செவ்வாய், 1 ஏப்ரல், 2014

பாடுகளின் நடுவில் வளர்ச்சி

..................பாடுகளின் நடுவில் வளர்ச்சி......................

அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். - (2 தீமோத்தேயு 2:12).

.
சீனாவில் கம்யூனிஸ்ட் அரசால் இன்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் தாங்கொண்ணா உபத்திரவங்களின் வழியாக செல்லுகின்றனர். அதறகு மத்தியிலும் சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிக் கொண்டே இருக்கிறது என்பது எந்த சந்தேகமுமில்லாத பெரிய உண்மை. உபத்திரவங்களின் மத்தியில்தான் வெளிப்படையான வளாச்சியைக் காண முடிகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் ஆயிரக்கணக்கில் இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது பல மில்லியன்கள்! இந்த வளர்ச்சியின் இரகசியம் என்ன? அவர்கள் கடந்து வந்த பாடுகளே!

.

வாச்மன்நீ, யூன்லேம்ப் போன்றோர் பெரும் பாடுகளையும் நீண்ட சிறை வாசத்தையும் சகித்து அவர்கள் செய்த ஊழியங்கள் சபை வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன. ஆகவே சீனாவிலுள்ள சபைகள் கிறிஸ்தவ உலகத்திற்கு கொடுக்கும் செய்தி என்னவெனில் 'கிறிஸ்தவனுக்கு உறுதியான விசுவாசமும் உபத்திரவங்களைச் சகித்துக் கொள்ளும் மனப்பாங்கும் இருக்குமானால் சபை மிக வேகமாக வளர்ச்சி அடையும்' என்பதுதான்.

.

இப்படி சீனாவில் சபை வளர்வதற்கு காரணமாயிருந்து வாச்மன்நீ அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்ச்சிகளை காண்போம். இவர் ஒரு சிறந்த கல்விமான், அநேக கிறிஸ்தவ புத்தகங்களை எழுதி, சீன மக்களின் இதயத்தை தட்டி எழுப்பினார். ஊழியத்தின் பாதையிலே பல அவதூறுகள், பழிச்சொற்கள், காரணமில்லாத பகை என அடுக்கடுக்காய் வந்த துன்பங்களை பொறுமையோடு சகித்தார். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் அவர் பிரசங்கித்த செய்தியின் சுருக்கத்தை காண்போம்.

.

'தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கும் உபத்திரவஙகள், கசப்பான அனுபவங்கள், சோதனைகள் அனைத்தும் நம்முடைய மிகுந்த நன்மையைக் கருத்தில் கொண்டே அருளப்பட்டதாகும். தேவன் நமக்கு நலமானவற்றையே எப்போதும் தரவேண்டுமென்று எதிர்ப்பார்க்கக்கூடாது. ஒரு மனிதன் ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவரே, தயவு செய்து நான் நலமானதை மாத்திரம் தெரிந்துக் கொள்கிறேன். நான் அனுபவிக்கும் இநத் உபத்திரவம் எனக்கு வேண்டாம்' என்று ஜெபிப்பானானால் தேவன் அவனுக்கு என்ன பதில் கூறுவார்? 'நான் உனக்கு இப்போது தந்திருப்பது உன்னுடைய நலமான ஆதாயத்திற்காகவே தந்திருக்கிறேன்' என்ற பதிலையே அவனுக்கு கொடுப்பார் என திட்டமாய் நமபுகிறேன்' என்று ஆவிக்குரிய கூர்மையோடு பிரசங்கித்தார்.

.

அவரது 53ஆவது வயதில் சீன அரசின் பொய்யான குற்றச்சாட்டினால் சிறையில்அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டடிருந்த அறையின்நீளம் ஒன்பது அடி, அகலம் 45 அடிகளாகும். அந்த அறை எலிகள், கரப்பான் பூச்சிகள், தௌ;ளுப்பூச்சிகள், மூட்டைப்பூச்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது, அந்த சிறிய இறுக்கமான அறையில் பதினைந்து ஆண்டு காலம் வௌ;வெறு சீதோஷண் நிலையில் அவர் எப்படி தனது நாட்களை செலவிட்டிருப்பார் என்பதை நினைக்கையில் நம் கண்கள் கண்ணீரால் நிரம்பாமல் இருக்க முடியாது. அந்த அறையின் கம்பிகளை அவரது மெலிந்த கரங்களால் பிடித்து சாய்ந்துக் கொள்வதைத் தவிர வேறு சரீர இளைப்பாறுதல் ஏதும் அவருக்கு இல்லை. பின் அந்த சிறை அறையிலேயே மரணமடைந்து விட்டார். மரிக்கும்போது அவருடன் உறவினர்களோ, நண்பர்களோ யாருமே இல்லை. அவர் மரித்தவுடன், அவரது சரீரத்தை எரித்து விட்டார்கள். அவருடைய மனைவி ஆறுமாத்திற்கு முன் மரித்துவிட்டபடியால், மனைவியின் மூத்த சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து அவருடைய சாம்பலை எடுத்துக் கொண்டுபோய், அவருடைய மனைவியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்தார்.

.

வாச்மன் நீ அவர்கள் மரித்தபோது, 1952-ம் ஆண்டு, அநேக எதிர்ப்புகளின் மத்தியிலும், 400 சபைகள் சீனாவில் உருவாக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவ வாழ்க்கை சொகுசு வாழ்க்கையல்ல, அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார் என்று வேத வசனம் கூறுகிறது.

.

வாச்மேன்நீ இந்த பாடுகள் பட்டபடியினால்தானே இன்றைய நாளில் சீனா தேசத்திலுள்ள சபைகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. இன்றைய நாட்களில், நம் நாட்டில், வேதனை இல்லாத பெருக்கம், பாடுகள் இல்லாத பரவச நிலை என்று சபைகள் இருப்பதால் அல்லவா சபைகளில் ஆத்தும பாரம் இல்லை! ஆத்துமாக்கள் பெருகவில்லை!

.

நம் இந்திய தேசம் இயேசுவின் தேசமாக மாற வேண்டும் என்று வாஞ்சிக்கிறோம். அதைக் குறித்து பேசுகிறோம், ஜெபிக்கிறோம். ஆனால் அதற்காக பாடுபடவும், தியாகம் செய்யவும் நாம் முன்வருவதில்லை. கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகளில் சோர்ந்து போய், இது எனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விடுகிறோம்.

.

கிறிஸ்துவுக்காக பாடுகளை சகிக்கும்போது, ஒரு நாள் அதன் கனியை நாம் புசிக்கத்தான் போகிறோம். அவரோடுக்கூட ஆளுகை செய்யும் கிருபையை அவர் கொடுப்பார். ஆனால் நாம் அவரை மறுதலித்தால் அவரும் நம்மை மறுதலிப்பார்.

.

பாடுகளின் வழியாக சபை பெருகும்படியாக நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். என்ன நிந்தை வந்தாலும், பாடுகள் வந்தாலும் முறுமுறுக்காமல், கர்த்தருக்காக சகிப்போம். கர்த்தர் சபைகளை பெருகச் செய்வார். ஆமென் அல்லேலூயா!
http://www.anudhinamanna.net/index.php?option=com_acymailing&ctrl=archive&task=view&listid=2--&mailid=3751--7314&Itemid=56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக