.................எங்களுக்கோ கர்த்தரே தேவன்.................
எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை. - (2 நாளாகமம் 13:10).
.
சாலொமோன் இராஜாவின் குமாரன் ரெகொபெயாமின் புத்தியீனத்தினால் பன்னிரண்டு கோத்திரங்களை உள்ளடக்கி இருந்த இஸ்ரவேல் தேசம் இரண்டாக பிரிந்தது. பத்துக் கோத்திரங்களுக்கு யெரொபெயாம் இராஜாவாகவும், மீதமிருந்த யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாருக்கு ரெகொபெயாமும் இராஜாக்களாக இருந்தனர்.
.
ரெகொபெயாம் மரித்தப்பின்பு அவருடைய குமாரன் அபியா இரண்டு கோத்திரத்தாருக்கும் இராஜாவானார். அதைக் கண்ட யெரொபெயாம் 'ஏன் இந்த இரண்டு கோத்திரம் மாத்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும், அதையும் என்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்று எண்ணி, அபியாவிற்கு விரோதமாக யுத்தம் செய்ய எட்டு இலட்சம் பராக்கிரமசாலிகளை நிறுத்தினான்.
.
அபியாவிற்கு இருந்த இரண்டு கோத்திரங்களில் அவரிடம் இருந்த பராக்கிரமசாலிகள் நான்கு இலட்சம் பேர்களை அவர்களுக்கு எதிராக நிறுத்தினார். அப்போது அவர் யெரொபெயாமையும்,அவர்களுடைய சேனைகளையும் பார்த்து, 'நீங்கள் யுத்தம் செய்யாதீர்கள், அது உங்களுக்கு சித்திக்காது' என்று சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.
.
அப்போது அபியா மனிதர்களை அல்ல, தேவனை சார்ந்துக் கொண்டார். 'நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள். இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது' (2நாளாகமம் 13:11-12) என்று சொல்லியும், அவர்கள் கேட்கவில்லை.
.
யுத்தம் ஆரம்பித்தது. 'யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள். யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்' (14-15 வசனங்கள்) யூத ஜனத்திற்கு முன்பாக முன்னும் பின்னும் எதிரிகள் அவர்களை சூழ்ந்துக் கொண்டபோது, அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான்கு இலட்சம் பேருக்கு விரோதமாக எட்டு இலட்சம் பராக்கிரமசாலிகள். அவர்கள் அந்த நேரத்தில் ஒன்றும் செய்யவில்லை. ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி, யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள். அதாவது தேவனை துதிக்க ஆரம்பித்தார்கள்.
.
'யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார். இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலிலே வெட்டுண்டு விழுந்தார்கள் (15-17வசனங்கள்)
.
யூதா மனுஷர் வேறு ஒன்றும் செய்யவில்லை. கர்த்தரை ஆர்ப்பரித்து துதித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்பாக அதாவது நான்கு இலட்சம் பேருக்கு முன்பாக ஐந்து இலட்சம் பராக்கிரமசாலிகள் வெட்டுண்டு விழுந்தார்கள். அல்லேலூயா!
.
பிரியமானவர்களே, நாமும் ஒருவேளை இந்த நிலையில் இருக்கிறோமா? நமக்கு முன்னும் பின்னும் சத்துருக்கள் நம்மை முறியடிக்கும்படி நம்மை சூழ்ந்திருக்கிறார்களா? நாம் ஒன்றும் செய்யாதபோதும் நமக்கு விரோதமாக சத்துருக்கள் பெருகியிருக்கிறார்களா? நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுமட்டும் தான். நம்மால் இயன்றவரை கர்த்தரை துதிப்போம். கர்த்தர் நமக்கு முன்னால் எல்லா சத்துருக்களையும் புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.
.
இந்த நாட்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக அநேகர் கூட்டம் கூடி, எதிராக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினாலும், நாம் ஒன்றுப்பட்டு கர்த்தரை துதிப்போம். கர்த்தர் எல்லா சத்துருவின் யுத்தத்திலும் வெற்றியை தந்திடுவார்.
.
மட்டுமல்ல, 'அபியா இருந்த நாட்களிலெல்லாம் அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான். அபியா பலத்துப்போனான்' (20-21 வசனங்கள்) என்று வாசிக்கிறோம். அபியா உயிரோடு இருந்த வரைக்கும் அவருடைய எதிரி அவரை மேற்கொள்ள முடியவில்லை. கடைசியில் கர்த்தர் அடித்ததால் யெரொபெயாம் மரித்தான் என்று வாசிக்கிறோம்.
.
நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் இருந்தால் 'உங்களை தொடுகிறவன் அவருடைய கண்மணியை தொடுகிறான்' (சகரியா 2:8) என்று வசனம் சொல்கிறது. நாம் கர்த்தரை எந்த நேரத்திலும், நம்முடைய துன்ப நேரத்திலும், நமது குழப்பமான நேரத்திலும், நமது பயத்தின் நேரங்களிலும், என்ன செய்வது என்று தவிக்கும் நேரங்களிலும் 'எங்களுக்கோ கர்த்தரே தேவன்' என்று சர்வ கனத்திற்கும் பாத்திரராகிய அவரையே துதிக்கும்போது, நமக்கு வெற்றி தரும்படி தேவன் நம்மோடிருப்பார். நம்முடைய இறுதிவரை நம்முடைய சத்துருக்கள் எழுந்திரிக்கக்கூடாதபடி தேவன் பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!
(Anudhina Manna, A Free Daily Devotional)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக