.....................தப்புவித்து கனப்படுத்தும் தேவன்.................
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். - (சங்கீதம் 91:15)
'அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்' என்று வேத வசனம் கூறுகிறது. சுhத்ராக் மேஷாக் ஆபெத்நெகோ என்னும் மூன்று எபிரேய வாலிபர்களும், நேபுகாத்நேச்சார் செய்து வைத்த பொற்சிலையை வணங்க மறுத்ததால், ஏழுமடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கிப் போடப்பட்டபோது, அவர்கள் பயப்படவில்லை. மாறாக, அவர்கள் ஜெபித்திருக்கக்கூடும், 'ஆண்டவரே இந்த நேபுகாத்நேச்சார் சக்ரவர்த்தியின் முன்பாக உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும், நீரே உலகமனைத்திற்கும் தேவன் என்பதை வெளிப்படுத்தும்' என்று. அந்த ஆபத்தான நேரத்தில் நான்காவது நபராக தேவபுத்திரனின் சாயலாக (தானியேல் 3:25) இயேசுகிறிஸ்துவே இறங்கி வந்து, அவர்களை தப்புவித்தார். மட்டுமல்ல, இராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான் (தானியேல் 3:30) என்றுப் பார்க்கிறோம்.
.
ஆம், ஆபத்தில் அவரே நம்மோடிருந்து, நம்மை தப்புவித்து, மட்டுமல்ல, நம்மை கனப்படுத்துகிற தேவனும் அவரே. ஆபத்தில் நான் அவனோடிருந்து அவனை தப்புவிப்பேன் என்று சொல்லவில்லை. ஆபத்திலே நானே அவனோடிருந்து அவனை தப்புவிப்பேன் என்று தேவன் சொல்கிறார். ஆம், அவரே நம் ஆபத்துக் காலத்தில் நம்மோடுக் கூட இருப்பார். மற்றவர்கள் யாவரும் நம்மை கைவிட்டாலும், கர்த்தரே நம்மோடிருந்து நம்மை அந்த ஆபத்திலிருந்து தப்புவிப்பது மட்டுமல்ல, நம்மை கனப்படுத்தி, நம் கால்களை மான் கால்களைப் போலாக்கி, நம்மை உயர்ந்து ஸ்தலத்தில் நடக்க செய்வார்.
.
பிரியமானவர்களே, நம் ஆபத்தான நேரங்களில் கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம். அவர் நமக்கு மறுஉத்தரவு அருளுகிறது மட்டுமல்ல, அவரே அந்த பயங்கரமான நேரத்தில் நம்மோடு கூட இருந்து நம்மை தப்புவிப்பார். அப்போது அந்த பயங்கரமான நேரத்திலிருந்து, சூழ்நிலையிலிருந்து நம்மை தப்புவிப்பது மட்டுமல்ல, நம்மை மற்றவர்கள் முன்பாக கனப்படுத்தி, நம் பெயரை உயர்த்துவார். எத்தனை நல்ல தேவன் நம் தேவன்!
.
அப்படிப்பட்ட தேவனையே நாம் சார்ந்துக் கொள்வோம். எந்த சூழ்நிலையிலும் அவரையே நோக்கி கூப்பிட்டு, அவரையே பற்றிக் கொள்வோம். அவரே நம்மை தப்புவித்து, கனப்படுத்துவார். ஆமென் அல்லேலூயா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக