..........................மாற்றப்பட்ட வாழ்க்கை.......................
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).
.
ஒரு நாள் ஆல்பர்ட் நோபல் அவர்கள் தினசரி செய்தித்தாளை வாசித்தபோது, இறந்தவர்களின் புகைப்படத்தை போடும் இடத்தில் அவருடைய புகைப்படமும், அதன் கீழே டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தவறுதலாக பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், நோபல் அவர்களை அந்த காரியம் அதிகமாக சிந்திக்க வைத்தது.
.
அந்த காலத்தில் டைனமைட் மற்றவர்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. தன்னை மற்றவர்கள் நினைக்கும்போது, மற்றவர்களை அழிப்பதற்காக இந்த மனிதர் டைனமைட்டை கண்டுபிடித்தார் என்று சொல்வார்களே என்று நினைத்து மனம் உடைந்து போனார்.
.
அந்த செய்தி வெளியிடப்பட்டதன் வழியாக நோபல் தன் வாழ்க்கையையே மாற்ற தீர்மானித்தார். உலகத்தின் சமாதானத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக பாடுபட ஆரம்பித்தார். இன்று சமாதானப்பரிசு என்றாலே நோபல் பரிசு என்று சொல்லும் அளவிற்கு அவர் வாழ்க்கை மாற்றப்பட்டது. நோபல் என்றால் டைனமைட் என்ற சொல் மாறி, சமாதானப்பரிசு என்றால் நோபல் என்றாகிவிட்டது. ஏனென்றால் அந்த மனிதர் தன் வாழ்வின் நோக்கத்தையும், தன்னுடைய வழியையும் மாற்றினபடியால், மற்றவர்களுக்கு அவர் மேல் இருந்த எண்ணம் முற்றிலும் மாற்றப்பட்டது. அல்லேலூயா!.
.
வேதத்திலும் சவுல் என்று சொல்லப்பட்ட மனிதர், சபைகளை பாழ்ப்படுத்துபவர் என்று அழைக்கப்பட்டார். பழைய ஏற்பாட்டு நியமனங்களின்படி, தான் செய்வது சரி என்று, இயேசுவை தெய்வமாக ஏற்றுக் கொள்ளாதவராக, அப்படி ஏற்றுக் கொண்டவர்களை அரசின் அதிகாரத்தோடு, துன்பப்படுத்தி, சபைகளை பாழ்ப்படுத்தினார். சவுல் என்றாலே சபைகள் பயப்படும் அளவிற்கு அவர்களை துன்பப்படுத்தினார்.
.
ஆனால் ஒரு நாள் வந்தது, இயேசுகிறிஸ்து அவருக்கு தமஸ்குவின் தெருவில் தரிசனமாகி, 'நீ துன்பப்படுத்துகிற கிறிஸ்து நானே' என்று சொல்லி, அவரை சந்தித்தபோது, தன் வாழ்க்கையை அப்படியே மாற்றி விட்டார். சபைளை அழித்த சவுல் இப்போது சபைளை கட்ட ஆரம்பித்தார். சபையாரை துன்பப்படுத்தின சவுல் பவுலாக மாறி, கிறிஸ்துவுக்காக மற்றவர்கள் யாரும் படாத பாடுகளை பொறுமையாக ஏற்றுக் கொண்டு சகித்தார். அவருடைய நோக்கமும், வழியும் மாறினது. இன்று அவரை நாம் நினைக்கும்போது, சபைகளை ஸ்தாபித்தவர், புதிய ஏற்பாட்டு சபை நடக்க வேண்டிய வழிகளை காட்டும் 13 நிருபங்களை எழுதினவர், கர்த்தருக்காக தன் ஜீவனை குப்பையாக எண்ணினவர் என்று சொல்லதக்கதாக அவருடைய வாழ்கை மாறினது. அல்லேலூயா!.
.
பிரியமானவர்களே, நாம் இறந்தபிறகு, நம்மைக் குறித்து என்ன சொல்லப்படும்? குடிகாரன், சண்டைக்காரன், புறங்கூறுகிறவன், சபைகளை கெடுத்தவன், மற்றவர்களை சந்தோஷமாக வாழ வைக்காதவன், குடும்பத்தை அழித்தவன், அழித்தவள், மற்றவர்களுக்கு ஒரு உதவியையும் செய்யாதவன், செய்யாதவள் என்று சொல்வார்களோ? அல்லது, சபைக்கு தூணாய் இருந்தவன், சபையை நேசித்தவன், குடும்பத்தை நேசித்தவன், மற்றவர்களோடு அன்போடும், ஐக்கியத்தோடும் வாழ்ந்தவன், உத்தமன், நீதிமான் என்று சொல்வார்களோ?.
.
நம்மையே ஒரு முறை ஆராய்ந்துப் பார்ப்போம். நாளை யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் கொடுக்கப்பட்டிருந்த காலத்திற்குள் பவுலும், நோபலும் தங்கள் கொடிய வழிகளை விட்டு, நன்மைக்கு ஏதுவாக தங்கள் வாழ்க்கையை மாற்றியதுப் போல நம்முடைய துன்மார்க்க வழிகளை விட்டு திரும்புவோம். கர்த்தருக்கு பிரியமான வழிகளில் நடப்போம், அப்போது தானாகவே மற்றவர்கள் விரும்பும் வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாறும். இனிமேலும் தாமதியாதபடி, குடும்பமும், சபையும் சமுதாயமும் நேசிக்கிறவர்களாக மாறுவோம். கர்த்தரும் அதில் பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா!.
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3744-05th-march-2014-&Itemid=56

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக