடுவாக நடந்துப் போனார்கள். அல்லேலூயா!

.

அதற்குப்பின் அநேக வருடங்கள் கழித்து, எலியா தீர்க்கதரிசி, கர்த்தர் சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், எலிசா அவரை பின்தொடர்ந்து இரட்டிப்பான வரம் வேண்டி அவரோடு சென்றுக் கொண்டிருந்தபோது, இருவரும் யோர்தான் நதியை சந்திக்கிறார்கள். 'அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்' (2 இராஜாக்கள் 2:8). யோர்தான் இருபக்கமாக பிரிந்து, அவர்கள் இரண்டு பேரும் தரைவழியாக போவதைப் போல நடந்து, யோர்தானை கடந்துப் போனார்கள். அல்லேலூயா! கர்த்தரை நம்பியிருந்த இவர்கள் பிரச்சனை முன்பாக இருப்பதைக்கண்டு பயந்து போய் இருக்கவில்லை. தைரியமாக கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, பிரச்சனைகளின் மேல் வெற்றி எடுத்தார்கள்.

.

இவர்கள் எல்லாரையும் விட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட விசுவாசிகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவின் கிருபை இருப்பதால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

.

நாம் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போல கடலை பிளக்க தேவையில்லை, அதன் மேல் நடந்து சென்று அற்புதத்தை பெற்றுக் கொள்ள முடியும்! அல்லேலூயா! 'இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது (மாற்கு 14:25-32). பேதுரு கர்த்தரை பார்த்து நடந்தவரைக்கும் அவர் மூழ்கவில்லை. கடலின் மேல் நடந்தார். ஆனால் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பயந்த போது அமிழ ஆரம்பித்தார். கர்த்தர் மூழ்கட்டும் என்று சும்மா பார்த்துக் கொண்டு இருக்கவில்லை, உடனே தம் கரத்தை நீட்டி அவரைப்பிடித்து, தூக்கி, திரும்பவும் இருவரும் நடந்து வந்து படகில் ஏறினார்கள்.

.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு மோசேயைப் போல நமக்கு கோல் தேவையில்லை, யோசுவாவைப்போல் உடன்படிக்கை பெட்டி தேவையில்லை, எலியாவின் சால்வை தேவையில்லை. பிரச்சனைகளைப் பார்த்து அப்படியே மூழ்கிப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கடலின் மேல் இயேசு நடந்ததைப் போல நாமும் பிரச்சனைகளின் மேல் நடக்க முடியும். அல்லேலூயா!

.

'இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது' (லூக்கா 10:19) என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மோடு இருப்பதால் பிரச்சனைகளை கண்டு மனம் துவளாமல், அவைகளின் மேல் நாம் நடந்து, பிரச்சனைகளை கொண்டு வருகிற சாத்தானாகிய சர்ப்பங்களையும் தேள்களையும் மிதித்து, வெற்றி எடுப்போம். உலகத்தின் கடைசி பரியந்தம் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னவர் நம்மோடு இருந்து வெற்றி எடுக்க கிருபை செய்வார். பிரச்சனைகளை பார்த்து அமிழ்ந்து போகும்போது, அவரை நோக்கி பார்க்கும்போது, அவர் உடனே தம் கரத்தை நீட்டி நம்மை தூக்கி எடுத்து, மீண்டும் நம்மை நடக்க வைப்பார். ஆமென் அல்லேலூயா!

புதன், 16 ஏப்ரல், 2014

மகா பாபிலோன்

மகா பாபிலோன்


மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ளஅருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில்எழுதியிருந்தது. - (வெளிப்படுத்தின விசேஷம் 17:5).

.
வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் நாடு எது தெரியுமா? ஆம், இஸ்ரவேல் தேசத்தை குறித்து தான். அதற்கு அடுத்தபடி சொல்லப்பட்டிருக்கிற நாடு எது என்றால் அது ஈராக் தேசம் தான். ஈராக் தேசத்தை குறித்து, அநேக இடங்களில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஈராக் தேசம் ஈரான் தேசத்தோடு ஒன்பது வருடங்கள் போரிட்டு, தாக்குபிடிக்க முடிந்தது. அதை ஆண்ட சதாம் ஹூசைன் அந்த ஒன்பது ஆண்டுகளும் விடாமல் போரிட்டு, கடைசி வரை யார் ஜெயித்தார்கள் என்றே சொல்ல முடியாதபடி அந்த போர் முடிந்தது. அது முடிந்த உடனே, ஈராக் தேசம் மிகவும் சிறிய அண்டை நாடான குவைத்தை பிடித்து ஆக்கிரமித்தது, அதன்பின் குவைத் தேசததின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க படைகள் வந்து, அதை மீட்டு கொடுத்தது. இன்னும் அமெரிக்க படைகள் குவைத்தை பாதுகாத்து வருகின்றது. அதன்பின் சதாம் ஹூசைன் நீதி விசாரிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. இந்த நாளில் இந்த ஈராக் தேசத்தை குறித்து, அதன் விசேஷங்களை குறித்து நாம் பார்க்க போகிறோம். வேதத்தில் காணப்படும் அசீரியர்கள், கல்தேயர்கள், மெசபொடோமியா, பாபிலோன் இவை யாவும் பண்டைய ஈராக் நாட்டினையே குறிக்கின்றன.

.

    1.ஏதேன் தோட்டம் ஈராக்கிலே இருந்தது.

    2.மெசபொடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக்            தேசத்திலே தான் நாகரீகம் தோன்றியது.

    3.நோவா பேழையை ஈராக்கிலேதான் கட்டினார்.  நோவா எந்த இடத்தில் பேழையை கட்டினார் என்பது வேதத்தில் குறிப்பிடாவிட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கில் தான் கட்டியிருக்க கூடும் என்று நம்புகின்றனர்.

    4.பாபேல் கோபுரம் ஈராக் தேசத்தில் தான் கட்டப்பட்டது.

    5.ஆபிரகாம் இருந்த கல்தேயரின் ஊரான ஊர் ஈராக்கில் தான் இருந்தது.

   6. ஈசாக்கின் மனைவி ரெபேக்காளின் ஊராகிய நாகோர் ஈராக்கில்தான் இருந்தது.

   7. யாக்கோபு ராகேலை சந்தித்தது ஈராக்கில்தான்.

   8. யோனா பிரசங்கம் செய்த நினிவே ஈராக்கில்தான் இருந்தது.

    9.இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை ஜெயித்த அசீரியா ஈராக்கில் தான் இருந்தது.

    10.ஆமோஸ் தீர்க்கதரிசி ஈராக்கில் தான் தீர்க்கதரிசனம் கூறினார்.

    11.ஈராக்கில் இருந்த பாபிலோன் எருசலேமை அழித்தது.

    12.பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் யூத வாலிபர்களை அடிமைகளாக கொண்டு சென்றது இந்த ஈராக்கில்தான். 

    13.தானியேல் தீர்க்கதரிசி இருந்த சிங்க கெபி ஈராக்கில்தான் இருந்தது.

    14.சாத்ராக் மேஷாக் ஆபெத்நேகோ என்னும் எபிரேய வாலிபர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கி வீசப்பட்டதும் இந்த ஈராக்கில் தான். அதில் நான்காவது நபராக இயேசுகிறிஸ்து வந்து உலாவினதும் இந்த ஈராக்கில்தான்.

    15.எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்னது இந்த ஈராக்கில்தான்.

    16.பேதுரு சுவிசேஷத்தை ஈராக்கில் பிரசங்கித்தார்.

    17.ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது –ஆதியாகமம் 2:10-14

    18.ஆதாமும்ஏவாளும் உருவாக்கப்பட்டது ஈராக்கில்--ஆதியாகமம்2:7-8

   19. சாத்தான் தன்னை முதலில் வெளிப்படுத்தினது ஈராக்கில் ஆதியாகமம் 3:1-6

    20.நிம்ரோத் பாபேல் கோபுரத்தை கட்டியது ஈராக்கில் - ஆதியாகமம் 10:8-911:1-4

    21.பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது ஈராக்கில்       ஆதியாகமம் 11:5-11

   22. யாக்கோபு 20 வருடங்களை ராகேலுக்காக கழித்தது ஈராக்கில் ஆதியாகமம் 27:42-45

    23.முதன்முதல் ராஜாங்கம் ஈராக்கிலே அமைக்கப்பட்டது தானியேல் 1:1-2, 2:36-38

   24. எஸ்தர் புத்தகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஈராக் தேசத்திலே நடந்தது

    25.நாகூம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தது ஈராக் தேசத்தை குறித்து தான்

    26.வெளிப்படுத்தின விசேஷத்தின் பாபிலோனிய தேசம் இப்போதிருக்கும் ஈராக் ஆகும்.

இப்படி சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசம் வேதத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஈராக் தேசத்தில் சதாம் ஹூசைனின் மறைவுக்குப்பின் எப்போது பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும், தீவிர வாத செய்கைகளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போமா? இந்த தேசத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபிப்போமா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமா?(Anudhina Manna, A Free Daily Devotional)

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது

..........................பரலோகத்தின் குடிமகன்..................

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். - (பிலிப்பியர்3:20).

.
ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் அவர் செல்லும் வழி தவறி விட்டது. யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தவராக ஒரு வீட்டின் கதவை தட்டினார். அங்கு இருந்த ஒரு மூதாட்டி கதவை திறந்தார்கள். என்ன என்று கேட்டபோது, வழி தவறிவிட்டதாகவும், வழி கேட்க வேண்டி கதவை தட்டியதாகவும் அந்த மனிதர் கூறினார்.
.
அப்போது அந்த வயதான அம்மா அவரை வீட்டிற்குள் அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறினார். உள்ளே வந்த மனிதருக்கு ஆச்சரியம், அந்த வீட்டில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள், ஒரு பழைய கட்டில் வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட அவர், அந்த தாயாரிடம், 'என்னம்மா வீட்டில் ஒன்றுமே இல்லை?' என்றுக் கேட்டார்.
.
அதற்கு அந்த தாயார், 'உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், 'நான் எப்படி என் பொருட்களை நான் போகும் இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்? நான் வழிபோக்கனாயிற்றே?' என்று கூறினார்.  அப்போது அந்த தாயார், 'நானும் அப்படித்தான்' என்றுக் கூறினார்கள்.
.
பிரியமானவர்களே, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, நாம் வழிப்போக்கர்களைப் போலதான் இங்கு வாழ வேண்டும், ஜீவிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில் அல்ல, பரலோகத்தில் இருக்கிறது.
.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள் (எபிரேயர் 11:13). அவர்கள் எத்தனையோ செல்வமிக்கவர்களும், செல்வ சீமான்களாயிருந்தும், அவர்கள் இந்த பூமியை தங்களுக்குத்தான்  என்றென்றும் என்று சொல்லவில்லை. அவர்கள் இந்த பூமியில் தங்களை அந்நியர்கள் என்றும், பரதேசிகள் என்றும் சொல்லி, இந்த பூமியைப் பாhக்கிலும் எல்லா விதத்திலும் அதிக மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள். சிலருக்கு பரதேசி என்று சொன்னால் கோபம் வரும். ஆனால் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களை பரதேசிகள் என்றுதான் சொல்லிக் கொண்டார்கள்.  அதைப்போலவே நாமும் இந்த உலகத்திற்குரிய காரியங்கள் யாவும் அழிந்து போகப்போகிறதை நினைவு கூர்ந்தவர்களாக பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடக்கடவோம்.
.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்பதற்கு அர்த்தம் நம்முடைய குடியுரிமை மற்றும் குடிமகன் எல்லாமே பரலோகம்தான். நாம் இந்தியாவின் குடிமகன் என்பதிலோ அமெரிக்காவின் குடிமகன் என்பதிலோ பெருமையடையலாம். ஆனால் பரலோகத்தின் குடிமகன் என்பது மற்ற எந்த நாட்டின் குடியுரிமையைக் காட்டிலும் சிறந்தது.
.
ஆகவே பரலோகத்தின் குடியுரிமை பெறவும், குடிமகனாக மாறுவதற்கும் நமக்கு தகுதி வேண்டும். எல்லாருமே அந்த தகுதியை பெற்று விட முடியாது. ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமானால், பாஸ்போர்ட், விசா போன்றவை எத்தனை முக்கியமோ அதைப் போல பரலோகம் செல்வதற்கும் நமக்கு தகுதி இருக்க வேண்டும். முதலாவது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். கழுவப்படாவிட்டால் நமக்கு அந்த உரிமை என்றுமே கிடையாது.
.
அடுத்து, இந்த உலகத்தில் வாழும்போது நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும். பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை தரிசிக்க முடியாது என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. பரலோகம் செல்வதற்கு பரிசுத்தம் மிக அவசியம். தேவன் ஏதோ கண்களை மறைத்து நம்மை பரலோத்திற்கு விட்டுவிடுவார் என்பது நம்முடைய எண்ணமே தவிர, கர்த்தர் அசுத்தத்தை காணாத சுத்தக் கண்ணர். அவரிடம் எந்த அசுத்தமும் செல்லாது. மேலும் பல தகுதிகள் இருந்தாலும், இந்த இரண்டு தகுதிகளும் மிகவும் முக்கியமானது.
.
பிரியமானவர்களே, நாம் இந்த உலகத்தில் வாழ்வதே பரலோகம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே. ஆகவே கொடுக்கப்பட்டிருக்கிற நாட்களில் நாம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் நம்மைக் காத்துக் கொள்வோம். அப்போது கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம். அவரோடு என்றென்றும் வாழுவோம். ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

கர்த்தர் கொடுத்த பிள்ளைகள்

......................கர்த்தர் கொடுத்த பிள்ளைகள்.....................


உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். - (சங்கீதம் 121:3).

நாம் நம்முடைய வெளிநாட்டு ஊழியங்களுக்காக ஜெபிக்க கடமை பட்டு இருக்கிறோம் கீழே குறிபட்டிருக்கிற நிலை வெளிநாட்டில் நம்முடைய விசுவாசிகளிடம் அதிகம் இருப்பதை நான் காண்கிறேன் ஆகவே நாம் நம்முடைய விசுவசிகளுக்காக ஜெபிப்போம் கர்த்தர் அவர்களை வழிநடத்துவராக ஆமென்

.
நாம் அனைவரும் நம் பிள்ளைகளை நேசிக்கிறோம். நாம் சம்பாதிப்பதே அவர்களுக்காகத்தான் என்று சொல்லுகிறோம். நாம் தான் அனுபவிக்கவில்லை, நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டுமே என்று அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருகிறோம். நல்ல படிப்பை தருகிறோம். எல்லாம் சரிதான். ஆனால் அவர்களோடு நாம் செலவிடும் நேரம் தான் மிகவும் குறைவு. அவர்களோடு நாம் குறைவாகவே பேசுகிறோம். குறைவான நேரங்களே பழகுகிறோம். எனவே தெரிந்தோ, தெரியாமலோ நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு கணிசமான இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.

.

அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் நாம் அவர்களுக்கு எப்படியிருக்க வேண்டும் என்ற நமக்கு தெரிவதில்லை. பிள்ளைகளிடம் ஒரு பெலவீனத்தையோ, ஒரு குறைவான சுபாவத்தையோ காண நேரிடும்போது அவர்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் முந்துகிறோம். அவர்களை புரிந்து கொண்டு அவைகளை மென்மையான முறையில் அகற்றுவதற்கு நமக்கு பொறுமையில்லை. எனவே அவர்கள் தங்களில் பெலவீனத்தையும், கறைகளையும் மாற்றுவதற்கு பதிலாக நமக்கு தெரியாமல், மறைத்து கொள்கிறார்கள்.
.

பல பிள்ளைகளுக்கு வெளியே ஏராளம் நண்பர்களுண்டு. வீட்டிலோ அவர்களுக்கு நண்பர்களில்லை. அவர்கள் வீட்டிற்குள் உம் என்று முகத்தை வைத்து கொண்டிருக்கிறார்கள். வெளியே போய் விட்டாலோ முகமெல்லாம் குதூகலமாய் பிரகாசிக்கிறது. அவர்கள் உடல் வீட்டிற்குள் உலாவினாலும், உள்ளமோ வீட்டிற்கு வெளியே உலா சென்று கொண்டிருக்கிறது.

.

சிறுவயதுகளிலே பிள்ளைகள் நம்மோடு அதிகமாக பேச விரும்புகின்றார்கள். நம்மிடம் பல காரியங்களை கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள். நம்மிடம் மட்டுமே தங்களின் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை கேட்க விரும்புகின்றனர். சிறுவயதுகளிலே தாய் தந்தையின் உறவிலும் ஐக்கியத்திலும் பேச்சு வார்த்தைகளிலும் மட்டுமே அதிக திருப்தியையும், பாதுகாப்புணர்ச்சியையும் உணர்கின்றார்க்ள. சிறுவயதுகளிலே அவர்களிடம் நாலு வார்த்தைகள் அன்பாய் பேசி விட்டால் அவர்களின் மகிழ்ச்சி அளவில்லாமல் போய் விடுகிறது

.

பல பிள்ளைகள் வாலிப வயதுகளை எட்டும் முன்பே தங்கள் தவறான பழக்க வழக்கங்களினாலும், தகாத உறவுகளினாலும், ஆகாத நடக்கைகளினாலும் பெற்றோரின் மனதை புண்படுத்துகின்றார்கள். பெற்றோரின் உள்ளம் வருந்துவதும், உடைக்கப்படுவதும் அவர்களுக்கு சாதாரணமான விஷயமாக உள்ளது. பெற்றோரின் மனம் துன்புறுவதை குறித்து அவர்களுக்கு கவலையில்லை. பெற்றோரின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற அளவிற்கு பெற்றோரும், பிள்ளைகளும் உணர்வு பூர்வமாக நெருங்கி வராமையும் இதற்கு முக்கிய காரணமாகும். பிள்ளைகளோடு நண்பர்களை போல நெருங்கி வாழ்ந்து அவர்களை நேசித்தால்தான் நம்முடைய மனம் புணபடுவது அவர்களுக்கு பெரிய விஷயமாயிருக்கும். பெற்றோர் மனம் புண்பட எதையும் செய்ய கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்.

.

ஆம் எல்லாவற்றையும் விட விலையேற பெற்றவை நேரம் தான். அந்த நேரங்கள் தான் பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய தேவையாக உள்ளது அதனை ஒரு நஷ்டமாக எண்ணவே வேண்டாம். பிள்ளைகளின் நல்ல உறவையும் ஐக்கியத்தையும் இழப்பதை விட பணத்தையோ, பொருளையோ இழப்பது பெரிய நஷ்டமேயில்லை. நம்மை அவர்களுக்கு எடுத்துகாட்டாக வைப்போம். நாம் அவர்களை ஏதாவது செய்ய சொன்னால் நாம் முதலில் அவற்றை அவர்கள் கண்களுக்கு முன்பாக செய்வோம். அதை காண்கிற பிள்ளைகள் அவர்களும் அதை செய்ய பழகுவார்கள். பிள்ளைகளோடு நண்பர்களை போல பழகுவோம். அவர்களுக்கென்று நேரத்தை ஒதுக்குவோம். அப்போது பிள்ளைகள் வெளியே நண்பர்களை தேடி போகாமல், வீட்டிலே பெற்றாரோடு சந்தோஷமாக இருப்பார்கள். அப்படியே நம் பிள்ளைகள் நம் பந்தியை சுற்றி ஒலிவமர கன்றுகளை போல இருக்கும்படியாக தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!  (Anudhina Manna, A Free Daily Devotional)

பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்

....................பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்..................


நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். - (ரோமர் 2:2).

.
ஒரு குடியானவன் தான் வளர்க்கும் புறாக்களுக்கெல்லாம் நல்ல ஆகாரத்தை போடுகிறான் என்று ஒரு காகம் கவனித்து, தான் புறா வேஷம் போட்டு கொண்டால் கஷ்டப்பட்டு உணவை தேடி அலைய வேண்டுவதில்லை என எண்ணியது. ஆகவே ஒரு சுண்ணாம்பு குழியிலே போய் புரண்டு புரண்டு படுத்து தன்னை வெண்மையாக்கி கொண்டது. புறாவை போல புதிய நடையும் கற்று கொண்டது. அடுத்த நாள் குடியானவன் புறக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்போது தானும் ஒரு புறாவை போல நின்று அருமையான உணவை உட்கொண்டது. இப்படி அநேக நாள் இந்த திருட்டு காகம் அவரை ஏமாற்றி கொண்டே வந்தது.

.

ஒரு நாள் அந்த பக்கத்தில் எலி செத்து கிடக்கும் நாற்றம் அடித்தது. மற்ற காகங்களெல்லம் கூடி வந்து காகா என்று கத்தி கொண்டு செத்த எலியை விருந்துண்ண ஆரம்பித்தன. புறா வேஷம் போட்ட காகத்திற்கு தன்னையும் அறியாமல் ஜென்ம சுபாவம் தலையெடுத்தது. புறாக்களின் மத்தியிலிருந்து கா கா என்று கத்தி கொண்டு செத்த எலியை நோக்கி பறந்தது. அதை பார்த்த குடியானவனுக்கு நல்ல கோபம் வந்தது. இனிமேல் வேஷம் போட்ட காக்கா வரட்டும் என்று எண்ணி கொண்டான்.

.

காகத்தின் வேஷத்தை கண்ட மற்ற காகங்கள் அதை விரட்டியடித்தன. உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி குடியானவனிடம் வந்தது. அவனோ கோலை வைத்து அதை அடித்து துரத்தினான். இங்கும் போக முடியாமல், அங்கும் செல்ல முடியாமல் அந்த காகம் தவித்தது.

.

இந்நாட்களிலே கிறிஸ்தவர்களில் அநேகர் நேரத்திற்கு தகுந்தாற் போல், இடத்திற்கு தகுந்தாற்போல் வேஷம் போட கற்று கொண்டுள்ளார்கள். ஆலயத்தில் விசுவாசிகளை காணும்போதும், போதகரிடம் பேசும் போதும் பரிசுத்த வேஷம் தரித்து கொள்வார்கள். பேச்சு, பார்வை, பாவனை அனைத்தும் பரிசுத்தமாகி விடுகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து உலகதிற்குள் வந்து வீட்டிற்கு வந்தவுடன் பேச்சு செயல் எல்லாமே மாறி விடுகிறது.

.

ஆனால் தேவன் நமது வெளிவேஷத்தை கண்டு ஏமாறுபவர் அல்ல, அவர் நமது உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகிறவர். அவரிடம் வரும்போது மட்டும் பரிசுத்த வேஷம் தரித்து அவரை பரவசப்படுத்த முடியாது. ஆகவே நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷத்தை தரிக்காதபடி, நம் மனம் புதிதாக ஒவ்வொரு நாளும் மாற வேண்டும்.

.

எப்படி நம் மனதை புதிதாக மாற்ற முடியும்? ஓவ்வொரு நாளும் காலையில் நாம் எழுந்திரிக்கும்போது, நம் மனதையும், சிந்தனைகளையும், எண்ணங்களையும் கர்த்தருடைய கரத்தில் கொடுத்து, அவர் நம்முடைய சிந்தனைகளை ஆளும்படி ஒப்பு கொடுக்க வேண்டும். டெலிவிஷனுக்கும், பேஸ் புக்கிற்கும் கொடுக்கும் நேரத்தில் பாதியையாவது கர்த்தருக்கு கொடுக்கும்படி பழக வேண்டும். அப்படி கர்த்தருக்கு கொடுக்கும்போது, நம் எண்ணங்களும், சிந்தனைகளும் புதிதாக்க மாற்றப்படும். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக நாம் வேஷம் தரிக்கமுடியாது.

.

ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சமுகத்தில் நம் மனம் புதிதாக்கப்படுகிறபடியால், பாவத்திற்கு விலகி, கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் வாழ முடியும். அவருடைய சிந்தனை நம்மை ஆட்கொள்வதால், கர்த்தர் நம்மோடு எப்போதும் இருப்பதை உணர முடியும். அவருடைய சித்தத்தை பகுத்தறிந்து அவருக்குள் வளருவதால், நம் மனம் புதிதாகி மறுரூபமாக நாம் வாழ முடியும். அப்படிப்பட்டதான ஒரு வாழ்வை கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா! (Anudhina Manna, A Free Daily Devotional)

திங்கள், 14 ஏப்ரல், 2014

போராட்டத்தில் ஜெயிப்பவர்கள் நாமே

...........போராட்டத்தில் ஜெயிப்பவர்கள் நாமே...............


ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. - (எபேசியர் 6:12).

.
நம்முடைய ராஜ்யமும், அரசாங்கமும் இப்போது நாம் வாழ்கிற இந்த பூமியில் இல்லை. 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' - (பிலிப்பியர் 3:20). நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருப்பதால், இந்த உலகத்தில் நாம் இருப்பது தற்காலிகமானதுதான். இது நிரந்தரமானது அல்ல.

.

அப்படி தற்காலிகமாக இந்த உலகத்தில் வாழ்கிற நாம், யாரோடும் சண்டையோ வாதங்களோ செய்வது கூடாது. சாத்தான் நம்மை இந்த உலகத்திற்குரியவர்களாக மாற்றும்படியாக தந்திரமாக இந்த உலகத்தாரை நமக்கு விரோதமாக எழுப்புகிறான். அதை உணராத நாம், அவர்களோடு வழக்கிடுகிறோம். மட்டுமல்ல, விசுவாசிகளோடு விசுவாசிகளை சண்டையிட வைக்கிறான். ஒரு விசுவாசியை மற்ற விசுவாசி தாக்கி பேசும்போது, அவனுக்கு தான் மிகவும் சந்தோஷம்! அதை அறியாமல் சபைகளில் ஒருவரோடொருவர் வழக்கிட்டு கொள்கிறார்கள்.

.

வசனம் தெளிவாக கூறுகிறது, நம்முடைய போராட்டம், மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல என்று கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக யாராவது பேசினாலோ, அல்லது காரியங்களை செய்தாலோ அது பிசாசினால் உண்டானது என்று அறிந்து கொள்ள வேண்டும். அந்த நபரோடு நாம் தர்க்கமோ, வாதமோ செய்யவே கூடாது. அவர்களுக்கு பின்னால் இருந்து கிரியை செய்கிற அந்தகார சக்திகளின் வல்லமைகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு முன்பாக நாம் அதை செய்ய கூடாது. மனதில் கடிந்து ஜெபிக்க வேண்டும். நம்முடைய ஜெபங்களில் கடிந்து ஜெபிக்க வேண்டும்.

.

'ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு' என்று வேதம் கூறுகிறது. நாம் செய்கிற போராட்டம், உலகத்தில் கண்களுக்கு தெரிந்து செய்கிற போராட்டத்தை அல்ல, ஆவிக்குரிய போராட்டத்தை செய்கிறவர்களாகவே நாம் இருக்கிறோம். யார் யாரோடு நமக்கு போராட்டம் உண்டு என்று பாருங்கள், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் ஆக, நான்கு வகையான சேனைகளோடு நாம் போராட வேண்டி உள்ளது. இது ஆவிக்குரிய போராட்டம்!

.

இந்த உலகத்தில் ஒரு அரசாங்கத்தில் எப்படி படிப்படியாக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை போல சாத்தானின் அரசாங்கத்திலும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகள் தங்கள் வேலைகளை தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரங்களின்படி செய்கின்றன.

.

ஜெய்ப்பூரில் கிறிஸ்தவர்கள் அநியாயமாய் தாக்கப்பட்ட நிகழ்ச்சியை எல்லாரும் பார்த்திருப்பீர்கள். கிறிஸ்தவர்கள் யாருக்கும் எதுவும் செய்வதில்லை. அடித்தால் திருப்பிக்கூட அடிப்பதில்லை. மனதில் வைராக்கியம் வைத்து, யாரையும் துன்புறுத்துவதுமில்லை. ஆனால் அடிக்கப்பட்டு, கீழே விழுந்து கிடக்கும் பாவமான கிறிஸ்தவனை தலையில் எட்டி உதைத்து, இரத்தம் வடிய வடிய பெரிய கம்புகளினால் அடிப்பதை பார்க்கும்போது கண்ணீர் வராமல் இருக்காது.

.

ஆனால் நம்முடைய யுத்தம் இந்த உலகத்திற்குரியதல்ல, நம்முடைய யுத்தம் கண்களுக்கு தெரியாத ஆவிக்குரிய போராட்டம். நாமும் கம்புகளை எடுத்து அவர்களோடு போராட முடியாது, கூடாது.  கிறிஸ்தவனை அடிப்பதால் வெற்றி பெற்றதாக அந்த பொல்லாத கூட்டம் நினைத்தாலும், அவனை அடித்து, வெற்றி எடுக்கவே முடியாது என்று சாத்தானுக்கு தெரியும். ஏனெனில் அவன் ஏற்கனவே சிலுவையில் கர்த்தரிடம் தோற்று போனவன்தானே! 'துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்' (கொலோசேயர் 2:15) அல்லேலூயா!



.தோற்று போனதினால் அவன் கிறிஸ்தவர்கள் மேல் தன் கோபத்தை காட்டும்படியாக அவர்களை துன்புறுத்தினாலும், அவர்கள் எப்பொழுதும் ஜெயம் கொள்கிறவர்களே! கிறிஸ்துவை அநேக பாடுகளின் வழியாக அவரை சாட்டையால் அடித்து, துப்பி, முள்கிரீடத்தை சூட்டி, ஆணிகளை அவருடைய கால்கரங்களில் அடித்து, துன்புறுத்தியவன், இன்று அவருடைய பிள்ளைகளை துன்புறுத்துகிறான். அன்று அவன் படுத்திய பாடுகளை பொறுமையாய் ஏற்று கொண்ட இயேசுகிறிஸ்து, அவனை சபிக்காமல், தம் அதிகாரத்தை பயன்படுத்தி, அவனை அழிக்காமல், சிலுவையில் அவன் மேல் வெற்றி சிறந்தாரே, அதுப்போல இன்று, நாமும் கிறிஸ்தவர்களை அடித்தவர்களை, துன்புறுத்துகிறவர்களை அடிக்காமல், சபிக்காமல் அவர்களை மன்னிப்போம். கிறிஸ்தவர்களின் இரத்தம் கிறிஸ்துவின் இரத்தத்தை போல நன்மையானவற்றை பேசும். அந்த இடத்தை கர்த்தருக்கு சொந்தமாக்கி கொள்ளும்படியாக பேசும். யார் யார் துன்பப்படுத்தினார்களோ, அவர்கள் பவுலை போல தேவனால் சந்திக்கப்பட்டு, அவர்களே வேதத்தை ஏந்தி கர்த்தருக்கு ஊழியம் செய்ய வைக்கும்படியாக தேவன் அவர்களை மாற்றுவார்! அல்லேலூயா!  (Anudhina Manna, A Free Daily Devotional)